உருண்டை குழம்பு செய்வது எப்படி?

உருண்டை குழம்பு செய்வது எப்படி?

யாரும் சமைக்கலாம் பகுதியில் குழம்பு என்ற பிரிவில் நம் தோழிகள் நிறைய குறிப்பு கொடுத்துள்ளார்கள்.அங்கே சென்று பார்த்தல் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்..

http://www.arusuvai.com/tamil/node/2671

http://www.arusuvai.com/tamil/node/3453

http://www.arusuvai.com/tamil/node/6289

http://www.arusuvai.com/tamil/node/8455

http://www.arusuvai.com/tamil/node/10946

http://www.arusuvai.com/tamil/node/10945

http://www.arusuvai.com/tamil/node/10668

லக்ஷ்மி...உங்க வேலைய கரெக்டா செய்துடீங்க நன்றி. எனக்கு பல் நாட்களாக ஒரு சந்தேகம்.........

உருண்டைகள் சாஃப்டா இருக்கணும் ஆனால் உடைய கூடாது இதற்கு என்ன செய்யணும்?

அப்புறம் இதே சாஃபட் உருண்டைகள் போட்டு அது பொறித்ததா? இல்லை அவித்ததா? என்றும் தெரில ஆனால் புளி இல்லாமல் அது கூட்டு மாதிரியா இல்லை குருமா மாதிரியா என்று எனக்கு இன்னும் தெரியல, சின்ன வயசில பிரன்ட் வீட்ல சாப்பிட்டேன்...ஆனால் இன்னும் என்னால அதே மாதிரி செய்ய முடியல!

அதுவும் என்னான்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.....சொல்லல அப்புறம் யார்கூடவும் பேச மாட்டேன்........

ஏங்க, பதில் தெரிந்தவங்க யாராவது சொல்லலாமில்லையா!!!
என் சந்தேகத்துக்கு பதில் சொல்லுங்களேன்...

நான் இனிமே யார்கூடயும் பேசறதாயில்லை...
2 மணி நேரத்துல ஒரு தலைப்பு முகப்பிலிருந்து காணாமல் போற அளவிருக்கு மிகவும் வேகம் இருக்கு ஆனால் ஓர் பதில் மட்டும் கிடைக்க மாட்டுது...
...நான் இந்த பக்கம் இனிமே வரதாயில்லை...

அன்பு பாப்ஸ் உமா

கூல், கூல், டென்ஷன் ஆகாதீங்க.

2 நாளாகவே தோழிகள் யாரும் அவ்வளவாக வரக் காணோம். என்ன காரணம்னு தெரியலை.

எனக்கும் பருப்பு உருண்டை குழம்பு டேஸ்டியாக வைக்கத் தெரியலை. அவ்வப்போது செய்யறேன், இருந்தாலும் சூப்பர்னு சொல்ற அளவுக்கு வரலை. அதனாலே நானும் இந்த இழைல யாராவது பதில் சொல்வாங்கன்னு ஆர்வத்தோட பாத்துட்டுதான் இருக்கேன். ஜலீலா மற்றும் தோழிகள் பார்த்திருந்தாங்கன்னா, கண்டிப்பாக பதில் சொல்லியிருப்பாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்.

பருப்பு உருண்டை என்று சொன்னாலே அது ஆவியில் வேக வைத்ததுதான். எண்ணெயில் போட்டு எடுக்கறதாக இருந்தால், வடையாகத் தட்டிப் போட்டு, அப்புறம் மோர்க் குழம்பில் போடுவாங்க. சாஃப்ட் ஆக வர்றதுக்கு, கடலைப்பருப்புடன் கொஞ்சம் உளுத்தம்பருப்பு சேர்க்கலாம்னு என்னோட ஐடியா.

நீங்க சின்ன வயசில சாப்பிட்டதுன்னு சொல்ற வர்ணனையை வச்சுப் பார்க்கும்போது, மோர்க்குழம்பில் போட்ட உருண்டைகளை சொல்றீங்கன்னு கெஸ் பண்றேன். இந்த பருப்பு உருண்டைகளை புளிக்குழம்பிலும் போடுவாங்க, மோர்க்குழம்பிலும் போடுவாங்க. மஞ்சள் கலரில் இருந்ததால், உங்களுக்கு அது கூட்டா, குருமாவன்னு குழப்பம் வந்திருக்கு. உருண்டை போட்டு செய்கிற மோர் குழம்பு, கொஞ்சம் கெட்டியாகி விடும். காரமும் குறைவாக இருக்கும்.

நீங்க மேலே சொல்லியிருக்கும் இழைகளும் பாருங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்