உடல் எடை அதிகரிக்க வழி சொல்லுங்க

நான் ஒல்லியாக இருக்கிறேன்,என் உடல் எடை அதிகரிக்க எதேனும் வழி சொல்லுங்க

//nan megavum malithaga erukkiren// மெல்லிசாக‌ இருக்கிறது பிரச்சினை இல்லை சிந்து. எலும்பும் தோலுமாத் தெரிஞ்சால் தான் வடிவில்லாமல் இருக்கும். //nan megavum idaga erukkiren// இதாகவா ஐதாகவா! ஐதாக‌... அதாவது நிறை குறைவாக‌ இருக்கிறீர்களா? உடற்பருமன் சுட்டு சரியாக‌ இருக்கிறதா என்று பாருங்க‌. ( http://www.arusuvai.com/tamil/node/14527 ) சரியா இருந்தால் யோசிக்க‌ வேணாம். குறைவாக‌ இருந்தால் கொஞ்சம் சாப்பாட்டைக் கவனிக்கலாம். சோறு, பாண் அளவைக் கூட்ட‌ வேண்டாம். கண்ணின் உள்பக்கம் சிவப்பாக‌ இருக்கிறதா வெளிறியது போல் இருக்கிறதா என்று பாருங்க‌. வெளிறி இருந்தால் கடும்பச்சை நிறக் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மச்சம் சாப்பிடுவீங்கள் என்று நினைக்கிறன். சாப்பிடுங்க‌. கோழியை விட‌ இறைச்சி நல்லது.

//ithanal nan ennai palavinam akegondan// ஒழுங்காச் சாப்பிட்டால் உடற்பலவீனம் சரியாகீரும். மனம்... அதை நீங்கள் முயற்சி செய்து பலமாக்கிக் கொள்ள‌ வேணும்.

//nan penthalla pattuvittan// மெலிவா இருக்கிறதால‌ உங்களை யாரோ பின்தள்ளினாங்கள் என்கிறீங்களா!!! இந்தக் காரணத்துக்காக‌ யாரையும் யாரும் பின்தள்ள‌ ஏலாது கண்ணா. உங்களை நீங்கள் கைவிட்டால் தவிர‌ இது சாத்தியம் இல்லை. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்க. உங்கட‌ மனதில் வேற‌ ஏதோ பிரச்சினை இருக்க‌ வேணும். அதிலிருந்து வெளிய‌ வரப் பாருங்க‌. சொல்ல‌ ஏலும் என்றால் சொல்லுங்க‌. என்னால் ஏதாவது உதவி செய்ய‌ ஏலுமா எண்டு பாக்கிறன்.

தமிழ்ல‌ தட்டினீங்களெண்டால் வாசிக்கச் சுகமா இருக்கும். ஃபோன்ல‌ தட்டுறீங்களா!!

‍- இமா க்றிஸ்

Nallennai-la vai koppalinga

மேலும் சில பதிவுகள்