கல்பனா சரவணக்குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!

நம் தோழி கல்பனா,
4 ஆண்டு முடிந்து 5 ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் கல்பனா சரவணகுமார் அவர்களை வாழ்த்த என் இதயத்தில் இருந்து சில வரிகள்,

ஜனனம் மரணம் இரண்டிற்கும் இடைபட்ட
பயணம் தான் வாழ்க்கை
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும்
இன்ப சோழைவனம் தான் இத் திருமண பந்தம்!

கற்பனையில் உருபெற்றா ஒருவனை (ஒருவளை)
காணும் போது நதியாய் பொங்கி வரும்
அன்பே தெய்வீக காதல் அதான் பெண்
பார்க்கும் நேரம்!
சந்தோஷங்கள் ஆயிரம் அதை சொல்ல
வார்த்தைகள் இல்லை.

இரு உள்ளங்கள் இணைந்த இந்நாளை(27.11.2006)தங்கள்
பொன் நாளாக கொண்டாடும் எங்கள் இதயம் கவர்ந்த
இருவருக்கும் ;
நிலவை பார்! அதற்கு தேய்பிறை உண்டு -அது போல
வாழ்வில் ஏற்ற தாழ்வுகள்,கசப்பு,இனிப்பு இவற்றில்
நீரும் மீனும் போல இருவரும் இணைந்தே
செல்ல என்றும் ஆனந்தமும் மகிழ்ச்சியும்
நிறைந்து வாழ வாழ்த்துகிறோம்.

by

தேவி&அறுசுவை தோழிகள்

அறுசுவையின் கதை பகுதியின் நாயகி, கருத்து கண்ணம்மா, ரெட்டை செல்வங்களின் தாய், மாண்புமிகு சரவணகுமார் குடும்பத்தின் தலைவி, இதுக்கு எல்லாம் அதிபதி யாருன்னு பாக்கறீங்களா?? அட அதாங்க, நம்ம காங்கோ கல்ப்ஸ்.
நாளை(27 -11 -2010) கல்பனா சரவணகுமார் - அவர்களின் திருமணநாள். அறுசுவை தோழர், தோழிகளின் வாழ்த்து கிடைக்கட்டும், வாழ்த்தலாம் வாங்க!!!!

இனிய தோழி கல்ப்ஸ்
நூறாண்டு காலம் திருமண வாழ்வு சிறக்கட்டும், ஊரார் வாழ்த்துகளோடு,
உலகமுள்ளவரை வாழ்த்திட வாழ்த்துகிறேன்!!!!

அண்ணா கிட்ட, ஸ்பெஷல் ட்ரீட் கேட்டேன் னு சொல்லிடுங்க.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

திருமண நாள் வாழ்த்துக்கள் கல்பனா.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

கல்ப்ஸ் என்னுடைய அட்வான்ஸ் திருமணவாழ்த்துக்கள். நீங்களும் என் அண்ணனும் சென்சுரி அடிக்க(அதவது100 வயது வரை சந்தோசமாக இருக்க) நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். உங்களுக்கு இந்த 5வது ஆண்டின் தொட்க்கம் சந்தோக்ஷமாக அமைய என் வாழ்த்துக்கள். அப்புறம் நான் அண்ணனை விசாரித்தாக சொல்லவும். நாளைக்கு அண்ணந்தான் என்க்கு தேங்கஸ் செல்லனும். நீங்க சொன்னிங்கனா நான் உங்க கூட டூ டூ டூ.......

வாழு இல்லை வாழவிடு

கல்ப்ஸ், திருமணம் ஆகி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கும் அண்ணாவுக்கும் எனது உளம் கனிந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். by- Radha-(Samrad)

அன்புத்தோழி கல்பனாவுக்கு...

என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்...

எல்லா வளமும் பெற்று இனிதே ,வாழ. இறைவனை ,பிரார்த்திக்கும். தோழி.......
ருக்சானாமம்மு...

வாழு, வாழவிடு..

கல்ப்ஸ் சொல்லவே இல்லியே. என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

அருசுவையை ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் கல்பனா அவர்களுக்கு,
எனது இதயம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.
இந்நாள் போல் எந்நாளும் பொன்னாளாக உங்களுக்கும் ,அண்ணனுக்கும் அமைந்து,உங்கள் கண்ணுக்கழகான செல்வங்களுடன் நீண்ட ஆயுளோடு நோய் நொடி இன்றி வாழ இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.
அந்த பொன்னான முதல் நாள் நினைவுகளோடு நீங்களும்,அண்ணனும் மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்.அதை நினைத்து பார்த்து பேசி மகிழுவதே ஒரு மிக பெரிய சந்தோஷம்.
இந்த விஷயத்தை தெரிவித்த தோழி தேவிக்கு எனது நன்றிகள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கல்பனா

மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள் டா!!

அண்ணாக்கிட்ட சொல்லிடுங்க விருந்து வைக்க சொல்லி!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நாளை திருமண நாள் கொண்டாடும் என் அன்பு அக்காவுக்கும், மாம்ஸ்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். இன்று போல் என்றும் இரண்டு செல்வங்களுடன் வளமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் _()_

அன்புடன்
பவித்ரா

கல்பா
இதயம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்டா இந்நாள் போல் எந்நாளும் பொன்னாளாக அமைந்து உன் இரண்டு செல்லங்களுடன் என்றும் சந்தோசமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

மேலும் சில பதிவுகள்