நான்ஸ்டிக் தவாவின் அபாயம்

நான்ஸ்டிக் தாக்களில் வழவழப்புக்காக ரசாயன்ப்பூச்சுக்கம் பூசப்படுகின்றன.அவை குழந்தைகளின் கொழுப்புச்சத்து விகிதம் அதிகரிப்பில் மிகுந்த பங்குவகிக்கின்றன.
இந்த பூச்சுக்கள் உணவுப் பொருட்களை சூடாக்கும்போது ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

மனித உடலில் கொழுப்புச்சத்து மாற்றத்திற்கு"பர்புளுரோ ஆக்டானிக் அமிலம்(பி.எப்.ஒ.ஏ)மற்றும் பர்புளுரோ ஆக்னேட் சல்போனேட்(பி.எப்.ஒ.எஸ்)"பங்குவகிக்கின்றன என்று மேற்கு வெர்ஜீனிய பல்கழைக்கழகம் ஆய்வில் கூறியுள்ளது.

குடிதண்ணீர்,தூசு,உணவு பேக்கிங்கவர்கள்,தாய்ப்பால்,மைக்ரோவேவில் தயாராகும் பாப்கான்,காற்று மற்றும் நான்ஸ்டிக் சாதனங்களில் தயாராகும் உணவுமூலம் நமது உடலினுல் செல்கின்றன.
இந்த ரசாயனங்கள் நமது உடலில் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பருவ வயதினரின் உடலில் கொழுப்புச்சத்து விகிதத்தில் அதிக மாற்றாங்களை நிகழ்த்துவதாக டாக்டர்கள் கூருகின்றனர்.
அடிப்படைக் கொழுப்புசத்து விகிதத்தைவிட இவ்வகை ரசாயனங்களினால் 4.6புள்ளிகள் அதிகமாகும்.

Thanks for your information

very good information

தோழிகளே,
பல நாட்களாகவே இந்த சந்தேகம், சரி, இது குறித்து ஏதாவது இருக்கான்னு தேடி பார்த்தப்போ இது கிடைத்தது. அப்ப, உண்மையாலுமே நான்ஸ்டிக் பாத்திரங்கள் உபயோகப்படுத்துவது உடலுக்கு தீங்கா?!!

ஏதோ எண்ணைய் கம்மியா போட்டு, நல்லா ஒட்டாமல் வருதே என்ற காரணத்தால், நான் நிறைய நான்ஸ்டிக் பாத்திரங்கள் வாங்கி உபயோகத்தில் வைத்திருக்கிறேன். இப்ப சமீப காலமா, ஒருத்தர் இரண்டு பேர் நல்லதில்லை என்று சொல்லக்கேட்கவும், கொஞ்சம் நான்ஸ்ட்டிக் பாத்திரத்தை தவிக்க முயன்று வருகிறேன். நிறைய ரிஸர்ச் பண்ண பண்ண குழப்பம்தான் :(

தோழிகளே, எல்லாரும் வந்து, உங்களோட கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க, ப்ளீஸ்.

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்