கால் வளைந்து இருக்கு,help

என் பையனுக்கு 14 மாதங்கள் ஆகிறது, அவன் 10 மாதத்தில் நடந்து விட்டான், இப்பொ ஒடறான்.chair, table மேல் ஏறிவிடுவான். கை பிடித்து கொண்டு மாடிபடி ஏறுவான். ஆனால் கால் கொஞ்சம் வளைந்து இருக்கு. 2, 3 பேர் கேட்டாங்க. கஷ்டமா இருக்கு.starting நடை அவ்வளவு தானா.but very active.Doctor கிட்ட காட்டினொம் பிறக்கும் போதெ அப்படி இருந்ததால் போக போக சரி ஆகிடும் சொன்னார். pls advice

சேம் பிராப்லம். 1 வயதில் எனக்கும் அப்படி தான் இருந்ததாம். அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. நீங்க அசைவம் என்பதால் ரொம்ப வசதியா போச்சு. எங்கம்மா டாக்டரின் பரிந்துரைப்படி செய்தது இது தான். அதாவது சமைத்த மீனில் நடுவில் கொஞ்சம் கருப்பு கலரில் இருக்கும் பகுதியை அதிகமாக சாப்பாட்டில் சேர்க்க வேண்டுமாம். கும்லா மீன், முட்டை பாரை, தேங்காய் பாரை போன்ற மீனில் இருக்கும்.

இதெல்லாம் நீங்கள் செய்வது. அதற்கு முன்னால் நல்ல ஒரு டாக்டரை அணுகி மகனை காட்டுங்கள். அவர் பார்த்து சொல்லுவார். எந்த குறையும் இருக்க கூடாது. அப்படியே சின்னதாக இருந்தாலும் சிறுவயதில் வைத்தியம் செய்தால் உடனே குணமாகிவிடும். கவலை கொள்ள வேண்டாம்.

ஒரு வேளை குழந்தையின் நடைவாகு கூட அப்படி இருக்கலாம். அதானால் எதற்கும் கவலை வேண்டாம். டாக்டர் என்றால் சரியாக சொல்லிவிடுவார்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

டாக்டரே சொல்லியாச்சு அதனால் கவலைபடாதீங்க...சில குழந்தைகளுக்கு அப்படி இருக்கும்..உறவினர் குழந்தைகள் இரண்டு பிள்ளைகளை இப்படி பார்த்திருக்கிறேன்..தானாக ஒரு 4 வயது போல் சரியாகிடுச்சு..எண்ணை தடவி நேரா மசாஜ் பண்ணி விடுங்க
ரொம்ப எடை அதிகமா இருந்தாலும் வளையும்.

தளிகா மேடம் என் பையன் எடை 10 கிலோ தான். ஒல்லியாக தான் இருப்பான்.

jaya

மேலும் சில பதிவுகள்