திருமண அழைப்பிதழ் :)

திருமண அழைப்பிதழ்

இதயத்தில் வழிந்து போகுமளவிற்கு
வார்த்தைகளை வாழ்த்துக்களாக ....
இப்போதிலிருந்தே
எதிர்ப்பார்த்த வரை
சேமித்து வையுங்கள்...

நிலாவிற்கு
வானம் போல
விழாவிற்கு நீங்கள்...

புன்னகையோடு வந்து
நீங்கள் பூக்கள் வீசினால்
இதழ்கள் மட்டுமல்ல
எங்கள் இதயத்திலும் பூப்பூக்கும்...

மேகமாய் வந்து
மழையாய் வாழ்த்துங்கள்

எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாது
நட்பையும் அன்பையும் மட்டும் எதிர்ப்பார்க்கும்
எனதருமை அறுசுவை தோழர் தோழிகளின் வாழ்த்தானது
புதுமணத் தம்பதிகளாக நாங்கள் தொடங்கும் வாழ்விற்கு
ஒளிவிளக்காய் அமையும்..

மேலும் விபரங்களுக்கு கீழுள்ள லின்க்கை புதிய பக்கத்தில் காப்பி பேஸ்ட் செய்து பார்க்கவும். இதை நேரில் நான் அழைப்பதாக கருத்தில் கொள்ள வேண்டுகிறேன் ;). கெஸ்ட் புக்கில் (Guest Book) உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

***Invitation Link : Karthick Weds Ramya***
http://www.mywedding.com/karthickwedsramya/

நன்றி...;)

Wish u all the best,happy marriage life.

with love Manimekalai

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

ஹாய் ரம்யா, உடம்பு இப்போது சரியாகி விட்டதா? கல்யாண பயமா? அப்புறம் உஙகளுக்கு எனது அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள். மணமக்கள் நீவிர் பதினாறும் பெற்றுபெருவாழ்வு வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சம். ராதா- சாமினாதன்

ரம்யா கார்திக் திருமணத்திற்க்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக எங்களது மனம் கனிந்த அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்.மணமக்கள் சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறோம்.

ஹாய் ரம்யா அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தோழி ரம்யா கார்த்திக் நீங்கள் திருமண வாழ்வில் இணையும் நாள் எப்போது என்று சொன்னால் நன்றாக இருக்கும் . வாழ்த்தை அன்று சொன்னால் இன்னும் மகிழ்வாக இருக்கும் .எனினும் தாங்கள் இருவரும் வாழ்வில் ஆதர்ச தம்பதிகளாக வள்ளுவர் வாசுகி போல பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் மேலும் தங்களுக்கும் என் மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள் நட்புடன் சௌமியன் என்ற நாச்சியப்பன் திருப்பூர் இல் இருந்து.

அன்பு ரம்யா

எதிர்பார்த்த நன்னாள் மிக அருகில்.
உங்கள் இல்லற வாழ்வு இனிதே துவங்கி நன்றாய் மலர்ந்திட
வாழ்த்துக்கள்.

Enjoy every seconds.
God belss you.

amutha & ridhanya

ரம்யா உங்களை வாழ்த்த வயது இல்லையென்றாலும் வாழ்த்த மனசு உள்ளது.என்வே வாழ்த்துகிறேன். நீங்கள் வாழ்வில் எல்லா சந்தோஷங்களையும் பெற்று,நலமுடனும் சமாதனாமுடனும் வாழ மனதார வாழ்த்துகிறேன். GOD BELSS YOU.

உன்னை போல பிறரையும் நேசி.

ரம்யா கார்த்திக்,
உங்கள் பெயர் பொருத்தம் போலவே உங்கள் இருவரின் ஜோடி பொருத்தமும் அருமை.வள்ளுவரின் குறளைப்போல் என்றும் சேர்ந்து இருக்க வாழ்த்துக்கள்.எல்லா செல்வங்களும் பெற்று,நிறைவாய்,நிம்மதியாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்.வாழ்த்துக்கள்.

ஹாய் ரம்யா அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்.

Brintha
இதுவும் கடந்து போகும்

வாழ்த்துக்கள் ரம்யா! மணமாகப் போகும் நீங்கள் இருவரும் வாழ்வில் எல்லா செல்வ‌ங்களையும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன். உங்களின் இன்விடேஷன் லிங்க்கும் பார்த்தேன். திருமண ஃபோட்டோக்களும் விரைவில் போடுங்கள், எதிர்ப்பார்க்கிறோம் :) இன்னும் 19 நாட்கள்தான் உள்ளது. நாட்களை எண்ணிக்கொண்டே இருக்கிறீர்களா..? :)))

மேலும் சில பதிவுகள்