இஷானி,தனது கதையில் சொன்னதைப் போலவே,இந்த நவம்பரில்,இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.அறுசுவை கவிதை போட்டியில்,இரண்டாவது பரிசை வென்றது போல,நிஜவாழ்விலும் இரண்டாவதாக ஒரு கவிதையை பரிசாகப் பெற்றிருக்கிறார்.
தாயும்,சேயும் நலமுடன் வாழ வாழ்த்தலாம்,வாங்க தோழிகளே!
இஷானி,
இஷானி,
எப்படி இருக்கீங்க?குழந்தைகள் நலமா?நல்ல படியாக குழந்தை பெற்றதற்கு வாழ்த்துக்கள்.குழந்தைக்கு என்ன பெயர் வைத்து இருக்கிறீர்கள்?முடிந்தால்,பதிவு போடுங்கள்.குழந்தை எல்லா செல்வங்களும் பெற்று மகிழ்வுடன் நிறைவாய் வாழ வாழ்த்துக்கள்.
சீதாலக்ஷ்மி அம்மா தான் உங்களை பற்றி,அடிக்கடி விசாரிச்சுட்டு,இருந்தாங்க.
ஹாய் இஷானி,
இரண்டாவது செல்வத்தையும் பெற்றெடுத்ததற்கு வாழ்த்துக்கள்.என்ன குழந்தை என்ன பெயர் வச்சீங்க...பெரிய குழந்தை என்ன சொல்கிறது..பாப்பாவை சுற்றி சுற்றி வருமே.
இஷானிக்கு
தோழி இஷானிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
இஷானி
உங்களுக்கு எங்கள் குடும்பத்தின் அன்பான மனமார்ந்த வாழ்த்துக்கள்...இந்தியாவில் என்றாவது ஒரு நாள் உங்களை சந்திப்பேன் என நம்புகிறேன்..ஒரே சமயத்தில் அங்கிருந்தால்....
ரோஜாப்பூவுக்கு என்ன பேர் முடிவு செய்திருக்கிறீர்கள்
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
இஷானி மேடம்
இஷானி மேடம் வாழ்த்துக்கள். குட்டி பையன் யார் மாதிரி இருக்காங்க. அம்மா ஜாடையா, அப்பா ஜாடையா. பாப்பா தம்பியை நல்லா கவனிச்சுக்குறளா. உங்கள் உடம்பையும் நல்ல கவனித்துக்கொள்ளுங்கள்.
ishani madam
congratulation.take care for your baby and your health.by g.gomathi.
HAI EISHANI
வாழ்த்துகள் இஷானி
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
வாழ்த்துக்கள்
தோழி இஷானிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சௌமியன்.
வாழ்த்துக்கள்
இஷானி, தாயும் சேயும் நலமா? இந்த உலகிற்கு வருகை தந்திற்கு புது ரோஜா, ஆரோக்கியமாகவும், அறிவோடும், புகழ் பெற்று நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும். வாழ்த்துக்கள் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
வாழ்த்துக்கள்
இஷானி மிக்க சந்தோஷம். தாயும் சேயும் நலமோடு வாழ வேண்டும். ரெண்டு குட்டீஸ் கூடயும் பிசியா இருப்பீங்க. நேரம் இருந்தா அறுசுவைக்கு வாங்க. வாழ்த்துக்கள்.
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி