அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை விபத்து

தோழிகளே, நேற்று முந்தினம் மதியம் சுமார் 3மணிக்கு குன்னூர் அரவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து நிகழ்ந்தது.உங்களுக்கு அதைப்பற்றி தெறியுமா என்று எனக்கு தெறியவில்லை.நாங்கள் இங்கு உள்ளதால்தெறிந்ததை சொல்கிறேன். அத்தொழிற்சாலையில் சுமார் 250கட்டிடங்கள் உள்ளன. ஒருகட்டிடத்தில் நிகழ்ந்த விபத்து பக்கத்தில் இருந்த 2கட்டிடங்களும்இடிந்து தரையிலிருந்து சுமார் 5,6 அடிகள் கீழ் நோக்கி பள்ளமாகிவிட்டது. என் கணவரும் அங்குதான் வேலையிலுள்ளார்.அவரது ஆபீஸ் 3 கட்டிடம் தள்ளியுள்ளது.அங்கு உள்ள அனைத்து கட்டிடங்களின் கண்ணாடி, சன்னல்,மேற்கூறை,சுவர் என பாதிப்புகள் அதிகம். விபத்துக்குள்ளான கட்டிடத்தில் பணியிலிருந்த 5தொழிளாளர்கள் உயிரிழந்தனர்.ஒரு உடல் கூட முழுதாகக் கிடைக்கவில்லை.அந்த 4மணி நேரம் நான் கைக்குழந்தையுடன் என் கணவரைக் காணத் துடித்த தவிப்பு ரொம்பவும் கொடியது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை பிரார்த்திக்குமாறு வேண்டுகிறேன்.

மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கபா உங்கள்ளவரை.

இந்த வெடி பொருட்கள் தேவையா?இதனால் எத்தனை உயிர்கள் பலி.அடிகடி நடக்கிறது.

ஹசீன்

இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 15லட்சம் மற்றும் 1ஆளுக்கு வேளையும் வழ்ங்க உள்ளது தொழிற்சாலை.
ஒரு குடும்பத்தின் ஒரே மகன் இந்தவிபத்தில் இறந்துவிட்டான் (வயது 20)அவன் அப்பா செய்தி கேட்டதிலிருந்து பிரமை பிடித்து தனியாக பேசுகிறார்.
ஒரு குடும்பத்தில் தந்தை ஏற்கனவே இறந்த சூழ்நிலையில் மாமா தான் பொறுப்பை கவனித்தார்.இவ்விபத்தில் அவரும் இறந்துவிட்டார்.இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் பெரிய இழப்பு.
இன்வஷ்டிகேஷன் இன்று துவங்கியுள்ளது.
இம்மாதிரியான விபத்துக்களை தடுப்பது எப்படி?
இந்த தொழிற்சாலை ஆங்கிலேயர்களால் 150வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஒவ்வொரு நாளும் வேளைக்கு அனுப்பும் போதும் பயமாக உள்ளது.இந்தியா முழுவதுமான ஆடினன்ஸ் ஃபேக்டிரியில் சென்ற வருடம் சேஃப்டி அவார்ட் இந்த ஃபேக்டிரிக்கு தான் கொடுக்கப்பட்டது.

ஹசினா நலமா? கண்டிப்பாக வெடி பொருட்கள் தேவைதான்ப்பா.........இந்த வெடி பொருட்கள்தான் எல்லைப் பாதுகாப்பிற்காக அனுப்பப் படுகிறது.என் கணவர் நலமாக உள்ளார்ப்பா.இந்த விபத்தின் காரணம் தெரிந்ததும் பாதுகாப்புகை இன்னும் அதிகப்படுத்திவிடுவார்கள்.என்னவர் அந்த பில்டிங்கிற்கு டெம்பரேச்சர் பார்க்க.......மருந்துப் பொருட்களின் அளவுகளை சரிபார்க்கவென செல்பவர்தான். கடவுளின் கருணை அன்று அவர் அங்கு செல்லவில்லைப்பா.விபத்தின் போது எழுந்த சத்தத்தில் காது அடைத்துக் கொண்டது.வீட்டின் கதவு,சன்னல் அனைத்தும் உடைந்துவிட்டன. விபத்திற்கு பிறகு இவர் அங்கு உதவிக்காக சென்றபோது அனைவர் உடலும் சிதறி மரக்கிளைகள் ,கால்வாய் என பல இடங்களில் கிடந்துள்ளது. மிலிட்டரி வரும் வரையில் இவர்களே உதவி செய்துள்ளனர்.

ரேணுகா நேற்று நீயூஸ் பார்க்கவில்லை. இதை படித்ததும் கஷ்டமாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு தானே நிலச்சரிவு ஏற்பட்டது. அதுக்குள்ள இப்படி ஒரு விபத்து. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கிறேன்.

கேட்கவே மிகவும் வருத்தமாக உள்ளது. அதில் இறந்தவர்கள் எவ்வளவு வலியோடும், வேதனையோடும் இறந்திருப்பார்கள். அப்ப்பபப்பா... எதிரிக்கும் இந்த கொடுமை வரக்கூடாது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மனதுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது..

அவர்கள் அனைவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போமாக .. அனைவரும்...

வாழு, வாழவிடு..

ரேணுகா..ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
நீங்களும் அந்த நேரம் கஷ்டமாக இருந்திருக்கும் .இல்லையா?
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

உயிரே போவதுபோல ஒருவலிப்பா. முதலில் என்னவர் வேளை செய்யும் பிரிவில்தான் விபத்து என்றார்கள். அவர் போன் எடுத்து செல்லக்கூடாது,இருந்தும் அலுவலக போனிர்க்கு பண்ணினேன்.பலனில்லை யாரும் எடுக்கவில்லை.வீட்டிலிருந்து அடுத்த10 நிமிடத்தில் ஃபேக்டிரியில்தான் இருந்தேன். எப்படியாவது அவரிடம் பேசிவிடவேண்டுமென்று பதறியது மனது.
சாரல் மழையும்,கடும் குளிரும் உடலை வருத்த என்னவர் நிலை தெரியாமல் மனம் வருந்த 2வயது மகனை தூக்கிக் கொண்டு நின்றேன்.என்னவரும் எனக்கு தகவல் தரும் நிலையில் இல்லை. அனைத்து தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.மாலை 6.30க்குதான் அவரைப் பார்த்தேன்..ஆனாலும் இறந்தவர்களை நினைக்கும் போது இன்னும் இயல்பாக வேளையில் ஈடுபட முடியவில்லை.இறந்தவர்களின் பாகங்கள் சிதறிக்கிடந்ததை இவர் பார்த்துவிட்டு தூங்கவே இல்லை.அவையே என் கண்முன் வருகிறது.

கேட்கவே மிகவும் வருத்தமாக உள்ளது.
என்னைப் பொருத்தவரை இறந்தவர்கள் பாக்கியசாலிகள்.நிமிடத்தில் மரணம் அவர்களுக்கு.அவர்களை சார்ந்துள்ளவர்களுக்குத் தான் வாழ்க்கையே வினாக்குறி. அதை நினைத்தால் மனது மிகவும் வருத்தப்படுகிறது.நீத்தோர் ஆன்மா சாந்தியடையவும்,அவர்களைச் சார்ந்தோர் நல்வாழ்வுபெறவும் ஸ்ரீஅரவின்தர்ஸ்ரீஅனனையை பிரார்தனை செய்கிறேன்.

idhuvum kadandhu pogum.

வனிதா நீங்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான். நிமிடமென்று கூட சொல்லமுடியாது ஒரு வினாடியில் உயிர் போய்விட்டது ,காற்றாகிவிட்டனர். ஆனாலும் சிறிய 3மாத குழந்தையின் தந்தை மற்றும் குடும்பத்தைக் காப்பான் என்றெண்ணிய 20வயது மகன் எனும்போது மனம் ஆறமறுக்கிறது.நேரில் பார்த்ததால் இன்னும் வலியாக உள்ளது மனது.

மேலும் சில பதிவுகள்