சிம்லாவில் குடும்பத்துடன் தங்க நல்ல விடுதிகள் சொல்லுங்கள்.......

தோழிகளே இம்மாத இறுதியில் சிம்லா,டெல்லியை சுற்றிப் பார்க்கப் போகிறோம்.அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் என்ன என்ன உள்ளனவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...........ஐடியாவும் கொடுங்கள்ப்பா........

அங்கு பார்க்கவேண்டிய இடங்கள் மற்றும் ஐடியா தருபவர்களுக்கு, ஒரு ஜர்கின் இனமாக நம்ம ரேணுகா வாங்கி தருவாங்கோ...
சீக்கரம் ஜர்கின் ஆர்டர் கு ரெடி ஹ இருங்க ரேணுகா....
எனக்கு தெரியல ரேணு, நம்ம தோழிஸ் வந்து சொல்லுவாங்க.....
குளுருக்கு தகுந்த மாதிரி எல்லா டிரஸ் உம எடுத்துகோங்க. அங்க ரொம்ப குளுரா இருக்கலாம் நு நினைக்கறேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகன் நான் ஏற்கனவே ஊட்டியில் தான்ப்பா இருக்கேன்..... வெடிவிபத்துக்குப் பிறகு ஒரு அமைதி வேண்டுமல்லவா? அதனால் நானும் என் கணவரும் செல்கிறோம். (குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு)

ஐ ரேணு எப்போ போறீங்க தீபாவளி லீவு டைம்ல தான் என் கசின் போய்ட்டு வந்தாங்க. நான் இன்னும் அவங்க கிட்ட அந்த அனுபவம் பத்திலாம் பேசலபா அதோட அவங்க போன வாரம் தான் பெங்களூர் போங்க அவங்க தான் இருக்காங்க நான் பேசினால் கேட்டு சொல்றேன் கட்டாயம். போட்டோஸ் தான் அனுப்பிவச்சா ரொம்ப சூப்பரா இருந்துச்சு ரேணு.

எனக்குதான் ஜெர்கின் .நான் ஏப்ரல் மாதம் போயிருந்தேன் ..என் அண்ணி இருந்தாங்க அவங்கதான் கூட்டிட்டு போனாங்க.உங்களுக்கு யார் இருக்காங்க

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் யாழினி எப்படி இருக்கீங்க?வரும்28,29,30 சிம்லாவில் இருப்போம்.கண்டிப்பா கேட்டு சொல்லுங்கப்பா...........பனிமழையில் நனைவதர்க்காகவே நான் என்னவரை அழைத்துச்செல்கிறேன்ப்பா.......

நான் அத பத்தி கேட்டக மறந்துட்டேன். அந்த thread ல பதிவு போட நினைச்சேன். இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லையே ? எல்லாரும் நலம் தான ? உங்களுக்கு மன தைரியம் ஆண்டவன் தந்து இருக்கார்....... மனச ரிலாக்ஸ் ஹ வெச்சுட்டு டெல்லி போயிட்டு வாங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வாங்க அஸ்வதா. உங்க அனுபவம் சொல்லுங்க. ரேணு க்கு போரக்கு ஈஸி ஹ இருக்கும். அப்படியே நாங்களும் தெருஞ்சுக்கிட மாதிரி இருக்கும் இல்ல

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகந்தி நாளையோட 1வாரம் ஆகப்போகுதுப்பா..........ரொம்ப மனதைரியம் கொடுத்திருக்கார்னு சொல்லனும்ப்பா.
அந்த பதிவில் போய் படுச்சுப் பாருங்க ரொம்ப கொடுமையான அனுபவம்ப்பா. ஆனாலும் அடுத்தநாள் முதல் எப்பவும் போல ஃபேக்டரி ரன் ஆகுது.
அதை மறக்கவே இந்த சுற்றுலாப்பா

கண்டிப்பா அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, ஒரு ரிலாக்ஸ் வேணும்,,, நீங்க டெல்லி போய் நல்ல என்ஜாய் பண்ணுங்க... போயிட்டு வந்து உங்க அனுபவத்த இங்க சொல்லுங்க... நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வணக்கம், நான் கவிதா, புதிதாக அறுசுவைக்கு அறிமுகமான தோழி. நான் போன் வருடந்தான் டெல்லி, சிம்லா, குலுமனாலி, குஃப்ரி, சன்டிகர் ஆகிய இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வந்தோம். எனக்கு தெரிந்த வரையில் இந்த டிசம்பர் மாதத்தில் செல்லவது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். டில்லியை பொருத்தவரையில் குளிர் மிக அதிகமாக இருக்குன்னு எனது மாமா (டெல்லி) சொன்னார். ஆனால் நீங்கள் ஊட்டியில் இருப்பதால் அந்த குளிரை உங்களால் தாங்கமுடியும் என்று நினைக்கிறேன். ஆனால் சிம்லாவில் கண்டிப்பாக பணிமிக அதிகமாக பொழியும் காலமிது. அதனால் மிகமிகதிக்கான ஜெர்க்கின் எடுத்துச்செல்லுங்கள். முடிந்தவரை ஏதாவது டூர் பேக்கேஜில் செல்லுங்கள். அதுதான் மிக ஸ்ஃப். சண்டிகர்லிருந்து 11 மணி நேரப்பயணத்தில் சிம்லா வரும். அங்கே மானு டெம்பிள் ஓரு அருவிக்கு அருகில் உள்ள்து. சுற்றி ஒரே பணி, ஆனால் கோவிலின் உள்ளே சென்றால் ஒரே கதகதப்பாக இருக்க்கும். பிறகு ஷாப்பிங் காம்பிள்க்ஸ் செல்லாம். ஆனால் மிகமிககாஸ்ட்டிலி. அடுத்து குலூவிற்கு சென்றால், அங்கே நிரய வாங்கலாம். காஷ்மீரி சில்க் அங்கே பேரம் பேசி 300ரூபாய்க்கு வாங்கிமுடிக்கலாம். குலுவிலிருந்து மேலே 20 கிலோமீட்டரில், மலையில் பயணம் செய்தால் ரோட்டாங் பாஸ் என்ற அருமையான் இடம் வரும். அங்கே 0 பாய்ன்ட் என்ற இடம் வரைக்கும் போகலாம். பின்னாடி தெரியும் பணிமலை தான் சீனா.ஆனால் டிசம்பர் மாதம் போகமுடியுமா? தெரிய்வில்லை. குதிரை சவாரி செய்யலாம். ஹிம்மாத்திரி தேவி கொவில் இருக்கு. கீழேமலையில் இற்ங்கும்போது சண்டிகரில் ரோஸ் கார்டன் பாக்கவேண்டிய இடம். டெல்லி என்றால் தாஜ் மகால், ரெட் போர்ட், ஜம்மாமசுதி, காந்தி மூசியம், குதுப்மினார், சாந்தினி ச்வ்க்கில் சீப்பாக பொருட்களை வாங்கலாம். தாஜ் மகால் போகிற வழியில் மதுரா கிருஷ்ணர் பிறந்த பூமியான இடம் இருக்கு. இன்னும் அந்த ஜெயில் கூட இருக்கு. உங்கள் இன்ப சுற்றுலாவிற்கு கவிதாவின் வாழ்த்துக்கள். ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளூங்கள். என்க்கு தெரிந்தவரையில் சொல்லுகிறேன்.

மேலும் சில பதிவுகள்