தைராய்டு பிரச்சனை

அன்பு தோழிகளே எனக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது .இன்னும் குழந்தை இல்லை .என் மனைவிக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது.அதற்கு என்ன மாத்ரி உணவுகள் சாபிட்டால் கன்ட்ரோல் லில் வைக்க முடியும் . யாராவது தெரிந்தால் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் . தங்களின் பதில்களை எதிர் பார்த்து ஆவலுடன் சௌமியன்

செளமியன் சார் தைராய்டு பிரச்சனை பற்றி நிறைய பேசி இருக்காங்க. உங்களுக்கு அந்த த்ரெட்டா தேடி தருகிறேன். உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கலாம்.

இந்த link போய் பாருங்கள் selvibabu மிகவும் தெளிவாக hypothyroid பற்றி கூறி உள்ளார்.
http://www.arusuvai.com/tamil/forum/no/11771?from=140&comments_per_page=10

நன்றி
ஸ்வர்ணா
http://www.arusuvai.com/tamil/node/8742

வினோஜா நீங்க சொன்ன லிங்க் கை எப்படி அறுசுவை இல் ஓபன் செய்வது .எனக்கு தெரியவில்லை .ப்ளீஸ் சொல்லுங்க சௌமியன்

வினோ கொடுத்து இருக்குற லின்க்க காப்பி பண்ணி அட்ரஸ் பார்ல போட்டு எண்டர் அமுக்குங்க செளமியன் அந்த பேஜ் ஓபன் ஆகிடும்

வினோஜா நீங்க தந்த லிங்க் இல் thairaid உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றிய விபரம் இல்லை . யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கு உதவியாய் இருக்கும் தங்களின் தகவலுக்கு என் நன்றிகள் சௌமியன்

சௌமியன்,
நலமாக இருக்கிறீர்களா.. அன்று கெட் டு கேதரில் அவசரமாகக் கிளம்ப வேண்டி இருந்ததால் உங்களிடமும்.உங்கள் மனைவியிடமும் பேச முடியாமல் போய் விட்டது.. பின் வரும் லின்க்கைப் பாருங்கள்.. தைராய்டைப் பற்றி கூறப்பட்டுள்ளது.. உங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்..
கூகுளில் தேடிப் பாருங்கள்.. இன்னும் பல விவரங்கள் கிடைக்கும்...

http://www.thyroidfoodsdiet.com/

தங்களின் தகவலுக்கு என் நன்றிகள் சௌமியன்

சகோதரர் சௌமியன் அவர்களே நலமா...?
நான் உங்களிடம் பேசுவது இதுவே முதன் முறை என்று நினைக்கிறேன்.
இப்போது விஷயத்திற்க்கு வருகிறேன்.
எனக்கும் கடந்த நான்கு வருடங்களாக ஹைப்போ தைராய்ட் பிரச்சனை இருந்து கொண்டிருக்கின்றது.உங்களுடைய மனைவிக்கு இருப்பது என்ன மாதிரியான தைராய்டு என்று எனக்கு தெரியவில்லை.ஏன் கேட்கிறேன் என்றால் தைராய்டில் மூன்று விதம் இருக்கின்றது.பெரும்பாலானவர்களுக்கு ஹைப்போ மற்றும் ஹைப்பர் தைராய்டுகள் தான் இருந்து கொண்டிருக்கின்றது.
ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பது.இது அதிக நாட்கள் இருப்பவர்களுக்கு தொண்டையில் வீங்கினாற்போல் காணப்படும்.வெய்ட் லாஸ் ஏற்படும்.
ஹைப்பர் தைராய்டு உள்ளவர்களுக்கு சுரக்கும் தன்மை குறைவாக இருக்கும்.வெய்ட் கூடி கொண்டே போகும்.
இந்த இரண்டுமே சரியாக இயங்க அதி காலையில் தைராய்டு மாத்திரை எடுத்து கொள்வதுதான்.இதன் அளவு 50mcg,100mcg என்ற அளவுகளில் கிடைக்கும்.
தைராய்டு டெஸ்ட்டின் அளவினை பொருத்து மாத்திரை அளவையும் தருவார்கள்.எனக்கு டாக்டர் பரிந்துரைத்தது 100mcg ஆகும்.(எனக்கு ஆரம்ப நிலை அதிகமாக இருந்ததால்...)
இதை தவிர மருத்துவர் எனக்கு சொன்ன ஆலோசனையில் சாப்பாட்டிற்க்கும் இதற்க்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான்.இதை நான் நன்கு உறுதியாக சொல்வேன்.ஏனெனில் என் கணவர் டாக்டரிடம் இரண்டு மூன்றுமுறை கேட்டு விட்டார்.அதற்க்கு டாக்டர் “இது சர்க்கரை நீரிழிவு நோய் போல் மாத்திரை விடாமல் சாப்பிட்டு கொண்டிருக்கவெண்டும்.ஆனால் அந்த நோயை போல் இதற்க்கு சாப்பாட்டு கட்டுபாடு என்று ஏதும் இல்லை.இன்னும் சொல்ல போனால் தைராய்டு உள்ளவர்களுக்கு பலகீனம் தான் அதிகம் ஏற்படும்.எனவே அதிக சத்துள்ள ஆகாரங்களை சாப்பிடுங்கள்.ஆறு மாதத்திற்க்கு ஒருமுறை தைராய்டு டெஸ்ட்டு எடுத்து பாருங்கள்.”என்று இதுதான் சொன்னார்.வெய்ட் எப்படியும் அதிகமாகும்.அதற்க்கு உணவு கட்டுபாடு இல்லாமல் உடற்பயிற்ச்சி மேற்கொள்ளுங்கள் அதுதான் செய்யலாம்.என்றும் சொன்னார்.
எனவே நீங்கள் பயப்பட வேண்டாம்.உங்கள் மனைவியை நன்றாக சத்துள்ள பேரிச்சை பழம்,கீரை வகைகள் பழங்கள் எல்லாம் நன்றாக சாப்பிட சொல்லுங்கள்.மாத்திரையை தொடர்ந்து சாப்பிட சொல்லுங்கள்.குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டாகும்.உடல் பலகீனமாக இருப்பதனால் கூட கரு தங்காமல் இருக்கலாம்.
என் அக்கா மகளுக்கு கூட பதினாறு வயதிலேயே ஹைப்பர் தைராய்டு வந்து விட்டது.கடந்த ஆறு மாதத்திற்க்கு முன்புதான் திருமணம் முடித்து வைத்தோம்.தைராய்டினால் குழந்தை பாக்கியம் தடை படுமோ என்ற பயம் லேசாக இருந்து கொண்டிருந்தது.ஆனால் கடவுளின் உதவியால் இப்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கின்றாள்.டாக்டர் சொன்னது சத்து குறைவாக இருப்பதை மட்டும்தான் மற்றபடி எல்லாம் நல்லபடியாக இருப்பதாக கூறியுள்ளார்.

எனவே கவலை வேண்டாம் சகோதரரே....நம்பிக்கையோடு உங்கள் மனைவிக்கு நீங்கள் ஆறுதலாக இருந்து கடவுளிடம் பிரர்த்தனை செய்யுங்கள்.நிச்சயம் நல்ல செய்தியை எங்களுடன் விரைவில் பகிர்ந்து கொள்வீர்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

தோழி அப்சரா தங்களின் பதிவை பார்த்தேன் .தங்களின் நம்பிக்கை யான வார்த்தைகள் தந்த மகிழ்ச்சி இல் என் மனம் இப்ப சந்தோசமாக உள்ளது.எந்த வகை thairoid என்று பார்த்து சொல்கின்றேன் .மிக சிறிய வயதில் இருந்து ட்ரீட்மென்ட் எடுத்து வருகிறார்கள் .தற்பொழுது 50 mg அளவிலான மாத்திரை சாபிட்டு வருகிறார்..தொண்டை இல் மிக சிறிய அளவில் கட்டி உள்ளது.ஒரு வருடம் முன்பு பரிசோதனை செய்ததில் நார்மல் ஆக உள்ளது.50 mg மாத்திரை போதும் என்று சொன்னார்கள். மேலும் தொடர்ந்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .எங்களுக்கு மிக உதவியாய் இருக்கும். நன்றிகள் சகோதரி இப்படிக்கு சௌமியன்

சௌமியன், இது இப்ப பெரும்பாலனவர்களுக்கு இருக்கும் பிர்ச்சினை. கவலைப்பட ஒன்றுமே இல்லை. எனக்கும் இந்தப் பிரச்சினை இருக்கு. மாத்திரை வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும். ஒரு மணி நேரத்தின் பின்னர் சாப்பாடு உட்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாடுகள் இல்லை. நான் எதையும் ஒதுக்குவதில்லை. உப்பு மட்டும் அயோடின் கலந்த உப்பு பாவியுங்கள்.

உடற்பயிற்சி செய்வது நல்லது. சிலருக்கு வெயிட் ஏறிக் கொண்டே செல்லும். இதில் பயப்பட ஒன்றுமே இல்லை.
வாணி

தோழிகளே நாங்கள் குழந்தைக்கான சிகிச்சை பெற திருப்பூர் அல்லது ஈரோடு இல் நல்ல மருத்துவர் இருந்தால் தெரியபடுத்துங்கள் முகவரி உடன் மிகவும் உதவியாய் இருக்கும் சௌமியன்

மேலும் சில பதிவுகள்