கனவும் அதன் பலன்களும்

தினமும் எனக்கு கனவுகள் வந்து தொலைக் கொடுகிறது. இதை சாதரண நிகல்வு என்று எடுத்து கொள்வதா? கனவுகளுக்கு பலன்கள் தெரிந்தால் கூறுங்கள். மிகவும் மன குழப்பமாக உள்ளது. ப்ளிஸ் உதவி செய்யுங்கள்.

கனவுகள் பற்றி அறுசுவை மன்றத்தில் நிறைய பேசி இருக்கின்றோம். கனவுகள் பற்றி ஒரு தொடரே எழுதலாம். (இருக்கிற தொடர்களையே ஒழுங்கா வெளியிடலை.. இதில இன்னும் ஒரு தொடரா ன்னு கேட்கிறதுக்கு ஆட்கள் க்யூவில நிக்கிறாங்க..:)

//இதை சாதரண நிகல்வு என்று எடுத்து கொள்வதா?//

வெகு சாதாரண நிகழ்வு. கனவு காணாத மனிதர்கள் கிடையாது. கனவு வராத நாட்களும் கிடையாது. இன்றைக்கு கனவே இல்லை என்று சொல்பவர்கள் மறதிக்காரர்கள். :-) ஆம், நாம் காலையில் எழும்போது எல்லா கனவுகளையும் நினைவு வைத்துக்கொள்வதில்லை. மற்றபடி, கனவுகள் தினமும் வரும்.

//கனவுகளுக்கு பலன்கள் தெரிந்தால் கூறுங்கள்.//

பலன்கள் குறித்து சொல்ல வேண்டுமென்றால், கனவு என்பது ஏதோ பலன்களை தரும் விசயம் என்று நீங்கள் நம்புவதும், அதனால் குழம்பி இது போன்ற பதிவுகள் கொடுப்பதும், இந்த கனவிற்கு என்ன அர்த்தம், இது எதனால், என்ன நடக்கும் என்றெல்லாம் விளக்கம் தேடி அலைவதும்தான் கனவினால் கிடைக்கும் பலன்கள்(?). வேறு பலன்கள் ஒன்றும் கிடையாது. :-)

நீங்கள் விழித்திருக்கும் நேரம் மனதில் எண்ணங்கள் ஓடுவதைப் போல், தூங்கும் நேரம் மனதில் ஓடும் எண்ணங்கள்தான் கனவுகள் என்று எளிதாக எடுத்துக் கொண்டு, அதனை ஒரு சினிமாவை ரசிப்பதுபோல் ரசிக்கத் தொடங்குங்கள். மனக்குழப்பங்கள் எதுவும் வராது. நீங்கள் ஹீரோ/ஹீரோயினாக நடித்து, உங்கள் மனத்திரையில் நீங்கள் மட்டுமே பார்க்கும் குறும்படங்கள்தான் கனவுகள். அதனை ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நல்ல படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அவ்வளவுதான். அதற்கு பலன் எல்லாம் தேடி அலைய வேண்டாம்.

மேலும் சில பதிவுகள்