சிறுவனின் சிறுநீரில் இரத்தம்

என் பையனுக்கு ஐந்து வயது. கடந்த சனி அன்று அவன் சிறுநீரில் உறைந்ததைப் போல் ஒரு பொட்டு இரத்தம். உடனடியாக இங்கு அவசரப் பிரிவு மருந்துவமனை சென்றோம். ஸ்கோன் மற்றும் இரத்தப் பரிசோதனை செய்து, கடவுளின் அருளால் சிறுநீரகங்களில் ஒன்றும் பிரச்சனை இல்லை, வைரல் அல்லது பக்டீரியா தொற்றலாக இருக்கலாம் என்று கல்சர் பரிசோதனை செய்து உள்ளனர். சில மருந்தும் கொடுத்துள்ளனர். இதை தவிர வேறு அறிகுறியோ, காய்சலோ இல்லை. தவிர சிறுநீறும் இப்பொழுது நன்றாகி விட்டது.
தோழிகளே இது எதனால் ஏற்படுகிறது. எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இதனால் பின்நாட்களில் எதும் பிரச்சனை வருமா? மருத்துவரிடம், வேறு எதும் பரிசோதனை செய்ய சொல்லனுமா? மிகவும் கவலையாக உள்ளது. என்ன மாதிரியான உணவு தருவது.
மருத்துவர் எல்லாம் தரலாம் என்கிறார்கள். எந்த மாதிரி உணவை தவிர்ப்பது. அருள்கூர்ந்து தங்களின் ஆலோசனை சொல்லுங்கள்

சிறு பையன்களுக்கு சிறுநீர் பாதையில் சரியாகக் சுத்தம் செய்யத்தெரியாது.அப்படி இருக்கும்போது அங்கு அழுக்கு சேரும்,அவை சிலசமயங்களில் தானாகவே வெளியேறும்.அப்பொழுது இதுபோல சிறிது இரத்தம் வரும்.அல்லது இன்ஃபெக்ஸன் இருந்தால் வரும். நீங்கள் குழந்தை நல மருத்துவரிடம் காட்டி தெளிவு பெறுங்கள்ப்பா........

எங்கள் குட்டி பையனுக்கும் 3 வயதில் இப்படிதான் ஒரு முறை நிகழ்ந்தது, ஆனால் 15 நாட்கள் தொல்லை நீடித்தது..
மருத்துவர்கள் கூரிய காரணமாவது::
நமது உடலில் குரிப்பிட்ட அளவு நீர் சத்து எப்போதும் இருக்க வேண்டும். அது குரைந்து போகும் பட்சத்தில் இவ்வாறு ஏற்படும். இது குரித்து கவலை பட வேண்டியது இல்லை. சுத்தமான குடி நீர் குடிக்க கொடுங்கள்.
குறிப்பு:-
குழந்தைக்கு இப்பொழுது வயது 5. எந்த தொந்தரவும் இப்பொழுது இல்லை.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

நன்றி ரேணுகா, அனிதா
ரேணுகா மருத்துவரிடம் சென்று கொண்டு இருக்கிறோம், தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு சிறுநீர் பரிசோதனை செய்ய சொல்லி இருக்காங்க. இதுவரை ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொன்னாங்க, ஆனாலும் எனக்கு மனதுக்கு மிகவும் கவலையாக உள்ளது.
அனிதா
தண்ணீர் குடிப்பது தான் பிரச்சனை. பையனிடம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஸ்கூலுக்கு கொண்டு செல்லும் தண்ணீர் அப்படியே வரும்.

பரிசோதனை முடிவு வந்துவிட்டது. இது பாக்டீரியாவினால் இல்லை என்று ஆன்டிபயாடிக்கை கொடுத்த ஒரே மருந்தையும் நிறுத்த சொல்லிவிட்டார்கள். வேறு எதும் காரணம் இருக்குமா? பயமாக உள்ளது.

ஹலோ வித்யா,,
தண்ணி குடிக்கலைன்னா , ஜூஸ் மாதிரி எதாவது குடுத்து பாருங்க, முடிந்தவரை சுத்திகரிக்க பட்ட நீரை குடுங்க

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்