ரிப்பன் பக்கோடா

தேதி: November 3, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (11 votes)

 

பச்சரிசி மாவு - 2 டம்ளர்
கடலை மாவு - 2 டம்ளர்
பொட்டுக்கடலை - ஒரு டம்ளர்
மிளகாய்ப் பொடி - 2 1/2 தேக்கரண்டி
பொடி உப்பு(டேபிள் சால்ட்) - 1 1/4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
ரீஃபைண்ட் எண்ணெய் - ஒரு லிட்டர்


 

பச்சரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை முதலியவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாகத் திரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பச்சரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள் பொடி எல்லாவற்றையும் போடவும்.
எல்லாவற்றையும் நன்கு கலந்து, தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
உரலில் ரிப்பன் பக்கோடா அச்சைப் போட்டு, அதனுள் மாவை வைத்து காய்ந்த எண்ணெயில் பிழியவும்.
சுவையான ரிப்பன் பக்கோடா தயார்.

படம் 4ல் உள்ளபடி மாவு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒவ்வொரு முறை உரலில் மாவு வைக்கும்போதும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நெகிழ்வான பதத்தில் உரலில் வைத்துப் பிழியவும். முதலிலேயே தண்ணீர் நிறைய ஊற்றிப் பிசைந்தால், மாவு புளித்து விடும். சூடான எண்ணெயில், நேராக உரலை வைத்துப் பிழியும்போது, கைகளில் ஆவி அடிக்கும். அதனால், மாவு பிழியும் போது, அடுப்புத் தீயை, தணித்துக் கொள்ளவும். கையை சற்று உயரத்தில் வைத்து, உரலை கவனமாகப் பிடித்துக் கொண்டு, பிழியவும். மாவைப் பிழிந்த பிறகு, தீயை உயர்த்திக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான குறிப்பு கொடுத்திருக்கீங்க. பண்டிகை சமயத்தில் தேவைபடும் குறிப்பு!! கண்டிப்பா ட்ரை பண்ணி பார்த்திட வேண்டியது. எத்தனைய ட்ரை பண்றதுன்னு தான் ஒண்ணும் புரியலை:)) வாழ்த்துக்கள் சீதாம்மா:))

அன்புடன்
பவித்ரா

நானும் ரிப்பன் பக்கோடா இப்படித்தான் செய்வேன்.ஆனா பொட்டுக்கடலை சேர்க்காம செய்வேன். தீபாவளி சமயம் ஒரே ஸ்வீட்டா சாப்பிட்டு ஏதானும்
காரம் சாப்பிடனும்போல இருக்குmம். அதற்கு இந்த பக்கோடா, காரசாரமா
கிரிஸ்பியா நல்லாவே இருக்கும்.

தீபாவளி சமயம் சூப்பரா ரிப்பன் பக்கோடா குறிப்பு கொடுத்திருக்கீங்க செஞ்சு அசத்திட்டு வீட்டில என்ன சொன்னாங்கன்னு மறுபடியும் பதிவு போடறேன்;-)

Don't Worry Be Happy.

சீதாலக்ஷ்மி அம்மா,
தீபாவளிப் பலகாரமா?பார்க்கவே சாப்பிட ஆசையா இருக்கு.எனக்கு இதெல்லாம் செய்யவே தெரியாது.இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து தான் ட்ரை பண்ணனும்.குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

சீதா! ரிப்பன் பக்கோடா
மிகவும் நன்றாக செய்து காட்டியுள்ளீர்கள், செய்து பார்த்து விட்டு சொல்கின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பவி,

டைம் இருக்குமா பாருங்க, இல்லன்னா தீபாவளிக்கப்புறம் ஒரு நாள் சாவகாசமாக செய்து பாருங்க, சரியா. நாம பலகாரம் செய்யும் நாளெல்லாம் நமக்கு தீபாவளிதான்.
உழக்கு - ஸ்க்ரூ டைப் என்றால், மெலிதான ஒற்றை வரி இருக்கும் தட்டு போட்டு செய்யுங்க. ஹிண்டாலியம் அல்லது பித்தளை(பழைய மாடல்) உழக்கு என்றால் அதிலேயே 2 வரி உள்ள தட்டு இருக்கும்.

கோமு,

ஸ்வீட்டுடன் ஒரு காரம்(தேங்குழல், மிக்ஸர் இந்த மாதிரி) ஏதாவது ஒண்ணு செய்யறது வழக்கம். பொரிகடலை மாவு சேத்து செய்தால் கொஞ்சம் கரகரப்பாக, நல்லா இருக்கு. வெறும் கடலை மாவில் கூட செய்வாங்க, பிழியறதுக்கு சிரமமாக இருக்கும். ஆனால் வாசனையாக, நிறமாக இருக்கும்.
இந்த அளவு இப்ப எனக்கு சரியாக வருகிறது.

ஜெயலக்ஷ்மி,

அவசியம் செய்து பாருங்க. ஈஸியாக செய்ய முடிகிறது. உப்பு, காரம் எல்லாம் 2-3 தடவை சரி பார்த்து, அளவாகக் கொடுத்திருக்கேன். கரெக்டாக இருக்கும். சஹானாவுக்கு காரம் வேண்டாம் என்றால், மிளகாய்ப் பொடி போடாம செய்யலாம். சிலர் மிளகு, பூடு விழுது எல்லாம் போட்டு, காரமாகக் கூட செய்வாங்க.

ஹர்ஷா,

பிள்ளைத்தாய்ச்சி பொண்ணு, ஆசையாக இருக்குன்னு சொல்றீங்க. பக்கத்தில் இருந்தால், நாங்க யாராவது செய்து கொடுத்துடுவோம். கொஞ்சமாகவாவது (யாரையாவது செய்து தரச் சொல்லியாவது) சாப்பிட்டுடுங்க. (அங்கே கடைகளில் கிடைக்குமா?)

யோகராணி,

தீபாவளிக்குள் குறிப்பு வெளியிட்டாங்கன்னா நல்லா இருக்குமேன்னு ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருந்தேன். குறிப்பு வந்தது சந்தோஷமாக இருக்கு. செய்து பார்த்து விட்டு, சொல்லுங்க.

பின்னூட்டம் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹை... சீதாலஷ்மி... ரிப்பன் பக்கோடா சூப்பர். வீட்டுக்கே வந்துடறேன், ரெடியா வைங்கோ. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதாம்மா, ரிப்பன் பக்கோடா சூப்பர். இதுவரை வீட்டில் முயற்சித்து பார்த்ததில்லை. இந்த முறையை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். ஒரே ஒரு டவுட், மிளகாய்த்தூள்னு சொன்னீங்க. படத்துல பார்த்தா தனியா தூள் மாதிரி இருக்கே. அது என்ன மிளகாய் தூளுங்கம்மா. சிரமம் பார்க்காமல் விளக்கம் தந்தால் சந்தோஷப்படுவேன். தொடந்து குறிப்புகளை தர வேண்டும். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Super :) romba easyaa erukku ..Pottu kadala kandippa podanuma?

சீதாம்மா
நல்லா விளக்கமா சொல்லி அசத்திட்டீங்க! கூடிய வீரைவில் செய்துட்டு சொல்றேன் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சுவையான ரிப்பன் பக்கோடா செய்து எல்லாரையும் அசத்திட்டேன்;-)

முதல் முறையா செய்ததுனால எந்தளவுக்கு தண்ணீ ஊத்தி கலக்கி முறுக்கு பிடியில போட்டு அமுத்தனும்னு தெரியலை, அப்புறம் கணவர் வந்து சொல்லி செஞ்சும் கொடுத்துட்டார். இனி அடிக்கடி செஞ்சு வச்சுடுவேன், மிக்க நன்றி;-)

Don't Worry Be Happy.

அன்பு வனிதா,

உங்க வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திட்டு இருக்கேன், ரிப்பன் பக்கோடா செய்து வச்சுடறேன். சீக்கிரம் வாங்க, சரியா!

அன்பு கல்பனா,

அது மிளகாய்த்தூள்தான். மிளகாய் கடையில் வாங்கி, மிஷினில் திரிச்சது. அதனால் கலர் கொஞ்சம் கம்மியாக இருக்கும். காஷ்மீர் மிளகாய்பொடி என்று கடைகளில் கிடைக்கும், நல்ல சிவப்பு நிறமாக இருக்கும். நிறம் கூடுதலாக வேணும் என்றால், அதை வாங்கி, உபயோகிக்கலாம்.

அன்பு remsat,

பொட்டுக்கடலை மாவு சேர்க்காமலும் செய்யலாம். நன்றாக இருக்கும். இந்த மாவு சேர்த்தால், கொஞ்சம் வாசனை கூடுதலாகவும், கடுகடுன்னு இல்லாமலும் இருக்கும்.

அன்பு ஆமினா,

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி. செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

அன்பு ஜெயலக்ஷ்மி,

செய்து பார்த்தீங்களா? ரொம்ப சந்தோஷம். நானுமே 2-3 தடவை செய்து பார்த்துதான், தண்ணீர் அளவு எப்படி சேர்க்கணும்னு தெரிஞ்சுகிட்டேன். முழுவதும் எனக்கு திருப்தி வந்த பிறகுதான் குறிப்பு அனுப்பினேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

nice receipe seethalakshmi.

very nice receipe