தோழிகளே,
அதிரசத்திற்கு பாகு வைக்கும் போது சற்று பதம் அதிகமாகி விட்டது போலும்.
அதிரசம் மாவு இருகி விட்டது. ( நேற்று இரவு செய்து வைத்தேன் ).
என்ன செய்வது? உதவுங்கள்.
செல்வி.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
தோழிகளே,
அதிரசத்திற்கு பாகு வைக்கும் போது சற்று பதம் அதிகமாகி விட்டது போலும்.
அதிரசம் மாவு இருகி விட்டது. ( நேற்று இரவு செய்து வைத்தேன் ).
என்ன செய்வது? உதவுங்கள்.
செல்வி.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
அதிரச மாவு இருகிவிட்டால்
செந்தா, எனக்கு தெரிஞ்சு என் அம்மா, இது போல அதிரச மாவு இருகி விட்டால் பால் கலந்து பிசைந்து அதிரசம் தட்டி போடுவாங்கப்பா. நல்லா வரும். நம்ம தோழிகள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. எல்லாரும் உங்களை மாதிரியே அதிரச பிசில இருப்பாங்க போலிருக்கு :) அதான் பார்க்கலை.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
செல்வி
செல்வி
கவலை படுவதற்கு ஒன்றுமே இல்லை . அதிரசம் மாவு சேகரித்து வைத்தால் அது இறுகி தான் போகும் . நீங்கள் 1 படி மாவு போட்டு இருகின்றீர்கள் என்றால் அதில் பாதி மாவு மட்டும் தனியாக பிரித்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசையவும் . சிறிது நேரம் எடுக்கும் பிசைவதற்கு. இதே போன்று மீதி மாவையும் தண்ணீர் தெளித்து பிசையவும் . சற்று பொறுமையுடன் அதிகம் தண்ணீர் ஊற்றி விடாமல் பொறுமையாக தெளித்து பிசையவும்.
சிறிய உருண்டைகளாக முன்பே உருட்டி வைத்தால் அது இளகி விடும் . 10 or 15 உருண்டைகளாக உருட்டி பிரஸில் வைத்து தட்டி எண்ணையில் பொரிக்கவும்
உடனடியாக ஆலோசனை வழங்கியதற்கு மிக்க நன்றி.
கல்பனா & ரம்யா,
உடனடியாக ஆலோசனை வழங்கியதற்கு மிக்க நன்றி.
நீங்கள் சொல்லியது போல் செய்து பார்க்கிறேன்.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
செல்வி.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
Valha Vaiyaham ! Valha Valamudan !
அதிரசம்
அதிரசம் மாவு தட்ட நன்றாக வருகிறது, ஆனால் எண்ணையில் போட்டால் பிரிந்து விடுகிறது. என்ன செய்யாலாம் தோழிகளே.
ஏற்கனவே இழை ஆரம்பித்திருக்கும் செந்தாவுக்கு நன்றி:)))
இதுவும் கடந்து போகும்.
அதிரசம்
யோகலஷ்மி, பாகு இளகலாக எடுத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதனால் தனியாக பிரிகிறது.உடன் சிறிது மாவு கலந்து அதிரசம் தட்டிப் பாருங்கள் பா.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
நன்றி கல்பனா
பதில் அளித்ததற்கு ரொம்ப நன்றி கல்பனா, அப்படியே செய்து பார்க்கிறேன். தீபாவளி நல்வாழ்த்துக்கள் பா.
இதுவும் கடந்து போகும்.
ஜாங்கிரிக்கு செய்த மாவு மீதமாகிவிட்டது
ஜாங்கிரிக்கு செய்த மாவு மீதமாகிவிட்டது. ப்ரிட்ஜில் வைத்து இருக்கிறேன். அதை வைத்து வடை தவிர வேறு என்ன செய்வது. எண்ணெயில் deep fry செய்யாத அயிட்டம் என்றால் நன்றாக இருக்கும்.
அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்.
அனிதா
ஜாங்கிரிக்கு செய்த மாவு..
தேங்காய் பால், ஏலக்காய், வெல்லம் அல்லது கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து, வடித்து சேர்த்து கொதிக்க வைத்து, உளுத்தங்கஞ்சி செய்யலாம்.
அன்புடன்,
செல்வி.
நன்றி
செல்வி மேடம்,
நன்றி. செய்து பார்க்கிறேன்.
அனிதா
செல்வி
செல்வி அதிரசம் எப்படி வந்தது என்று சொல்லவே இல்லையே ??