பாகிஸ்தானி லான் துணிகள் எங்கு கிடைக்கும்??

அபுதாபி ,துபாயில் நல்ல பாகிஸ்தானி லான் சல்வார் கமீஸ் துணிகள் எங்கு கிடைக்கும்??அபுதாபியில் பல கடைகளிலும் லான் துணிகள் உள்ளது ஆனால் எல்லாம் வீட்டில் உடுத்தும்படியான அளவில் தான் உள்ளது..பாகிஸ்தானிகள் அணியும் நல்ல தரமான,நல்ல நிறங்களாலான துணிகள் எங்கு கிடைக்கும்?

http://urdustar.com/home/beauty-fashion/86478-lawn-prints-gul-ahmed.html

இந்த மாதிரியான லான் ரெடிமேட் அல்லது துணிகளை தான் கேட்கிறேன்.

தளிகா,நீங்க கொடுத்து இருக்கிற லிங்க்,அதில இருக்கிற டிசைன் எல்லாம் நல்லா இருக்கு. இந்த வகைகள் உங்களுக்கு ஆன்லைனில் கண்டிப்பாக கிடைக்கும்.ஹோல்சேல் மாதிரி வெப்சைட்டில் மெட்டீரியல் மட்டும் வாங்கலாம். இல்லை என்றால் அவங்களே தைத்தும் கொடுப்பார்கள், உங்களுடைய அளவுகளை நீங்க சரியாக எடுத்து அவங்களுக்கு அனுப்பனும்.
எனக்கு தெரிந்த தோழி இதேப்போல இப்போ தான் தீபாவளிக்கு வாங்கினாங்க...நானும் இதுவரை இது பற்றி தெரியாம இருந்ததாலே அதை பார்த்து அசந்து போயிட்டேன். மிகவும் நல்லா இருந்துச்சு.அவங்க நேரடியா இந்தியாவில இருந்து வாங்கினாங்க,நீங்களும் பாகிஸ்தானி லிங்க் கிடச்சா தேடிப்பாருங்க ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல வரும் பொழுது ஃப்ரி ஷிப்பிங் கூட உண்டு.
அப்படி இல்லைன்னா சொல்லுங்க எனக்கு தெரிஞ்ச பாகிஸ்தானி பிரன்ட் ஒருவரை கேட்டு சொல்றேன்.அவங்களை அடுத்த வாரம் தான் மீட் பண்ணுவேன். அவங்க போன வாரம் தான் பாகிஸ்தான் போயிட்டு வந்தாங்க(அவங்க தம்பி நிக்காஹ்).உங்களுக்கு வேண்டுமானால் விவரம் கேட்டு சொல்றேன்.

hai,yenaku tamil la type panna therila.....yenakkum lawn prints pathi sollunga.....nan germany....online la chudi material vanganum....ungalukku therindha site erundha sollunga....lawn prints um venum.......nanum online la lawn prints parthen,ana site kidaikala vanga....pls therindhal sollunga.........

மேலும் சில பதிவுகள்