இரு கேள்விக்கு ஒரு பதில்

இரு கேள்விக்கு ஒரு பதில்...விளையாடலாம் வாங்க...!!!

வாங்க மக்களே இன்னொரு புது விளையாட்டு விளையாடுவோம். இது மிகவும் சுவாரசியமானது மட்டுமில்லை, தமிழில் நல்ல சொல்வளத்தை பெருக்கிக் கொள்ள உதவும் விளையாட்டு.

இரண்டு கேள்விகள் கேட்க்கப்படும்....ஆனால் அதற்கு ஒரே சொல், இரண்டு கேள்விகளுக்கும் பதிலாய் தர வேண்டும். அதே சமயம் அந்த விடைக்கு இரு வேறு பொருள் இருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு,

1) தண்ணீரின் அளவுக்கு கூறலாம்.

2) கண்ணீரின் அளவுக்கு காரணம்..

இதற்கு பதில்= கன அடி (அளவை, பலமான அடி என இருவேறு பொருள்)

தண்ணீரை கன அடியில் அளப்பார்கள்...

கன அடி அடித்தால் கண்ணீர் பெருகும்....

மற்றொன்று,

1.இது கிடைத்தால் வசிக்கலாம்

2. இது கிடைத்தால் விசும்பலாம்

இதற்கு பதில்= அறை (தங்கும் அறை, கன்னத்தில் அறை என இருவேறு பொருள்)

புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

தொடரலாமா?

நான் முதல் கேள்வியைத் தொடங்கி வைக்கிறேன்...

1. விளைச்சலுக்கு உதவும்

2. சோதனை வரும்போது தேவைப்படும்

பதில் சொல்லுங்க....

தெரிந்தவர்கள் வந்து பதில் சொல்லுங்கள்.

நீங்களும் இதேபோல் கேள்விகள் கேட்கலாம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நல்ல ஒரு இழை ஆரம்பித்திருக்கீங்க. ஆனா உங்க கேள்விக்கு விடை தெரியலை. உரமா?? ஈரமா?? ரெண்டுமே இருக்காதுன்னு தெரியும், இருந்தாலும் ஒரு ஆசை:))

அன்புடன்
பவித்ரா

யோகா உரம்
விளைச்சலுக்கு-உரம்
சோதனை வரும் போது- நெஞ்சிற்க்கு உரம் வேண்டும் (தாங்கி கொள்ள)

வாழு இல்லை வாழவிடு

உரம்.. விளைச்சலுக்கு உதவும்..

நெஞ்சில் வேண்டும் உரம். சோதனை வரும்போது...

ஸாரி சுமி முன்னரே சொல்லிட்டாங்க நான் இப்பதான் பார்த்தேன்
. ருக்சானாமம்மு..

வாழு, வாழவிடு..

தலையும் வாரலாம்..
பழமும் வாங்கலாம்....
ருக்சானா.....

வாழு, வாழவிடு..

சீப்பு

வாழு இல்லை வாழவிடு

சரியா சொன்னிங்க.... நன்றி .நீங்க ஒன்னு சொல்லுங்க...

வாழு, வாழவிடு..

மகளிருக்கு தேவை
நிலத்திற்க்கு தேவை

வாழு இல்லை வாழவிடு

சுமி, பெண்ணுக்கும், நிலத்திற்கும் தேவை "பொறுமை" தானே? சுருக்கமா சொன்னா என்னை மாதிரி ;)))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வேலி.. சரியா சுமி...

வாழு, வாழவிடு..

மேலும் சில பதிவுகள்