ஹாய் தோழிகளே எல்லோரும் நலமா? பேசி ரொம்ப நாள் ஆயிடுச்சி நான் சுதா.
திருமணம் முடிந்து 2 1/2 வருடம் ஆகிறது.1 வருடத்தில் கருவுற்றேன் ஆனால் அந்த குழந்தைக்கு இதய துடிப்பு கூட வரவில்லை 3 மாதத்தில் தானாக கலைந்து விட்டது.உடனே இந்தியா சென்று check செய்து பார்த்தேன் எல்லாம் நார்மல் என்று சொன்னார்கள்.பிறகு 6 மாதம் கழித்து சவுதி வரும் போது check செய்தேன் pcos பெரிதாக இருப்பதாக சொன்னார்கள்.மாத்திரை வாங்கி வந்து 3 மாதம் சாப்பிட்டேன்.
பிறகு 6 மாதம் கழித்து போன மாதம் இங்கு check செய்தேன் நார்மல்.15,17,20 நாட்களில் பாலிக்கிள் study செய்தார்கள்.கரு முட்டை நார்மல்.ஆனால் 20 வது நாள் scanல் P.O.D free fluid present என்று வந்தது.ஆனால் அதை பற்றி dr எதும் சொல்லவில்லை. metformin,Revalon,Dophaston ஆகிய மாத்திரை கொடுத்தார்கள்.இந்த மாதம் pregnant ஆக வில்லை என்றால் period in 2 வது நாள் வர சொன்னார்கள் hormone injection போட. free fluid என்றால் என்ன? அதனால் எதாவது பிரச்சனையா? எனக்கு irregular period வேறு.ஒரு 3,4 மாதமாக brown colourல் 2,3 நாட்கள் லேசாக தான் bleeding படுகிறது.இன்று 29நாட்கள் ஆகிறது கர்ப்பத்திற்கான அரிகுறிகள் தெரியவில்லை.so அடுத்த மாதம் injection எடுக்க வேண்டும் அதானால் எதாவது பிரச்சனை வருமா?
ரொம்ப விரிவாக எழுதி விட்டேன் மன்னிக்கவும்.
hello friends pls answer me
hello friends pls answer me pa
1984-1975
எனக்கு பதில் தெரியலப்பா! கூகுளில் சர்ச் பண்ணி பார்த்தேன். சிறிய அளவில் ஃப்ரீ ஃப்ளூயிட் இருந்தால் பிரச்சினை இல்லை ஓவுல்யூஷனின் அறிகுறின்னு போட்டிருக்கு. மருத்துவரிடமே கேளுங்களேன்பா! சந்தேகம் இல்லாம இருக்கும் இல்லையா
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!