மீன் வறுவல்..

தேவையான பொருட்கள் :
மீன் துண்டுகள் - 15
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கி கொள்ளவும் )
தக்காளி - 1 (பெரியது ,பொடியாக நறுக்கி கொள்ளவும் )
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கி கொள்ளவும் )
மிளகாய் தூள் காரத்துக்கு தேவையான அளவு
மஞ்சள் தூள் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
1 . மீன் துண்டுகளை சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும்
2 .மீன் துண்டுகளை ஒரு பத்திரத்தில் எடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி வைத்து கொள்ளவும்...பிராட்டிய மீன் துண்டுகளை பிரிட்ஜில் வைத்தால் உடையாமல் வரும்..
3 . ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தயும் நன்கு மைய வதக்கி கொள்ளவும்...
4 . பிரட்டி, ஊற வைத்துள்ள மீன் துண்டுகளில் வதக்கி வைத்துள்ளதை சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளவும்...
5 . தோசை கல்லில் எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை மசாலாவுடன் வைத்து பொரித்து எடுக்கவும்.....

இது தான் நான் அறுசுவையில் கொடுக்கும் முதல் குறிப்பு.. தவறு எதுவும் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்...இந்த குறிப்பு என்னுடைய house owner அம்மா எனக்கு சொல்லி கொடுத்தது..என்னுடைய husband க்கு பிடித்தது...இதை அறுசுவையில் பகிர்ந்து கொள்ளணும்னு ரொம்ப நாள் ஆசை...அனால் ரொம்ப தயக்கமா இருந்துது...தெரிஞ்ச அளவுக்கு சொல்லி இருக்கேன்....தப்பு இருந்த சாரி...

SaranyaBoopathi

வணக்கம் தோழி, நல்ல குறிப்பு..ரொம்ப எளிமையாவும் இருக்கு..இந்த குறிப்பை யாரும் சமைக்கலாம் பகுதில் போடிருந்தல் அனைவர்க்கும் பயனளிக்கும் இல்லையா??
குறிப்புக்கு நன்றி..

சரண்யா குறிப்பு கொடுப்பது எப்படின்னு அறுசுவையில் இருக்கே... இங்க போட்டா சில நாட்களில் காணாம போகும்... அது மட்டுமில்லை ஒவ்வொரு குறிப்புக்கும் ஒரு இழை என்றால் மற்ற இழைகளும் :( முகப்பில் இருந்து காணாம போகும். குறிப்பு அருமை... அதை அப்படியே arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்க... அண்ணா பிழை பார்த்து சரி செய்ய சொல்வார். 25 குறிப்புகள் ஆகும் போது கூட்டாஞ்சோறு பகுதியில் உங்க பெயரும் இணைக்கப்பட்டு குறிப்புகளும் வெளி வரும். :)

இன்னும் பல குறிப்புகள் தந்து கூட்டாஞ்சோறு பகுதியில் விரைவில் உங்களை காண காத்திருக்கோம். உடனே வெளி வர வேண்டும் 25 குறிப்புகள் கடினம் என்றால் அடுத்த முறை சமைக்கும் போது ஸ்டெப்-பை-ஸ்டெப் ஆக படம் எடுத்து அதே மெயிலுக்கு அனுப்பிடுங்க... 2 நாட்களில் வெளியாகிடும் "யாரும் சமைக்கலாம்" பகுதியில். சரியா?? சொன்னதுக்காக கோவிச்சுக்காதீங்க... இங்க போட்டா இதுக்கு மதிப்பு இருக்காதுன்னு தான் உங்களுக்கு விளக்கமா பதிவு போடுறேன். சந்தேகம் இருந்தா கேளுங்க, சொல்ல தோழிகள் காத்திருக்கோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் வித்யா...
பதில் தந்ததற்கு மிக்க நன்றி.. எனக்கும் ரொம்ப ஆசை தான்.....எங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இல்லை..அம்மா வீட்டுக்கு வரும் போது மட்டுமே செய்ய முடியும்.... கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்....நன்றி..

SaranyaBoopathi

வனி அக்கா உங்களுக்கு தெளிவா பதில் குடுதுருகாங்க பாருங்க..நீங்க மெயில் அனுப்பிடுங்க..அது எல்லாருக்கும் உதவும்...தோழி..

நன்றி வனிதாக்கா...

எனக்கு 25 குறிப்புகள் கொடுக்கறதுன்னா ரொம்ப கஷ்டம்,,அவ்வளவு தெரியாது..நீங்க சொன்ன மாதிரி யாரும் சமைக்கலாம் பகுதிக்கு அனுப்ப கண்டிப்பா ட்ரை பண்ணறேன்... அப்றோம் உங்களுக்கு ஒரு spl தேங்க்ஸ்..இப்ப போன வாரம் நீங்க போட்டிருந்த மெஹந்தி desing போட்டுட்டு போனேன்..எல்லோரும் நல்லா இருக்குனு சொன்னங்க...உங்க கூட பேசணும் நு நினைப்பேன்..ஆனா முடியறது இல்ல..இப்போ சொல்லிட்டேன்..தேங்க்ஸ் வனிக்கா..

SaranyaBoopathi

மிக்க நன்றி சரண்யா... பாராட்டுக்கள் நியாயமா உங்களை தான் சேரனும்... காரணம் டிசைன்'அ அழகா போட்டது நீங்க தானே!!! :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றாக இருக்கிறது படிக்கும் போதே! நிச்சயம் முயற்சி செய்து பார்க்கிறேன்

மேலும் சில பதிவுகள்