கெட் டு கதர் சந்தோஷங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்

அன்பான தோழர், தோழிகளே நம் அறுசுவையில் கிட்டத்தட்ட அனைவரும் கோவை கெட் டு கதரில் உள்ளனர், அட்மின் அண்ணாவும்தான். அவர்கள் வரும் போது கலைப்பாக இருப்பார்கள். இந்த இழையில் அவர்கள் தங்களின் இனிமையான, மகிழ்ச்சியான தருணங்கள் நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.(ஆர்வமாக உள்ளோம் அதனால்தான்),

சுகந்தி... என்னை நல்லவ...ன்னு சொல்லிட்டீங்களே!. அவ்வ்வ்வ்...

அன்புடன்
THAVAM

என்ன அண்ணா, இப்படி சொல்லிடீங்க? என்னையே ஒரு ஜீவன் (இமா) நல்ல பொண்ணு நு சொல்லிட்டாங்க!!!!! அப்ப நீங்க ரொம்ப நல்லவர் தான?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகந்தி ஆமா நீங்க சமத்து பெண் தான்.

கவிஞர் சௌமியன் அவர்களே சொல்லிவிட்ட பின்பு உங்களுக்கு சந்தேகம் வரக்கூடாது சுகந்தி. நீங்கள் ரொம்ப நல்ல பெண்தான். அமைதியான டைப்தான்

அன்புடன்
THAVAM

சுகந்தி உங்கள் வேலைக்கு நடுவிலும் அப்பப்போ வந்து கொஞ்சம் கொஞ்சமாக அங்கு நடந்தவற்றை பதிவு போட்டுக்கொண்டுதான் இருக்கின்றீகள்.
மிகவும் சந்தோசம்.

எல்லாரும் நல்லா என் ஜாய் பண்ணினீங்கனு பதிவு பார்த்தாலே தெரியுது.

போட்டோ எல்லாம் எடுத்தீர்கள் தானே.

பாபுசார் போட்டோக்களையும் போட்டு விடுங்களேன் நாங்களும் பாப்போமேல்லே.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் சுகந்தி...,ம்ம்ம் எல்லாம் ஜாலியா மீட் பண்ணிடு வந்திருக்கீங்க...
நீங்கள் ஒவ்வொன்றாக விவரிக்கும் பொழுது கண் முன்னே காட்சிகளாக வந்து போகின்றன.

எல்லோரும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்கிட்டீங்களா...?பாபு அண்ணா வெளியிடுவார் பார்க்கணும்.அதில் யார் யார் எங்கே இருக்கீங்கன்னு சொல்லுங்க.நேரில் உங்களையெல்லாம் பார்க்கவில்லையென்றாலும்,ஃபோட்டோவிலாவது பார்க்கலாம் அல்லவா...?

விளையாட்டு போட்டியெல்லாம் நடந்து இருக்கு.ச்ச...நாங்கள் எல்லாம் மிஸ் பண்ணிட்டோம்.கேட்க்கும் போதே ஜாலியா இருக்கே....உங்கள் எல்லோருக்கும் அன்றைய நாள் மறக்க முடியாத நாளாக இருக்குமல்லவா...?

நீங்கள் வந்து அன்றைய பொழுதை எங்களுக்காக விவரித்ததற்க்கு நன்றி சுகந்தி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சுகந்தி இன்று நிறைய பாராட்டுக்கள் உங்களுக்கு .திருஷ்டி சுற்றி போடுங்கள்.சௌமியன்.

அட்மின் சார் கெட் டு kayther போட்டோஸ் போடுங்க சார் எல்லாரும் ஆவலாக இருக்கிறோம் சௌமியன்

கண்டிப்பா சீதாம்மா, என் கல்யாணத்தில் கண்டிப்பா ”அறுசுவை கச்சேரி” தான், இப்பவே ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அட்வான்ஸா அழைச்சிடறேன், கண்டிப்பா எல்லாரும் வந்திடுங்க. அப்புறமா மேரேஜ் ஃபிக்ஸ் ஆன பிறகு கூப்பிடறேன் :))

அன்புடன்
பவித்ரா

என்ன ஆச்சுபா இன்னும் ஆபிஸ்ல வேலை செயறமாதிரியே எவ்வளவு நேரம்தான் நடிப்பீங்க சீக்கிரம் அறுசுவைக்கு வாங்கோஓஓஓ.......

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்