கெட் டு கதர் சந்தோஷங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்

அன்பான தோழர், தோழிகளே நம் அறுசுவையில் கிட்டத்தட்ட அனைவரும் கோவை கெட் டு கதரில் உள்ளனர், அட்மின் அண்ணாவும்தான். அவர்கள் வரும் போது கலைப்பாக இருப்பார்கள். இந்த இழையில் அவர்கள் தங்களின் இனிமையான, மகிழ்ச்சியான தருணங்கள் நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.(ஆர்வமாக உள்ளோம் அதனால்தான்),

ஹாய் சுகந்தி வந்தாச்சா? நீங்கள் சொல்வத பார்த்தா நல்லா என்ஜாய் பண்ணீங்க போல. கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதலில் யார் சுகந்தி வந்தாங்க? நீங்க தானா இல்ல செளமியன் சாரா? போட்டோஸ்லாம் அட்மின் சார் போடுவாங்களா? யாரெல்லாம் வரல பவி வந்தாங்களா?

இன்னக்கி புல்லா உங்கள போட்டு கேள்வி மேல கேள்வி கேட்டு தொலைச்சு எடுத்துடுவேன் இந்த அன்பு தொல்லைய பொருத்துக்கோங்க ப்ளீஸ்.

ஒரு வழியா அறிமுகம் முடிஞ்ச பின்னாடி, அறுசுவை யால் அடைந்த நன்மை பற்றி பேசினோம், அறுசுவை ல எது ரொம்ப நல்ல இருக்கு, இன்னும் என்ன என்ன மாத்தலாம், இப்படி நிறைய ஐடியா பத்தி பேசினோம்..... இமா சார்பா வந்த சத்யா நிறைய points சொன்னங்க, இன்னும் நிறையப்பேர் அவவங்க கருத்துகளை அள்ளி வீசுனாங்க. நானும் ஏதோ கொஞ்சம் பேசினேன். சௌமியன் ரொம்ப நல்ல பேசினார், விமலா கந்தசாமி மேடம் நல்ல பேசினாங்க.

அதுக்கு அப்பறம் பட்டி தொடங்குச்சு. கல்யாணத்துக்கு அப்பறம் கஷ்ட படறது, ஆண்களா ? பெண்களா?? ஆண்கள் தான் நு பெண்கள் பேசணும், பெண்கள் தான் நு ஆண்கள் பேசணும். கொஞ்சம் கஷ்டமான தலைப்பு தான? நிறைய பொய் பொய் ஹ சொல்லி, அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசினோம். வேற வழி இல்லையே!!!!!!

அவங்களும் அப்படி தான், ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்ட பட்டு, வராத பொய்ய வரவெச்சு, ரொம்ப கஷ்ட பட்டுட்டாங்க. சிலருக்கு அந்த பொய் கூட சொல்ல வரல.... ஆனால், அவங்க பக்கம் நாகை சிவா பயங்கர சப்போர்ட், நம்ம பக்கம் விமலா மேடம் இருந்தாங்க. செல்வி அம்மா தான் judge

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நீங்க சௌமியன் சாரோட மனைவிக்கு மெகந்தி போட்டீங்களா?

முதல்ல அதச்சொல்லுங்கபா எல்லாரும் அதுக்குதான் வெயிட்டிங்க்;-)

Don't Worry Be Happy.

//இமா சார்பா வந்த சத்யா நிறைய points சொன்னங்க,// முதல்ல... அவங்க என் சார்பா வரல. தன் சார்பாத்தான் வந்தாங்க என்கிற உண்மையை இங்க சொல்லிடுறேன். ;) அவங்க என் சார்பா வரலைன்னாலும் நிறைய பாயின்ட்ஸ் சொல்வாங்க.

‍- இமா க்றிஸ்

சுகந்தி கொண்டு வந்த கைப்பையை திறக்கவே இல்லைஅப்புறம் எங்க

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஆமாம், முதலில் அவங்க நியுஸ்லாந்தில் இருந்து ஒருத்தர் கெட் டு கெதர் வராங்கன்னு அட்மின் அண்ணா சொன்னதற்கு அப்புறம்தானே உங்களுக்கே அவங்கள தெரியும். அதனால சத்யா அவங்க சார்பாதான் வந்திருப்பாங்க;-)

Don't Worry Be Happy.

மஞ்சுளா ,இது அடுக்குமா?? நீங்களே சொல்லுங்க, நேரம் இருந்துச்சா??

இல்ல ஜெயா. போடறக்கு உண்மைய நேரமே இல்ல . எல்லார் கூடும் பேசறக்கே நேரம் பத்தல. பேசி பேசி வை வலுச்சதுது தான் மிச்சம்.

நான் தான் முதல்ல வந்தேன், வந்து reception ல கேட்டுட்டு திரும்புனா, தவமணி அண்ணா,அவர் கூடவே சௌமியன் வந்தாரு,அப்பறம் சுஜாதா,மஞ்சுளா அப்படியே லைன் ஹ எல்லாரும் வந்தாச்சு

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இல்ல இமா, நீங்க தான் ஒரு thread ல அப்படி சொன்னீங்க. அதன் நானும் சொல்லிட்டேன்.
\\ஹும்!! எங்கேங்க! பாபுசார் வீசாவுக்கு ரெகமண்ட் பண்ண மாட்டேன்னுட்டாங்க. ;) அதனால என்னோட ரெப்ரசென்டேடிவ் ஒருத்தரை அவங்க குடும்பத்தோட அனுப்பி வைக்கிறேன். அவங்க கூட பேசினா என்னோட பேசின மாதிரி. ;)) நல்லா கவனிச்சுக்கோங்க. ;)//

சாரி பா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அந்த ;) & ;)) கண்ணுல படவே இல்லையா பா? ;))))
இமா இப்புடி எத்தனையோ சொல்வாங்க. இப்படித்தான் நம்பணும் சுகி. நல்ல பொண்ணு. ;))

‍- இமா க்றிஸ்

சுகந்தி உங்களை விட நாகை சிவா ஒரு வயது இளையவர்தானே?.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்