சில பயனுள்ள தகவல்கள்!

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பாடத்திட்டங்களை பயன்படுத்த "டவுன்லோடு' செய்து கொள்ள முடியும்.

அரசுப் பொது தேர்வுகளுக்கான கடந்த மூன்றாண்டுக்கான வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம் பாடத் திட்டங்களை ஆய்வு செய்யவும், இணைய தளம் வழியாக மற்றவர்களின் கருத்துகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது."

இங்கே www.textbooksonline.tn.nic.in சென்று அனைத்து பாட நூல்களையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

நல்லதொரு காரியம் செய்தீர்கள்.:))) வாழ்த்துக்கள். நான் எனது தங்கைக்கு இதில் இருந்து நிறைய வினாத்தாள்கள் எடுத்துகொடுத்தேன்.

அதுமட்டுமல்ல, இந்த தளத்தில் blueprint எனப்படும் எந்தெந்த பாடத்தில் எத்தனை கேள்விகள் வரும் (அதாவது ஒரு மார்க் கேள்வி முதல் விரிவான விடையளி வரை) என்று அழகாக கூறியிருப்பார்கள்.

உதாரணமாக, கணிதத்தில் 9ம் பாடத்தில் 10 மார்க் கேள்வி வராது என்றால் அந்த குறிப்பிட்ட பாடத்தில் 10 மார்க் கேள்வி வராது. இதே bluprint வைத்துதான் கேள்வித்தாளே தயார் செய்வார்களாம். ஆனால் என் தங்கை அந்த பாடத்தில் இருந்து வந்திட்டா என்ன பண்றது என்று சொல்லி எல்லாத்தையுமே படிச்சிட்டுதான் இருக்கா ;((

அன்புடன்
பவித்ரா

பவி நல்லா படிக்கிற பொண்ண கெடுத்துருவீங்க போல இருக்கே;(

பவி தங்கச்சி அக்கா பேச்ச கேக்காதிங்க, நீங்க நல்லாப்படிச்சு ஃப்ர்ஸ்ட் மார்க் வாங்க வாழ்த்துக்கள்!

Don't Worry Be Happy.

இந்திய அரசின் குறைதீர்ப்பு மையம் ஆன்லைனில் செயல்படுகிறது. எந்த அரசுத்துறையிலும் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி இங்கு முறையிடலாம்.

முகவரி

http://pgportal.gov.in/

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இப்பொழுதெல்லாம் திருமண சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ் எதுவுமே காகிதத்தில் இல்லை. எல்லாமே ஆன்லைன் தான். வேண்டுமென்றால் நீங்கள் ஒரு காபி எடுத்துக்கலாம். ஒரிஜினல் வெரிபிகேஷன் எல்லாம் ஆன்லைன் தான்.

சென்னை மாநகராட்சியின் வலயதலத்தில் இவை தவிர பல சேவைகள் உள்ளன....

http://www.chennaicorporation.gov.in/index.htm

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் லாவண்யா
நல்லா இருக்கிங்களா..ப்ளீஸ் எனக்கு ஒரு உதவி...நீங்க பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் ல பாக்கலாம்னு சொன்னிங்கள்ள...நான் வேலைவாய்ப்பு registration ஆன்லைன் ல பண்ண ட்ரை பண்ணேன்..அப்போ அதுல பிறப்பு சான்றிதழ் நம்பர் கேக்கறாங்க..ஆனா என்னோட பிறப்பு சான்றிதழ் இப்போ இல்ல..இதையும் ஆன்லைன் ல பாத்து வாங்க முடியுமா..ப்ளீஸ் எனக்கு சொல்லுங்க...

SaranyaBoopathi

வணக்கம் யோகராணி மேடம்
என் பையன் +2 படிக்கிறான்.
நீங்கள் கொடுத்துள சைட்டில் போய் பார்த்தேன். அதில் புளு பிரின்ட் எப்படி பார்க்கவேண்டும் உதவுங்கள் Please

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நீங்கள் எந்த ஊரில் பிறந்தீங்க??? அங்குள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு என்று உள்ள வலயத்தில் பார்க்கவும். நான் கொடுத்திருக்கும் தொடர்பு சென்னை மாகராட்சி உடையது.

நன்றி.
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நான் பிறந்தது ஈரோடு...நீங்க கொடுத்துள்ள வெப்சைட் சென்னைக்கு மட்டும் தானா?? ஈரோடு க்கு எப்படி பார்ப்பது...

SaranyaBoopathi

வணக்கம் Pavithra மேடம்
என் பையன் +2 படிக்கிறான்.
நீங்கள் கொடுத்துள சைட்டில் போய் பார்த்தேன். அதில் புளு பிரின்ட் எப்படி பார்க்கவேண்டும் உதவுங்கள் Please

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நீங்க related website போய் பாருங்க

adi maram kolirnthalthan nooni maram valarum

மேலும் சில பதிவுகள்