டெடிபேர் செய்ய ரொம்ப ஆசை```` உதவுங்கள் தோழிகளே!!

தோழிகளே, எனக்கு டெடிபேர் செய்ய ரொம்ப ஆசை..நான் என் கல்லூரி நாட்களில் கற்று கொண்டேன்.இப்போது மறந்து விட்டது மேலும் டெடி கட்டிங் காணவில்லை..உங்களில் யாருக்காவது தெரிந்தால் உதவுங்கள்..ப்ளீஸ்...

தீபா கட்டிங் மிஸ் ஆனா பிரெச்சனை இல்லை.... நிறைய கடைகளில் எல்லா சாஃப்ட் டாய்ஸ்'கும் ஃபர்ருடன் கட்டிங்'ம் கிடைக்கும். கேட்டு வாங்குங்க. கவனிச்சு வெட்ட வேண்டியது ஃபர்ரின் வாட்டம் தான். காதுக்கு எப்படி வர வேண்டும், மூக்குக்கு எப்படி வர வேண்டும், உடல் என அந்த ஃபர்ரின் வாட்டம் பார்த்து வெட்டினால் இணைப்பது கஷ்டமில்லையே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒ..அப்படியா?எனக்கு தெரியாது மேடம்...ரொம்ப நன்றி உங்க தகவலுக்கு..
உடனே செய்து நம்ம அறுசுவை ல போட்டுட்றேன் :)

நான் வெகு நாட்களாக அறுசுவை'கு அனுப்ப ஃபர். கட் பண்ணிட்டு தெய்காம வெச்சிருக்கேன். குழந்தைகளை வெச்சிகிட்டு ஊசியை கையில் எடுக்கவே பயம். செய்து அனுப்புங்க... பலரும் கேட்டுட்டு இருந்தாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேடம்,நான் இந்தியா போறப்போ தான் வாங்க முடியும்..அதுக்குள்ள நீங்களே போடுங்க..அப்படியே நானும் அத பாத்து செய்துடறேன்..நன்றி...

எங்க தீபா... நான் செய்யும் முன் நீங்களே இந்தியா வந்துடுவீங்க. :) இந்த வாரம் என் தங்கைக்கு குழந்தை பிறக்க போகுது. அப்பறம் என்ன.... எற்கனவே என் குழந்தைங்க கூட சண்டை பிடிக்கறேன்... இனி 3வது டிக்கெட் சேர்ந்துடும். நேரம் கிடைக்க வாய்ப்பே இல்லைங்க. நீங்க செய்து அனுப்புங்க, நிறைய பேர் கேட்டுட்டு இருந்தாங்க, எல்லாருக்கும் உதவியா இருக்கும். நானும் அந்த குறிப்புக்காக காத்திருக்கேன். சரியா??? கலக்குங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு கூட கூடை பிண்ண ஆசை. யாராவது கூடை செய்ய தெரிந்தால் சொல்லவும்

shagila

ஷகிலா... நான் இந்த விஷயத்துல ரொம்ப சோம்பேரி. சின்ன வயசுல பள்ளியில் சொல்லி கொடுக்கும்போதே வீட்டில் அம்மாவிடம் கொடுத்து கூடை செய்து வாங்கிட்டு போயிருவேன். ;)

நம்ம மக்கள் யாராவது வருவாங்க... காத்திருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி உங்கள் பதிலுக்கு. காத்திருப்போருக்கு இரட்டிப்பு பலன் உண்டு. காத்திருக்கிறேன். .

shagila

மேலும் சில பதிவுகள்