காதல் என்றால் உண்மையில் என்ன?

நண்பர்களுக்கு என் வணக்கம். எனக்கு உங்கள் ஆலோசனை தேவை. என் மன சஞ்சலத்தை நான் கூறுவதற்கு முன் எனக்கு இந்தக் கேள்விகளின் பதில் தெரிய வேண்டும்.
- "காதல்" என்றால் உண்மையில் என்ன?
- சரா சரியாக எந்த வயதளவில் ஏற்படும்? (உண்மைக் காதல்)
- ஒருதலைக் காதல் என்பது உண்மைய?
- காதலிக்கப் படுபவரிடமிருந்து சரியான எதிரொலி கிடைத்தால் மட்டும் தான் அது உண்மைக் காதலா?
- இரு கை தட்டினால் தானே ஓசை? அது போல இருவரிடமும் ஏற்பட்டால் தானே காதலாகும்?

என் கேள்விகள் பைத்தியக்காரத்தனமாக இருக்கின்றனவோ எனக்குத் தெரியாது. ஆனால் இவற்றிற்கு எனக்கு விடை கிடைத்தால் ஓரளவு மனச்சாந்தி எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் நண்பி

ஹாய் சகாரா, உங்க கேள்வியே ரொம்ப வித்தியாசமா நல்ல இருக்கு. கண்டிப்பா என் பதில் போடறேன்...... டைப் பண்ணிட்டு வரேன்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நல்ல கேள்வி
ஆனால் ரொம்ப யோசிக்கனும்

LIVE ND LET LIVE

காதல் என்பது அர்ப்புதமான உணர்வு எனக்கு இதற்க்கு விடை எப்படி சொல்வது என்று தெரியவில்லை யோசித்து பதிவு போடுகிரேன்.

அன்புடன்
ஸ்ரீ

periya visaiyatha kekaringa ..indha ulagam naagarigama maarnathuku mukia kaaranam kaadhal..age limit sola mudiadhu..teen age la vara harmone change kaaranama eiiarkum vara koodiathu,.its common to all.

காதல் ஒரு அற்புதமான உணர்வு . வயது பார்த்து வருவதில்லை. நம் உள்ளம் அன்பை தேடும் போது அது யாரிடம் கிடைக்கிறதோ அவரிடம் காதல் உருவாகிறது.

பொதுவா காதல் தோல்வியின் போது இத்தகைய கேள்விகள் எழும். எந்த நிலையில் இதை கேக்குறீங்கன்னு எனக்கு தெரியல. ஆனாலும் பதில் சொல்லணும்னு தோணுச்சு!

"காதல்" என்றால் உண்மையில் என்ன?
ஒருவரை பார்த்ததும் நம்மை அறியாமல் நம் மனதுக்குள் புது வித உணர்ச்சி பிறக்கும். இவர் நம் வாழ்க்கை துணையானால் எப்படி இருக்கும் என நம்மையும் தாண்டி நம்மை சிந்திக்க வைக்கும். (ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலை பற்றி சொல்கிறேன்) என்னை பொறுத்த வரை அது தான் காதல் பிறக்கும் நேரம். ஐ லவ் யூன்னு சொன்னா உடனே காதாலாகி விடாது. என்னை பார்த்து என் அம்மாவும், நான் என் மகனுக்கும் கூட சொல்வதுண்டு. இது அன்பின் வெளிப்பாடு.

//சரா சரியாக எந்த வயதளவில் ஏற்படும்? (உண்மைக் காதல்)//
பருவ வயதில் தோன்றலாம்.இடைப்பட்ட வயதிலும் தோன்றலாம். ஆனால் முதுமை வரை தொடர்ந்தால் தான் அது உண்மை காதல். என்னை பொருத்தவரை காதலிக்க வயது என்று நிர்ணயிக்கப்படவில்லை. உணர்வுகளுக்கு என்று நிர்ணயிக்கப்படுவதில்லையே :)

//ஒருதலைக் காதல் என்பது உண்மைய?//
ஏன் முடியாது. முடியும். அதுவும் உண்மை தான். இளவயதில் தன்னை விட்டு பிரிந்த தன் கணவனையே நினைத்து சாகும் வரை வாழும் பெண்ணிடத்தில் இருக்கும் காதல் உண்மை தான்.

தன்னை கைவிட்ட காதலனை இன்று வரை நினைத்து உருகுபவளின் காதலும் காதலி கைவிட்ட போதும் வேறு பெண்ணையே நினைக்காமல் கடைசி வரை அந்த பெண்ணையே நினைத்து வாழ்பவனின் காதலும் உண்மை தான். ஆனால் திருமணம் என்ற ஒன்றை மறுத்து தான் தன் காதலின் ஆழத்தை தெரியப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

//இரு கை தட்டினால் தானே ஓசை? அது போல இருவரிடமும் ஏற்பட்டால் தானே காதலாகும்//
எல்லாருக்கும் ஒரே நேரத்தில் உணர்வுகள் பொங்கும் என சொல்ல முடியாதே! அது ஒவ்வொருவரின் ரசனையை பொறுத்தது. நான் உயிருக்குயிராய் காதலிக்கும் ஒருவன் வேறு பெண்ணை காதலித்தால் என் காதல் பொய்யாகி விடுமா என்ன? அல்லது அந்த காதலனுக்கு காதல் மேலேயே விருப்பமில்லை என்றால் என் காதல் பொய்யாகிவிடுமா என்ன?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி.
இளமைப்பருவத்தில் ஏற்பட்ட வயதுக் கோளாறால் ஒருவர் மீது உண்டான கவர்ச்சியை அல்லது மாயையை காதல் என்று நினைத்து காதலித்து விட்டு, உரிய பருவத்தில் உண்மை நிலை விளங்கும் போது.... செய்ய வேண்டியது என்ன??
அதுவும் நம் மீது அவர் வைத்திருக்கும் காதல் 100% உண்மையானது எனும் போது...??

"காதல் தான் வாழ்க்கைக்கு அடிப்படையானது. ஆதலால் எம்மை உண்மையாக காதலிப்பவரையே மண முடித்துக் கொள்ளலாம்" என்றால்...
மனதில் விருப்பம் இல்லாத போது, இனி என்ன செய்வது என்று எல்லாவற்றையும் மறைத்து காதலிப்பது போல நடித்து மணமுடிக்கலாமா?
அது எம்மை உண்மையாக காதலிப்பவருக்குச் செய்யும் துரோகம் அல்லவா?
சிறு வயதுக் கோளாறால் ஏற்பட்ட பிழை என்று வெட்டிக் கொள்ளவும் மனசாட்சி இடம் கொடுக்குதில்லை. நாம் செய்த பிழையால் அல்லவா ஒருவர் மனதில் ஆசை வளர்ந்து விட்டது??

இந்த இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்

டியர் சஹாரா,
காதல் என்பது அன்பின் வெளிப்பாடு.இதை விரும்பாத மனிதர்களே இல்லை எனலாம்.இது இந்த வயதில் தான் வரும் என்றும் திட்டமிட்டுச் சொல்லமுடியாது.இதற்கு வயது வித்தியாசமும்கிடையாது.காதல் வயப்பட்டோருக்கு எல்லாமே அழகா,அதிசயம,சந்தோஷமா,அற்புதமா தெரியும்.முடியாததைஎல்லாம் முடிக்கவைக்கும்.எனர்ஜி பூஸ்டர். உலகமே இந்த சக்தியாலே தான் இயங்குது.

idhuvum kadandhu pogum.

மேலும் சில பதிவுகள்