அஜீரண கோளாறு

நான் 43 நாட்கள் கர்ப்பம், அஜீரண கோளாறு, என்ன சாப்பிடுவது, உதவுங்கள்

வாழைப்பழம் சாப்பிட்டு பாருங்க

மிக்க நன்றி மேடம், காலையிலிருந்து சாப்பிட்ட எதுவுமே செரிக்கவில்லை, ரொம்ப பயமாக இருந்தது, சாதாரன நாட்களில் இஞ்சி டீ சாபிட்டால் சரியாகும், ஆனால் இந்த மாதிரி கர்ப்ப காலத்தில் சாப்பிட பயம். நன்றி.

எனக்கும் இதே பிரச்சனை தான். டாக்டர் கிட்ட சொல்லுங்க, ஜிஞ்சர் மாத்திரை தருவாங்க. எனக்கும் அதான் கொடுத்தாங்க. எனக்கும் எதுவும் சாப்ட முடியாது. எது சாப்டாலும் நெஞ்சிலே இருப்பது போல இருக்கும். வாந்தி எடுத்தால் தான் கொஞ்சம் சரியாகும். அதற்க்காக நீங்க வீட்டில இஞ்சி எல்லாம் கரைத்து சாப்பிடாதிங்க, டாக்டர் கிட்ட சொன்ன. அதுக்குள்ள மருந்து தருவாங்க. கவலை படாதிங்க.தாளிக்கா அக்கா உன்மையா உங்கள பாராட்டுரேன். யார் எந்த சந்தேகம் கேட்டாலும் உடனே நீங்க தான் வந்து பதில் போடுரிங்க. இன்னும் சிலபேரும் இருக்காங்க. ரொம்ப நன்றி அவர்களுக்கும். மற்றவங்க எல்லாம் ரொம்ப பிசியா இருக்காங்க பட்டிமன்றத்திலையும், அரட்டையிலும். தயவு செய்து தோழீஸ் இந்த மாதிரி யாராவது கேட்ட தயவு செய்து பதில் கொடுங்கபா. அவங்களுக்கு கேட்க யாரும் பெரியவங்க பக்கதில இல்லை என்று தான இங்க வந்து கேட்கிறாங்க. அதிலையும் சிலபேர் வெளிநாட்டில் தனியாக வாழ்து கொண்டு இருப்பாங்க, கொஞ்சம் பிந்தி கரு தரித்து இருப்பாங்க அவங்களாம் என்ன வருத்த படுவாங்க, கொஞ்சமாவது நினைத்து பாருங்கபா, அரட்டை அடிங்க வேண்டாம் சொல்லல, ஆனால் அரட்டை பக்கத்திற்க்கு 10 வரிகள் டைப் பன்ரிங்க, உங்களுக்கு தெரிந்ததை வந்து ஒரே வரிலையாவது இப்படி கேட்கிரவங்களுக்கு சொல்லுங்கபா. கேட்டவங்க உங்களை நம்பிதான் கேட்கிறாங்க, அவங்களை ஏமாத்தாதிங்க.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா, தோழிகளுக்கு தெரிந்தால் கண்டிப்பாக பதில் தருவார்கள் பா. இங்கே தோழிகள் உதவி செய்வார்கள் என்று தானே கேட்கிறார்கள். இந்த தோழி 43 நாள் கர்ப்பம் என்று வேறு சொல்லியிருந்தால் அந்த சமயத்தில் இஞ்சி சாப்பிட சொன்னால் நன்றாக இருக்காது என்று அமைதியாக இருந்து விட்டேன். உதவி செய்யவில்லையானாலும், அது உபத்திரவமாக போக கூட என்று நினைத்து கூட தோழிகள் அமைதி காக்கலாம். நான் எனக்கு தெரிந்ததை கண்டிப்பாக சொல்வேன் பா. கரு பிடிக்கும் சமயத்தில் உடற்சூட்டை தரும் இஞ்சியை சாப்பிடக் கூடாது. நீங்கள் இதற்கு மருத்துவரை ஆலோசித்தே மருந்து சாப்பிடலாம்.

ஸ்ருதி, நீங்க சோம்பு கலந்து கொதிக்க வைத்த சுடுதண்ணீரை வெது வெதுப்பாக குடித்து பாருங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் அக்கா நான் நிறைய முறைபார்த்து வரேன் அக்கா. சிலபேர் இப்படி தான் கேட்டு இருப்பாங்க, ஆனால் யாரும் பதில் போட மாட்டாங்க, அதே சமயம் போய் அரட்டை பக்கம் பார்ப்பேன். அங்கு ரொம்ப சீரியசாக அரட்டை அடித்து கொண்டு இருப்பாங்க. நான் யாரையும் தவராக கூறவில்லை. அரட்டைக்கு 10வரிகள் டைப்பன்னினால். இந்த மாதிரி யாராவது வந்து கேட்டால் ஒரு வரி பதிலாவது கொடுக்கலாமே என்று தான். உங்கள் மீது வருத்தம் கிடையாது ஏன் என்றால் நீங்களும் அடிக்கடி வந்து பதில் கொடுக்குரிங்க. சிலபேர் வந்து பார்த்துடு இது பத்தி ஏற்க்கனவே பேச பட்டு இருக்கு தேடி பாருங்கனி சொல்லிடுவாங்க, தேடும் அளவு அவங்களுக்கு தெரிந்து இருந்தால் அவங்க புதுசா வந்து ஓபன் பன்ன மாட்டாங்க, அவங்களுக்கு கேட்டது கிடைத்தே என்று நினைத்துடு போய் இருப்பாங்க, கிடைக்கல என்று தான போட்டு இருப்பாங்க, போடுரவங்க நிலைமையையும் நம்ம கொஞ்சம் யோசிக்கனும். சில பேர் உங்களுடைய வாழ்த்துக்காவே வந்து இங்கு போடுவாங்க.,ஆனால் யாரும் வந்து ஒரு வாழ்த்து கூட சொல்ல மாட்டாங்க, எனக்கும் படிக்கும் போது ரொம்ப கக்ஷ்டமாக இருக்கும். தெரியாத தோழிகள் வந்து மன ஆருதலாவது கூறலாமே. அவங்களுக்கு தைரியத்தையாவது கொடுக்கலாமே.
((உதவி செய்யவில்லையானாலும், அது உபத்திரவமாக போக கூட என்று நினைத்து கூட தோழிகள் அமைதி காக்கலாம். )) இந்த மாதிரி யோசிக்கிரவங்க அவங்களுக்கு வந்து தைரியமாவது சொல்லி போங்கபா ப்ளீஸ். கொஞ்சம் மாவது நிம்மதியா இருப்பாங்க. தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நெல்லிக்கா வாங்கி வைத்து கட் பண்ணி லேசா வேகவைத்து தேன் (அ) சர்ககரை போட்டு ஊறவைத்து வாயில் அடக்கி கொள்ளுஙக்ள்,.
பொரித்த் உணவு வகைகளை சாப்பிடாதீங்க.
இரவு சாப்பாடு எட்டு மணிக்குள் முடித்து கொள்ளுங்கள்
ஏற்கனவே மன்றத்தில் கர்பிணி பெண்கலுக்கு நிறைய பதிவுகள் இருக்கு கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அதை சென்று படிங்க, வலது புற லேபிலில் கர்பிணி பெண்கலுக்கெண்று உணவு வகைகளும் இருக்கு அதையும் பாருஙக்ள்
இஞ்சி டீ அதிகம் இப்ப குடிக்க வேண்டாம்.

ஜலீலா

Jaleelakamal

கேரட்டை கட் செய்து லெமன் சாறு சேர்த்து சாப்பிடுங்கள், கொத்துமல்லி துவையல், செய்துசாப்பிடுங்கள்
ஜலீலா

Jaleelakamal

இந்த சோனியா'கு எப்ப பார்த்தாலும் கோவம் மூக்குக்கு மேல வருது!!! ;( ஏன் சோனியா ஏன்??? ஏன் இப்படி??? தெரிஞ்சா எல்லாரும் சொல்வாங்கம்மா... இப்போலாம் அறுசுவையில் அரட்டையில் இருக்கவங்க எல்லாரும் புது ஆட்கள், ஓரளவு வயதில் சிறியவர்களும் கூட. அனுபவம் உள்ளவர்கள் பார்த்தால் பதில் சொல்ல வேண்டிய முக்கியமான கேள்விக்கு அவங்களை கேட்கலாமா??? பார்க்கும் தோழிகள் பதில் தெரியலன்னா வீனா பதிவு போட்டு பக்கத்தை பெருசாக்க விரும்ப மாட்டாங்க... ஏன்னா கேள்வி கேட்டவங்க தனக்கு பதில்னு ஏமார கூடாது. அதனால் தெரிந்தவர் சொல்வாங்கன்னு தான் விடுவாங்க.

ஸ்ருதி... முதலில் நல்லபடியாக பிள்ளை பெற்றெடுக்க எங்க வாழ்த்துக்கள்..... ஜலீலா சொன்ன வைத்தியம் முயற்சி செய்து பாருங்க. எனக்கு தெரிஞ்சு இந்த நிலமையில் இது சகஜம் தான். முடிந்தவரை வெது வெதுப்பான நீர் குடிங்க. ஜீரனத்துக்கு வராத எண்னெய் பலகாரம், ஹெவி டயட் எடுத்துக்காதீங்க. நிறைய நீர் ஆகாரம் எடுத்துக்கங்க, ஜீரண பிரெச்சனை ஓரளவு கட்டுப்படும். டீ, காப்பி விட்டுடுங்க. சில டாக்டர்ஸ் இதுக்கு மருந்து கொடுப்பாங்க நல்லா பசிக்க. சிலர் கொடுக்க மாட்டாங்க. அதனால் நீங்க இந்த சமையத்தில் வரும் கேள்விகளுக்கு உங்க டாக்டரை அனுகுவது தான் முழு பாதுகாப்பு. தப்பா சொல்லல, உண்மையில் உங்க மேல இருக்க அன்பால் ஒரு சகோதரியா சொல்றேன். உங்க உடல் நிலையை முழுசா தெரிஞ்ச உங்க டாக்டர் தான் உங்களுக்கு சரியான மருந்தை இந்த நேரத்தில் சொல்ல இயலும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்கள் கர்பமாக இருக்கும் போது progesterone அதிகமாக சுரப்பதால் அஜீரணம் உண்டாகும். Constipation ஆகாமல் பாருங்க....ஒரேடியாக எல்லாம் சாப்பிடாம கொஞ்சம் கொஞ்சமா அப்போபோ சாப்பிடுங்க....சிலருக்கு இது குழந்தை பிறக்கும் வரை கூட இருக்கும். அஜீரணத்தை தவிர்க்க சோடா, காபி, கொழுப்பு அதிகம் உள்ள உணவு மற்றும் காரமான உணவை தவிர்க்கணும். சாப்பிட்ட பிறகு சிறுது தூரம் நடக்கலாம். டைட்டா உடை அணியக் கூடாது. நான் கர்பமாக இருக்கும் போது அஜீரணத்துக்கு இஞ்சியை உப்பில் தோய்த்து சாப்பிட்டேன். எனக்கு ஒத்துக்கொண்டது. ஒவ்வொருத்தர் உடல்நிலை மாறும். அதனால் நீங்கள் உங்களின் மருத்துவரையும் கலந்தாலோசிக்கலாம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தினசரி சின்ன வாக்கிங் போவதன் மூலம் நல்ல வித்யாசம் தெரியும்

சோனியா சோனியா..சொக்க வைக்கும் சோனியா

மேலும் சில பதிவுகள்