சொல்ல விரும்பினேன் - 3 !!

நம்ம முந்தைய சொல்ல விரும்பினேன் 100 ஆயிடுச்சு அதான் புது இழை. :)

இங்க யார் வேணும்'னாலும் பதிவு போடலாம், எதை பற்றி வேணும்'னாலும் பதிவு போடலாம்... எல்லாரும் கருத்து சொல்லலாம், உங்க அனுபவத்தையும் சொல்லலாம். ;) அரட்டை மட்டும் கண்டிப்பா கூடாது.

முதல்லா அனைவருக்கும் எனது அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள். நம்ம புது இழையை இனிப்பா துவங்கலாம்.... ;)

இந்த வருட தீபாவளிக்கு நான் முதன் முதல்ல அதிரசம், பாதுஷா செய்தேன். எப்படி??? அறுசுவை பார்த்து தான். ஆகா ஓகோன்னு வந்ததுன்னு பொய் சொல்ல மாட்டேன்... கண்டிப்பா இதெல்லாம் செய்ய அனுபவம் வேண்டும்... ஆனாலும் நல்லாவே செய்தேன்னு தான் சொல்லணும். வீட்டில் எல்லாருடைய பாராட்டையும் வாங்கிட்டேன். அதுக்காக அறுசுவைக்கு நன்றிகள் பல. நீங்க இந்த தீபாவளிக்கு அறுசுவை பார்த்து எதாது குறிப்புகள் செய்தீங்களா??? எந்த குறிப்பு?? எப்படி வந்தது??? சொன்னீங்கன்னா, பார்க்கும் நாங்களும் முயற்சி செய்வோம். வாங்க இங்க. முடிஞ்சா இழையும் சேர்த்து கொடுங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, நீங்க மட்டும் ஒரு பதிவை போட்டுட்டு பாவமா உட்கார்ந்திருக்கறதால, உங்களுக்காக நான் ஒரு பதிவை போடுறேன். இன்னும் ரெண்டு நாளுக்கு கைக்கு ரெஸ்ட் தரலாம்னு இருக்கேன். அடுத்த வாரம் பட்டியின் நடுவரா பொறுப்பெடுக்கனும்ல. நம்ம கோழிங்க என்ன ரவுண்டு கட்டப் போறாங்க. நான் எத்தன பேர கொடுமை படுத்தியிருப்பேன். அவங்க எல்லாம் பழி தீர்க்க போறாங்க. அத நினைச்சாத்தான் நைட்ல தூக்கமே இல்ல :((( சரிப்பா நான் விஷயத்துக்கு வரேன்.

தீபாவளிக்கு சர்க்கரை அதிரசம் செய்யலாம்னு சென்னைல இருக்குற அம்மாவுக்கு போன் போட்டு அளவெல்லாம் கேட்டு பெரிய இதுவாட்டம் வேலையில் இறங்கினேன். அரிசியை ஊறவைத்து காய வைத்து மாவாக்கினேன். சர்க்கரை பாகு அதிகம் கொதிக்க விடக்கூடாது, தண்ணீரில் சிறிது விட்டால் லேசாக உருண்டு வந்தால் போதும்னு அம்மா சொல்லியிருந்தாங்க. நான் சர்க்கரைய அடுப்புல வச்சி கொதிக்க விட்டுட்டு டீவி முன்னாடி உட்கார்ந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு போய் பாகை எடுத்து தண்ணீல விட்டு பார்த்தா கமர்கட் மாதிரி ஒட்டிக்கிச்சு. அப்பவும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி என் மாமியார் கிட்ட சொல்லி அதுல கொஞ்சம் கொஞ்சமா மாவை போடச் சொல்லி நான் கிளறினேன். பிறகு அதிரசம் சுட உட்கார்ந்தேன். என் மாமியார் தட்டி போட்டார். மஞ்சள் பிள்ளையார் எல்லாம் பிடித்து வைத்து பயபக்தியோடு, முதல் அதிரசத்தை எடுத்து எண்ணெயில் போட்டேன். பிள்ளையாருக்கு என்ன காண்டோ என்னவோ, அதிரசம் போட்டவுடன் தனி தனியாக கூட்டணி அமைத்து பிரிந்து விட்டது. மாமியார், எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் போடு, அப்போது நன்றாக வரும் என்று சொன்னார். நானும் எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் போட்டேன். முன்பை விட இன்னும் நல்ல கருப்பாக வந்தது சர்க்கரை பணியாரம். வேற என்னத்த சொல்ல. அப்பவே எல்லாத்தையும் பேக் பண்ணி எடுத்து வச்சிட்டேன். இந்த சர்க்கரை பணியாரத்த சுடவா இவ்ளோ பில்டப் குடுத்தன்னு ஆத்துக்காரர் கிண்டலை தொடங்கி விட்டார். இந்த வேலய பண்றதுக்கு மாமியார, வீட்ல வேலை செய்ற பொண்ண எல்லாம் விரட்டி விரட்டி வேலை வாங்கினேன். சர்க்கரை பணியாரத்தை பார்த்துட்டு, அவன்ங்க என்னை பார்த்த பார்வை இருக்கே. என்ன கோழிகளா, நீங்களும் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க. கல்பூ எஸ்கேப்பூ!!

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா இனி நீங்க வெறும் கல்பனா இல்லை அதிரச கல்பனா!!! சூப்பர், நீங்க செய்தது நல்லா இல்லன்னாலும், நீங்க சொன்னது நல்லா இருக்கு.... படிச்சு சிரிச்சுட்டே இருக்கேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா.....

நான் இப்படி ஒரு இழை இருக்கிறது தெரியாம கிருஷ்ணா ஜெயந்தி போது ஒரு புது இழை தொடங்கினேன்.....அப்போ நான் செய்த பலகாரங்களை பெரிய பட்டியலிட்டேன்.

இப்போ கரெக்டான இழையில் என் பட்டியல் ஏதோ...

ரிப்பன் பக்கோடா (node 2653), ஜலீலா அவர்களின் மணங்கொம்பு முறுக்கு, சுபா ஜெயப்ரகாஷ் அவர்களின் தட்டை, சீடை (node 374), விஜி அவர்களின் (vijitvm) மைக்ரோவேவ் வேர்கடலை பக்கோடா, ஜலீலா அவர்களின் பாதாம் ஹல்வா, ரசியா அவர்களின் மைக்ரோ அவன் பால்கோவா, காரசேவு, சுபா ஜெயப்ரகாஷ் அவர்களின் தட்டை.

மிகவும் பிடித்து போனதால் தட்டை மற்றும் வேர்கடலை பகோடா அடிக்கடி செய்கிறேன். விளக்கபடத்துடன் செய்யனும்னு நினைச்சேன் ஆனால் நேரம் இருக்கவில்லை. இன்னும் அவர்களுது குறிப்பில் கூட பின்னூட்டம் போடலன்னா பாத்துகோங்களேன்....

அது சரி கல்பனா.....நீங்க தானே அது நேத்து யார் யாரெல்லாம் கேட்ட அதிரச டவுட் கிளியர் பண்ணினது....எனக்கு எதுக்கு வம்பு....எஸ்கேப்.......

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா, நான் அதிரச பக்குவம் சொன்னவங்க எல்லாம் பேஸ்மெண்ட் நல்லா போட்டிருந்தாங்க. அதான் அது இன்னும் கொஞ்சம் மேல வரட்டுமேன்னு பெரியவங்க ஆலோசனையின் படி சொன்ன அறிவுரைகள் அவை. நடைமுறையில் செய்து வெற்றி கொள்ளப்பட்ட அனுபவ அறிவுரைகள். இங்க எனக்கு பேஸ்மெண்டே இல்லைல அதான் அதிரசம் அந்த கதியா போய்டுச்சி :(((

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

லாவண்யா... கலக்குங்க. இத்தனை செய்தீங்களா??? சொல்லிருந்தா வீட்டுக்கு வந்திருப்போம். ;) இழையும் சொன்னதுக்கு மிக்க நன்றி... கண்டிப்பா நாங்களும் செய்து பார்ப்போம். அதிரசம் செய்ய ஐடியா கொடுத்த ஆசாமி இங்க மாட்டிக்கிச்சு... போட்டு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி லாவண்யா :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதெல்லாம் ஒன்னும் இல்லை வனிதா....எப்பொழுதுமே ஆலிவ் எண்ணையில் தான் சமையல் அதனால் இப்படி பண்டிகை நாள் வரும் போது வேறு எண்ணையில் இப்படி சுட்டு தள்ளி என் ஆசையை தீர்த்துக்குவேன். நமக்கெல்லாம் அடிக்கடி இப்படி செய்ய ஆசை தான்....ஆனால் பிள்ளைகள் விடனும் இல்ல....இப்போ கூட ஒன்னும் இன்னும் அப்படியே கடல் மார்கமாகவோ இல்லை வான் வழியோ எங்க வந்திடுங்கோ.....சேர்ந்தே சாப்பிடுவோம். நான் நல்ல பேசுவேன்....எழுதனும்ன கமல் மாதிரி வார்த்தை தான் வர மாட்டேன்குது....உங்க எல்லாரையும் பார்த்து தான் எப்போ ஆரம்பிச்சிருக்கேன்....பிள்ளையார் சுழி போட்டு நம்ப கல்பனாவை மாட்டி விட்டுட்டேன்...

கல்பனா அதுகேவா உங்க வீட்டில் வேலை செய்யும் பெண்ணை அப்புறம் உங்க மாமியாரை (எவ்ளோ தைரியம் !!!????) விரட்டி விரட்டி வேலை வாங்குனீங்க......சரி விடுங்க அடுத்த தடவை பார்த்துக்கலாம்.....மறக்காம மிச்சம் வெச்ச மாவை என்ன செய்ய போறீங்கன்னு சொல்லிடுங்க....எனக்கு தயவு செஞ்சி பார்சல் அனுபாதீங்கோ......எல்லோரும் கேடுகொங்கோ....நான் ஒன்னும் சொல்லல்லை....பாருங்க கல்பனா நான் சொன்னதை எல்லாம் அழிச்சிட்டேன்....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கந்தலான அதிரச மாவில் தேங்காய் துருவி போட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பணியார மாவு பதத்திற்கு எடுத்து இட்லி பாத்திரத்தில் இட்லி மாதிரி ஊற்றி முந்திரி வைத்து அலங்கரித்து பெயர் வைக்காத குழந்தை மாதிரி கொடுத்துவிட்டேன். இப்போதுதா பெயர் கிடைத்தது. அதன் பெயர் "காங்கோ இனிப்பு இட்லி". செய்முறை வேண்டுபவர்கள் என்னை அணுகவும் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

லாவண்யா... எடுத்து வைங்கோ விரைவில் வருகிறேன். மிக்க நன்றி :)

கல்பனா... காங்கோ இனிப்பு இட்லி குறிப்பு சொன்னதும் எனக்கு என்னென்னவோ நியாபகம் வருது ;( இப்படி தான் புது புது குறிப்பு உருவாகுதா???!!! கடவுளே காப்பாத்துப்பா!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, பழைசெல்லாம் நினைச்சு மனசை கஷ்டப்படுத்திக்காதீங்க. எது நடக்கனுமோ அது நல்லதாவே நடக்கும். எது நடந்தோ அது நல்லதாகவே நடந்தது :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்