கெட் டு கதர் சந்தோஷங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்

அன்பான தோழர், தோழிகளே நம் அறுசுவையில் கிட்டத்தட்ட அனைவரும் கோவை கெட் டு கதரில் உள்ளனர், அட்மின் அண்ணாவும்தான். அவர்கள் வரும் போது கலைப்பாக இருப்பார்கள். இந்த இழையில் அவர்கள் தங்களின் இனிமையான, மகிழ்ச்சியான தருணங்கள் நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.(ஆர்வமாக உள்ளோம் அதனால்தான்),

சுகந்தி நீங்க எல்லாரும் சொல்லி இருக்கறத பார்த்த ரொம்பபபப என்ஜாய் பண்ணீங்கனு தெரியுது. அடுத்த கெட் டு கெதரில் நிச்சயம் நான் கலந்துக்கனும்னு ஆசைபடுறேன். சுகந்தி வேலைகளுக்கு நடுவிலும் இப்படு எங்களுக்கு அழகான வர்ணனை கொடுத்து இருக்கீங்க ரொம்ப நன்றி.

வந்துட்டேன் ஜெயா.... அண்ணா போட்டோ எப்ப போஸ்ட் பண்ணுவாருனு, பாத்துக்கிட்டே இருக்கேன்....... கெட் டு கெதர் ல பள்ளி காலத்துக்கே கூட்டிட்டு போய்டுச்சு. தேன் மிட்டாய், எலந்த உரண்டை, தராசு மிட்டாய், எலந்த வடை ,குச்சி மிட்டாய், அல்வா, இன்னும் ஒன்னு தந்தாரு(*பேரு மறந்துட்டேன்), சீட்டு ஒரசி விளையாட்டு, நாங்க எல்லாம் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்ல.

ஆனாலும் ஒரே ஒரு குறை மட்டும் தான். குட்டீஸ் டான்ஸ் மட்டும் இருந்து இருந்தா, இன்னும் கலகல ஹ இருந்து இருக்கும்......

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

யாழினி, நீங்க என்ன நன்றி எல்லாம் சொல்றீங்க??? அது எல்லாம் வேண்டாம் ப. கொஞ்ச பேர தான் பாக்க முடுஞ்சுதுங்கறது, மனசுக்கு ரொம்ப கஷ்டமா போய்டுச்சு...... சண்டே முடுஞ்சு போறக்கு யாருக்குமே மனசே இல்ல.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எல்லாரும் நல்லாருக்கீங்களா? என்னால அறுசுவைக்கு சரியா வரமுடியாத்தால பதிவுகள் குடுக்க முடியலை மன்னிக்கவும். எல்லா பதிவையும் இப்பதான் படிச்சேன். நானும் இருந்துருந்தா இன்னும் நிறைய பதிவுகள் குடுத்துருப்பேன் என்ன பன்னரது என்னால வரமுடிறதில்லை. நிரஞ்ஜனாவே கேட்டுட்டே இருந்தா அந்த அக்கா எங்க எங்கன்னு அவளுக்கு பேரு சரியா நினைவில்ல போலருக்கு அதான் அப்படி கேட்டுட்டு இருந்தா... பாரதி குடுத்த வாட்சை இன்னும் பத்திரமா கைல கட்டிக்கறா, தூங்கும் போது மட்டும் தான் கீழ விடறா எந்திரிச்சன்ன வாட்ச் எங்கம்மான்னு தான் கேக்கறா... ஹாஹாஹா.....

எல்லாரும் சுகந்தியை மட்டும் நல்ல அமைதியான சமத்துன்னு சொல்லிருக்கீங்களே என்னை யாருமே சொல்லலயே??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

அறுசுவை நிறைகுறைகளை பேசிட்டுருக்கும் போது என் சமீபத்திய இழை அதான் நாட்டு வெடிகுண்டை வெச்சு எல்லாரும் என்னை செம ஓட்டு ஓட்டிட்டாங்க. நாகை சிவா அண்ணா இழை பெயரை அப்படி வெச்சதைவிட குண்டு ஒன்னு வெச்சுருக்கேன்னு வெசுசுருக்கலாம்லன்னு சொல்லி ஒரே கிண்டல். தவமணி அண்ணா நீங்களே வெச்சுட்டு இப்படில்லாம் பன்னலாமான்னு ஒரே பெரிய குண்டை தூக்கி போட்டுட்டாங்க. தீபாவளிக்கு இப்படில்லாம் வீட்லயே தயாரிக்கறீங்களான்னு செம லூட்டீஈஈஈஈஈஈஈஈஈஈஈ.....

அட்மின் அண்ணா என்னை யார்ட்டல்லாம் சண்டை போட்டீங்கன்னு கேட்டு அங்க மாட்டி விட பாத்தாரு நல்ல வேளை எப்டியோ எதையும் சொல்லாம மழுப்பி தப்பிச்சுட்டேன். ஹீஹீஹீ...

சுகந்தி எந்த மிட்டாயுமே சாப்டல சும்மா புளுகுறாங்க பார்சல் தான் பன்னிட்டாங்க. நான் தான் அதை எல்லாமே ஒன்னு விடாம சாப்டேன் அங்கயே, அதுவும் இலந்தைவடை நான் ரெண்டு எடுத்துக்கிட்டேன் அட்மின் அண்ணா இன்னும் கூட இருக்கு எடுத்துக்கங்கன்னு சொன்னாரு நாந்தான் இல்லை போதும்னு சொல்லிட்டேன் ம் சொல்லாமலே இருந்துருக்கலாம். எனக்கு இலந்தைவடை ரொம்ப பிடிக்கும் அதான்!!!!!

சுரண்டல் விளையாட்டுல தான் எதுமே எங்களுக்கு கிடைக்கல சுகந்திதான் சொல்லுச்சு கடைசில இருக்கறதுல ஒன்னுமே இருக்காது நடுவில இருக்கறதா எடுத்துக்கலாம்னு ஆனா ஒன்னுமே இல்லை சுகந்திக்கு நிறைய கிடைச்சுது என்னமோ பன்னிருச்சு சுகந்திதான்... அப்டிதான சுகந்தி???

நாங்க ரெண்டு பேரும்தான் ஒன்னா உக்காந்து செம லூட்டி அடிச்சோம். எனக்கு சூப்பே கிடைக்கலை. அதுதான் பெரிய குறை அட்மின் அண்ணாட்ட சொல்லி அடுத்த கெட்டூகெதர்ல ஒரு சின்ன அண்டா புல்லா முதல்லயே வாங்கி வெச்சுக்கனும்.

அப்பறம் கெட்டூகெதர் முடிஞ்சு போனது எங்களுக்கு செம சங்கடமா இருந்துச்சு அதான் முடிஞ்சு எல்லாரும் கெளம்பறப்ப செம மழை சோ கொஞ்ச நேரம் எல்லாருமே இருந்து அப்பறமா தான் கிளம்புனோம்.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

அட்மின் அண்ணா எப்ப போட்டோஸ்லாம் போடுவீங்க எனக்குமே பாக்கனும்னு ஆசையா இருக்கு சீக்கிரமா போடுங்களேன் ப்ளீஸ்....

நாகைசிவா அண்ணாதான் எல்லாருக்குமே போட்டோகிராபர் ஹாஹாஹா. ரெண்டு கைலயும் நாளு கேமராவை மாட்டிக்கிட்டு ஒன்னொன்னா மாத்தி மாத்தி எடுத்தாரு. போஸ் குடுத்த எங்களுக்கு எப்படா முடியும்னு ஆய்ருச்சு. கடைசியா குருப் போட்டோக்கு வந்து நின்ன அட்மின் அண்ணா என்னால ஆர்ட்டிஃபிஷியலா சிரிக்க முடில நாங்க எப்போமே சிரிச்ச முகம்தான்னு ஒரு பஞ்ச் சொன்னாரு அதைக்கேட்டன்னதான் நாங்க எல்லாருமே செமயா சிரிச்சு ஒரு போஸ் குடுத்தோம்...

போட்டோ எடுத்த மத்தவங்களாவது என் மெயில் ஐடிக்கு போட்டோ அனுப்பி வைங்களேன் ப்ளீஸ்.....

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஹாய் லதா நல்லா என்ஜாய் பண்ணீங்களா கெட் டு கெதர? எல்லாரும் நிரஞ்சனாவ பத்தி தான் சொல்லி இருக்காங்க. ரொம்ப எல்லாரையும் அட்ராக்ட் பண்ணிட்டாலா? குழந்தைகளும் நல்லா என்ஜாய் பண்ணாங்கனு சொல்லுங்க. எல்லா குட்டிசையும் ஒரு டான்ஸ் ஆட விட்டு இருக்களாமே இன்னும் ஜாலியா இருந்துருக்கும். அன்தாக்சரிலாம் விளையாண்டிங்களா லதா?

நல்லாருக்கீங்களா? ரொம்ப என் ஜாய் பன்னினோம். ஜாலியா இருந்துச்சு. டான்ஸ் லாம் ஆடவெக்கலை அவ முதல்லயே செம ஆட்டம் போட்டுட்டு தான் இருந்தா ஹாஹாஹா. அவளுக்கும் செம ஜாலியா இருந்துச்சு. அந்தாக்சரி விளையாடலைங்க. எல்லாரும் அந்த விஷயத்துல தப்பிச்சுட்டாங்க..... அடுத்தமுறை கண்டிப்பா விடறதில்லை ஒரு வழி ஆக்கிருவோம்ல??? ஹாஹாஹா.

இப்ப நான் கிளம்பறேன் வினீக்கு சிஸ் வேணுமாம் இப்பவே திட்ட ஆரம்பிச்சுட்டாங்க சோ நான் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... டாட்டா. மிச்சம் நாளைக்கு வந்து சொல்றேன்.ஓகே.

மீண்டும் பேசலாம்.....

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

உங்க பதிவு படிக்கும்போது அங்கேயே இருந்த ஃபீல் வருதுப்பா. ஒவ்வொருத்தர் சொன்னதையும் இன்னமும் மறக்காம அழகா சொல்லியிருக்கீங்க. சீக்கிரம் நாளைக்கு நேரத்திலேயே சிஸ்டம் வாங்கி சொல்ல வந்துடுங்க சரியா;-)

Don't Worry Be Happy.

ஆமா..............வந்தவர்களைப்பற்றி எல்லாம் சொன்னீர்கள், பாப்பியைப் பற்றி சொல்ல வில்லையே.........அவங்கள் வரல்லையா?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி, யாருப்பா அந்த பாப்பி??? எனக்கு தெரியலையே!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்