மருந்து குடிக்க உதவவும்

என் பையனுக்கு 13 மாதங்கள் ஆகிறது, அவனுக்கு பயங்கரமா மார்சளி, இருமல்,fever பிடித்து இருக்கிறது. ஆனால் அவன் மருந்து குடிக்கவே மாட்டேன்றான். நானும் சங்கு மற்றும் syringe இல் தரென், ஆனால் குடிக்கவே இல்லை. துப்பரான். வழி சொல்லுங்க,pls pls urgent help me,சாப்பிடவும் மாட்டென்ரான்/ இப்பொ என்ன உணவு தருவது சளியாக இருக்கிறாதால்
pls advice

ஜெயா, வணக்கம். நலமா? எந்த குழந்தையும் மருந்தை விரும்பி வாங்கி குடிப்பதில்லை பா. நாம் தான் கட்டாயப்படுத்தி ஊற்றவேண்டும். நீங்கள் காலில் குழந்தையை படுக்க வைத்து மூக்கை பிடித்து ஊற்றி விடுங்கள். அநேகமாக உங்கள் குழந்தை நல மருத்துவர் உங்களுக்கு T-minic இந்த மருந்தை தரச் சொல்லி தந்திருப்பார் என்று நினைக்கிறேன். அல்லது Cetzine Syrup இந்த மருந்தை தந்திருப்பார். இந்த மருந்துகளையே நீங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி காலையும் இரவும் தந்தாலே போதுமானது.விக்ஸ் தைலம் சிறிது எடுத்து சூடாக்கி கை பொறுக்கும் சூட்டில் மார்பிலும், முதுகிலும் தேய்த்து விடுங்கள். Nasoclear Drops காலையும், இரவும் இரண்டு டிராப்ஸ் மூக்கில் விடுங்கள் மார்ச்சளி கரைந்து மலத்தில் வெளியேறும் அல்லது மூக்கின் வழியே வெளிவரும். சளி தொந்தரவும் குறைந்து சாப்பிட தொடங்குவான். இப்போது மிளகு ரசம் காரமில்லாமல் செய்து சாதத்துடன் மிக்ஸியில் அரைத்து தரவும். சளிக்கும் நல்லது.பால் மிதமான சூட்டில் தரலாம்.இந்த சமயத்தில ஆறிப் போனவற்றை உண்பது கடினம். அதனால் வெதுவெதுப்பாக தரவும். விழுங்க சிரமமில்லாமல் இருக்கும்.

இப்போதும் சளி குறையாத மாதிரி தெரிந்தால், கற்பூரவள்ளி, துளசி,வெற்றிலை மூன்றையும் துளிராக எடுத்துக் கொண்டு விளக்கு சூட்டில் வதக்கி சாறு எடுத்து ஒரு கால் சங்கு புகட்டுங்கள். உடனே குணமாகும். அதிகம் தரவேண்டாம். உடம்பிற்க்கு சூட்டை தரும். உங்கள் மகன் சீக்கிரமே குணமடைவான். கவலைபடாதீர்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Hello friend

Heat one tablespoon neem oil with 1 or 2 garlic cloves. Let it cool. Apply just one drop each (with your finger) on his chest, on his back, on his feet and back side of the ear i.e.,on side neck(the sinus point) and rub well. Heat the 'Kadai" or "Pan" and swith off the gas stove. With a folded cotton towell apply the heat to the baby on his chest, back feet and near the ears. Do it twice daily. with in one or two days the cold will be gone. This is always working for me.

a2knch

thanks friends,மார்சளி ஆபத்துனு சொல்ராங்க. பயமா இருக்கு பா. english medicine தரும்போது நாட்டு வைத்தியம் பன்னலாமா, breakfast, lunch,dinner என்ன உணவு தருவது. நான் singaporeஇல் இருக்கென். மருந்து different Rhinathiol, antibiotic, paracemetol, cough syrup,

jaya

நான் சவுதியில் இருக்கிறேன்,இங்கயும் சளிக்கு rhinathiolசிரப் தான் குடுப்பாங்க,அது மார்புசளியை கரைக்கும்,அதையே கொடுங்க,வெற்றிலையில் விக்ஸ்தடவி லேசாக தீயில் வாட்டி பிள்ளைக்கு நெஞ்சில் போடுங்க.வெந்நீர் குடுங்க,சூப்பில் மிளகுதூள் லேசாக சேர்த்து கொடுங்க.பசும்பால் அதிகம் கொடுக்காதீங்க.

மேலும் சில பதிவுகள்