அரட்டை அரங்கம் - 62

இங்க வந்து தொடருங்கள் உங்கள் (பயனுள்ள)அரட்டையை:)) முந்தின இழை 180ஐ தாண்டியதால் புதுசு போட்டேன்:))

அப்புறம் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)) பட்டாசு வெடிக்கும் போது ரொம்ப கவனமா இருங்க, குழந்தைகளை பட்டாசு வெடிக்க தனியா விடாதீங்க, உங்க கண்பார்வையிலேயே இருக்கட்டும்:))

புதுசு கண்ணா புதுசு, எல்லாரும் இங்க வாங்க, அது நிறைய போய்டுத்து தோழிகளே, இங்க வந்து தொடருங்க உங்க கச்சேரியை:)

அன்புடன்
பவித்ரா

எல்லாரும் இங்க வாங்க ..வாங்க...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

பவிஎன்னடா செய்ற தீபாவளி டிரஸ் எடுத்தாச்சா என்ன எடுத்தே கிரிட்டிங்கார்டு அனுப்பி இருந்த நல்லா இருந்தது

பவி புது த்ரெட் நீங்களே ஆரம்பிச்சிட்டீங்களா ஒகே. இதுலேயே (பயனுள்ள) அரட்டைய ஆரம்பிக்கலாம். உங்களுக்கு கோல்டு பரவாயில்லையா.

மீரா எப்படி இருக்கீங்க நான் நலம்.

லெஷ்மி நேத்திக்கும் முதல் நாள் இரண்டு விதமான உருண்டைகளும் சீப்பு முறுக்கும் செய்தோம் இன்னக்கி முறுக்கு செய்யனும் சாயங்காலம்.

பாத்திமாம்மா ரொம்ப நன்றிமா என் குரல் கேட்டு வந்துட்டீங்களா நன்றிமா.

பவி எத்தனை நாள் லீவு உங்களுக்கு தீபாவளிக்கு

பாத்திமாம்மா,லஷ்மி,வினோ,யாழ்,பவி,மீரு எல்லாருக்கும் ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓ.... போட்டு அரட்டைய தொடங்குறேன். யார் என்ன பலகாரம் பண்ணாலும், முக்கியமா ப்ரெஷ்ஷா பண்ணதா இருக்கனும். ஒரு பார்சல் காங்கோவுக்கு வரனும். இல்லன்னா என்ன நடக்கும் தெரியுமா?....

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என்ன நடக்கும் அதையும் செல்லுங்க..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

கல்ப்ஸ் தெரியும். நாங்க புதுசு அனுப்புலேனா, நீங்க பஞ்சுடைந்த பழச அனுப்புவீங்க சரித்தானே. தீபாவளிக்கு சாமி கும்பிட்டதும் முதல் வேலையா காங்கோவுக்கு ஒரு பார்சல்.

யாழ், நல்ல நாள் வருது. என்னைக் கண்டுபிடிச்சி தர்றவங்களுக்கு என்னோட பிரியாணிய கொடுத்து கொடுமை படுத்த விரும்பல. அதான் நானே சரண்டர் ஆய்ட்டேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ் என்னபா இவ்வளவு லேட்டா வர்றீங்க. நேத்து செய்ததும் முதல் பார்சல் உங்களுக்கு தான் அனுப்பி இருக்கேன். உருண்டை எல்லாம் உடைஞ்சு தூளாதான் வந்து இருக்கும்னு நினைக்கிறேன் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோங்க ப்ளீஸ்.

மேலும் சில பதிவுகள்