கூவை

தேதி: November 20, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

இது சாதாரண பொருள்களை கொண்டு செய்யலாம். ஆனால், செய்வதற்கு கொஞ்சம் நேரம் ஆகும். மிகவும் சுவையாக இருக்கும். இஸ்லாமியர்கள் இதை பெருநாளுக்கு செய்வார்கள்.

 

பச்சை அரிசி - கால் படி
சீனி - கால் படி
தேங்காய் - ஒன்று
ஏலக்காய் - 6
புட் கலர்ஸ் (food colours) - 4 அல்லது 5 கலர்ஸ்
உப்பு - 2 சிட்டிகை


 

அரிசியை 6 மணி நேரம் ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை அரைத்து 3/4 லிட்டர் அளவிற்கு திக்காக பால் பிழிந்து எடுத்து கொள்ளவும்.
அரிசி ஊறியதும் கழுவி விட்டு, மிக்ஸியில் போட்டு ஏலக்காய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல், தேங்காய் பால் கொஞ்சம் சேர்த்து மையாக அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். அதனுடன் சீனி, உப்பு சேர்த்து கரைக்கவும்.
ஒரே அளவுள்ள 4 (அ) 5 கோப்பைகளை எடுத்து அதில் கரைத்து வைத்துள்ள மாவை எல்லா கோப்பைகளிலும் ஊற்றவும்.
ஒவ்வொரு கோப்பை மாவிற்கும் உங்களுக்கு விருப்பமான கலர்களை சேர்க்கவும்.
எலக்ட்ரிக் க்குக்கரின் உள்ளே 1/4 பங்கு நீர் ஊற்றி அதில் ஒரு கலவடையை வைத்து அதன் மீது ஒரு அலுமினிய சட்டியை வைத்து, அந்த சட்டியில் விருப்பமான நிறத்தில் உள்ள மாவை ஊற்றி வேக 10 நிமிடம் வேக விடவும்.
தண்ணீர் உள்ளே சொட்டாமல் இருக்க மூடியில் ஒரு துணியை கட்டி விடவும். 10 நிமிடம் கழித்து பார்க்கவும். மாவை தொட்டு பார்த்தால் கையில் ஒட்ட கூடாது. மாவு ஒட்டாமல் வெந்ததும் அதன் மேல் இன்னொரு கலர் மாவை ஊற்றி மூடவும். இப்படியே ஒவ்வொரு கலராக ஊற்றி வேக விடவும்.
எல்லா கலர் மாவும் வெந்ததும், அடுப்பிலிருந்து எடுத்து ஆற விட்டு டைமண்ட் வடிவில் வெட்டி எடுக்கவும்.

மாவு கரைக்கும் போது தண்ணியாக இருக்க கூடாது. ரொம்ப திக்காகவும் இருக்க கூடாது. ஒவ்வொரு கலரும் நன்கு வெந்தவுடன் தான் இன்னொரு கலர் ஊற்ற வேண்டும். இல்லாவிட்டால் கலர் தனித்தனியாக தெரியாது. எல்லாம் ஒன்றோடு ஒன்றாக கலந்து விடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும் ரஸியா.....நலம்தானே..?
கூவையை ரொம்ப அழகா கலர்ஃபுல்லா செய்து இருக்கீங்க.
பார்க்கவே ஆசையா இருக்கு.
இதை என் தோழி மூலம் தெரிந்து கொண்டு ஒரு முறை செய்து பார்த்தேன்.
கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்ததாலோ என்னவோ சாஃப்ட்டாவே வரல.
நீங்க வடிக்கட்ட சொல்லி இருப்பது அதனால் தானோ..!!!!
நிச்சயம் நான் நீங்க சொன்ன முறையில் செய்து பார்ப்பேன்.
நல்ல ரெஸிபியை கொடுத்து அசத்திய உங்களுக்கு,
எனது பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ரஸியா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு இது. இங்கே குவே(kue) என்பார்கள். ரொம்ப பொறுமையா அழகா செய்து காட்டியிருக்கீங்க.இங்கே ஸ்டீமரில் வைத்து ஆவியில் வேக வைப்பார்கள்.

நீங்க சொல்லியிருப்பது போல் நேரடியாக எலக்ட்ரிக் குக்கரில் செய்ய வேண்டுமா அல்லது ஸ்டீமர் தட்டு போட்டு செய்ய வேண்டுமா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அலைக்குமுஸ்சலாம் அப்சரா மேம்!பாராட்டியதற்கு ரொம்ப நன்றி,என் அம்மா இதை துணியில் வடிகட்டுவார்கள்,ஆனால் கொஞ்சம் நேரமாகும்,அதனால் தான் நான் 2 வலை உள்ள வடிகட்டியில் வடிகட்டுவேன்,காரணம் கூவை மெதுவாகவும் வாயில் எதுவும் தட்டுப்படாமலும் இருக்கனும்.ஆனால் இதை செய்ய கொஞ்சம் பொறுமை வேண்டும்,பார்த்து பக்குவமாக செய்யுங்கள்.ஆரம்பத்தில் எனக்கும் சரியாக வரவில்லை,போக போகதான் வரும்,முயன்று பாருங்கள்.

Eat healthy

பார்க்கவே ரொம்ப கலர்புல்லா இருக்கு.பாராட்டுக்கள்.எங்க ஊரிலும் ரமலானில் செய்வோம் பேரு வட்டியாப்பம்.ஆனால் கலர் எல்லாம் இல்லை வெள்ளையாக தான் இருக்கும்.தட்டில் ஊற்றி வைத்து இட்லிசட்டியில் வேக வைப்பாங்க.

ரசியா இந்தோனேஷியாவில் இதே இனிப்பு செய்வார்கள்.

ஒரு சின்ன டிப்ஸ் சொல்லலாமா?
மாவை அரைத்து வடிகட்டுவதற்கு பதிலாக அரிசியை ஊற வைத்து நைசாக மிக்சியில் பொடித்து அதை சலித்து பின் அதனுடன் கெட்டியான தேங்காய்ப்பால் சீனி உப்பு எல்லாம் கலந்து நீங்கள் சொன்னது போலவே செய்வாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கும் கூவை மிகவும் பிடிக்கும்.இங்கே என்றால் எந்த ஊர்?நான் குக்கரில் நேரடியாக வேக வைக்கவில்லை.குக்கரின் உள்ளே 1/4 பாகம் நீர் ஊற்றி அதில் 1 கலவடையை(வட்டமாக இருக்கும்)வைத்து அதன் மேல் 1 அலுமினிய சட்டியை(படத்தில் பாருங்கள்)வைத்து தான் கூவையை வேக வைத்திருக்கிறேன்.இதே முறையில் இட்லி சட்டியிலும் செய்யலாம்.கூவை ஆவி முறையில் தான் வேக வைக்கனும்.

Eat healthy

ரசியா நான் திருமதி கவிசிவா :). இங்கேன்னா இந்தோனேஷியா மலேசியா போன்ற நாடுகள். சாரிப்பா நான் தான் தெளிவா சொல்லியிருக்கணும் :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பாராட்டுக்கு நன்றி!நீங்கள் சொல்வது வட்டியாப்பம்,அது வேறு,நாங்கள் அதை வட்டிலாப்பம் என சொல்வோம்.அருசுவை முகப்பில் இந்த குறிப்பும் வெளியாகியுள்ளது.பாருங்கள்.வட்டிலாப்பம் பால்,முட்டை,சீனி,முந்திரி,ஏலக்காய் ஆகியவை சேர்த்து செய்வது,கூவை அரிசியில் செய்வது,இரண்டும் பொருளிளும் ருசியிளும் வேறு வேறு

Eat healthy

நீங்கள் சொல்வது போலும் அரிசிமாவில் செய்வாங்க,ஆனால் எனக்கு அரிசியில் தான் செய்து பழக்கம்,அரிசியை ஊற வைத்தால் எப்படி பொடி செய்ய முடியும்?அரைக்கதான் முடியும்.ஹிஹிஹி.....ஜோக் சொன்னேன்,அடுத்த முறை மாவில் செய்து பார்க்கிறேன்.அரிசியை ஊற வைத்து அரைப்பதை விட அரிசி மாவில் செய்வது நேரம் மிச்சம்.முயன்று பார்க்கிறேன்.

Eat healthy

வட்டியாப்பம் வேற,வட்லாப்பம் வேற.தேனிமாவட்டத்தில் பச்சரிசி தேங்காய் சேர்த்து செய்றது பேரு வட்டியாப்பம்.இதில் சினிக்கு பதில் கருப்பட்டி சேர்த்தும் செய்வாங்க.

சாரி ரீம் அனக்கு இதைப்பற்றி தெரியல,உங்களுக்கு தெரிந்தால் குறிப்பு தாருங்கள்.செய்து பார்க்கிறேன்,நன்றி.

Eat healthy

நீங்க குடுத்து இருக்கிற அதே குறிப்புதான் எங்க ஊரில் இந்த பேரில் சொல்வாங்கன்னு சொல்ல வந்தேன்

ரஸியா,
கலர்ஃபுல்லா,அழகா செய்து இருக்கீங்க.முடியும் போது செய்து பார்க்கிறேன்.மேலும் நிறைய ரெசிப்பிகள் கொடுங்க.வாழ்த்துக்கள்.

அருமையான குறிப்பு, கூடவே உரையாடல் போல் கருத்துரைகள். ரசித்தேன்.
சமைத்துப் பார்த்துவிடுகிறேன்.

ரசியா... பொறுமையா சூப்பரா சுவையான குறிப்பு கொடுத்திருக்கீங்க. செய்து பார்க்க ஆசை வந்துடுச்சு. அவசியம் செய்துட்டு சொல்றேன். நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரசியா, இந்த பெயர் இப்பதான் கேள்வி படறேன். பொறுமையா அழகா செய்திருக்கீங்க, வாழ்த்துக்கள் ரசியா. தொடர்ந்து பல குறிப்புகள் தரணும் சரியா. அதுவும் இதே மாதிரி வித்தியாசமானதா கொடுங்க ரசி:)) வாழ்த்துக்கள்

அன்புடன்
பவித்ரா

பாராட்டுக்கு மிக்க நன்றி,உற்சாகப்படுத்துங்கள்.
சமைத்துபார்த்துட்டு சொல்லுங்க புனிதா.
மிக்க நன்றி வனிதா,செய்துட்டு கண்டிப்பா பின்னூட்டம் கொடுங்க.
ஹெல்லோ பவித்ரா!வித்தியாசமா குறிப்புகள் குடுக்க முயற்சிக்கிறேன்,என் பெயர் புதிதா இருக்கா? அல்லது எனது குறிப்பின் பெயர் புதுசா இருக்கா?

Eat healthy

அன்பு ரஸியா,

பார்க்கறதுக்கு ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கு. குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இதுவரை நான் ஃபுட் கலர்ஸ் சேர்த்து எதுவும் செய்ததில்லை. ஃபுட் கலர்ஸ் எந்த பிராண்ட் நன்றாக இருக்கும்?

விருப்பப் பட்டியலில் சேர்த்திருக்கிறேன். நேரம் கிடைக்கிறப்போ, செய்து பார்த்து விடுகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் ரஸியா?

பார்க்கும் போதே சாப்பிடனும் போல் உள்ளது. செய்து பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன் - அன்புடன் மஞ்சுளா அரசு

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

என்னை அன்பு ரஸியா என்று அழைத்தற்கும் எனது குறிப்பை விருப்ப பட்டியலில் சேர்த்ததற்கும் பூரித்து போய் விட்டேன்.விஷேஷ நாட்களிலும் குழந்தைகளுக்காகவும் மற்றும் விருந்தாளிகளுக்காவும் இந்த மாதிரி கலர்ஃபுல்லா செஞ்சா விரும்பி சாப்பிடுவாங்க & பார்க்கவும் நன்றாக இருக்கும்.எனக்கு என் அம்மா தான் கலர் பௌடரை ஊரிலிருந்து வாங்கி அனுப்புவாங்க,ஒரு முறை வாங்கி வந்தால் நிறைய நாள் வரும்.பொதுவாக இதை சர்பத் ஃப்ரஷாக செய்யும் நம்பிக்கையான கடைகளில் தான் வாங்குவார்கள்.

Eat healthy

கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் கொடுங்க,நன்றி

Eat healthy

பார்க்க அழகாக உள்ளது.கலர்புள்ளாக உள்ளதால் கிட்ஸுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன்.எனக்கு ரொம்ப பிடிக்கும்.ட்ரை பன்னிட்டு சொல்றேன்.

சூப்பர்ங்க..பார்த்தவுடன் முதலில் பதிவு போட முயன்றேன்....பதிக்கும்போது
சிஸ்டம் ப்ராப்ளம்...
இந்த கூவையை மலேசியாவில் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன்..பார்ட்டிகளில்.....உங்க குறிப்பு பார்த்ததும் அந்த ஞாபகம் வந்துவிட்டது...

இவ்வளவு அழகாக சுவையாக வர பொறுமையாய் செய்யவேண்டும் இல்லையா?அந்த பொறுமையை வாங்கியபின் தான் முயற்சிக்கவேண்டும்.....

ஆனால் செய்து பார்க்க மிகவும் ஆசை...நல்ல குறிப்புக்கு வாழ்த்துக்கள்

அன்புடன்
(இளவ)ரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்க,இதற்கு வெகு நேரம் ஆகும்,கண்டிப்பாக குழந்தைகள் மட்டுமின்றி எல்லோருக்கும் இது பிடிக்கும்,நான் ஒவ்வொரு பெருநாளுக்கும் செய்து விடுவேன்,இது என் அம்மாவின் ஸ்பெஷல்!!!

Eat healthy

உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி!இதை மலேசியாவில் செய்வார்களா?கண்டிப்பாக இதற்கு பொருமை அவசியம்,நான் இதை ஹஜ் பெருநாளுக்கு முந்தய இரவு செய்தேன்,முடிய இரவு 12.30 ஆகிவிட்டது,காரணம் ஒவ்வொரு கலரும் நல்லா வெந்தபின் தான் அடுத்த கலர் ஊற்றனும்,ஆதலால் நாம் பொருமையாகத்தான் இதை செய்ய வேண்டும்,நீங்கள் இதை செய்வதானால் காலை வேலையில் ஆரம்பியுங்கள்,அப்போதுதான் அவை வேகும் வரை நாம் வேறு வேலைகள் செய்ய முடியும்.அவ்வப்போது குக்கரில் தண்ணீர் உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

Eat healthy

.

Eat healthy