வேர்க்கடலை தேங்காய் பர்பி.

தேதி: November 2, 2010

பரிமாறும் அளவு: 10 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

வேர்க்கடலை - 100 கிராம்
துருவிய தேங்காய் - ஒருமூடி
சர்க்கரை - 200 கிராம்
வெண்ணை - 100 கிராம்
கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 3


 

வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்து தோல் நீக்கவும்.
தேங்காயைத்துருவி ஃப்ரீசரில் அரைமணி நேரம் வைக்கவும்.
கடலையை மிக்சியில் கரகரப்பாக பொடிக்கவும்.
ஒருகடாயில் சர்க்கரையைப்போட்டு மூழ்கும் அளவுதண்ணீர் ஊற்றவும்
சர்க்கரை கொதிக்க ஆரம்பித்ததும்கெட்டி பாகுபதம்வரும் பக்குவத்தில்தேங்காய்ப்பூ, வேர்க்கடலைப்பொடிசேர்த்து க்கைவிடாமல் கிளறவும்.
கெட்டியாக திரண்டுவரும் சமயம் கடலைமாவைத்தூவி கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்சமயம் ஏலக்காய்ப்பொடி தூவி இறக்கி நெய்தடவியதாம்பாளத்தில் கொட்டி ஆறிய பின்பு துண்டுகள் போடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் கோமு எப்படி இருக்கீங்க...?
வேர்க்கடலை சேர்த்து புதுவிதமா பர்ஃபி செய்து இருக்கீங்க.
நிச்சயம் நன்றாக இருக்கும்னு நினைக்கிறேன்.
வெண்ணெயை எப்போது சேர்க்க வேண்டும் என்பதை இதில் குறிப்பிட வில்லையே...தெரிவித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.
செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் கோமு.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வருகைக்கு நன்றி. கடலை மாவு சேர்க்கும் முன்பு, முதலில் வெண்ணைபோடனும்.
சொல்ல மறந்துட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றிம்மா. செய்துபாருங்க.

கோமு மேடம்,

தீபாவளி ஸ்வீட் இது தான்,கண்டிப்பாக செய்து பார்கிறேன் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வருகைக்கு நன்றி. செய்துபாருங்க.