ஸ்னோ டால்

தேதி: December 3, 2010

5
Average: 4.3 (9 votes)

 

நோட் அட்டை
முட்டை ஓடு - 1
சாட் பேப்பர்
பெவிக்கால்
சிவப்புநிற துணி
ஃபேப்பரிக் பெயிண்ட்
கலர் செல்லோ டேப் - பச்சை மற்றும் கோல்டன்நிறம்
பெரிய கலர்மணிகள்
ஃபெயிண்ட் ப்ரெஷ்
காட்டன்
வாட்டர் பாட்டில் மூடி - 1
சிறிய நீள்வடிவ மூடி - 1
கத்தரிக்கோல்
கோல்டுநிற கம்பி

 

நோட் அட்டையின் மீது பழைய சீடியை வைத்து பென்சிலால் ஒரு வட்டம் வரைந்து, அட்டையை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். முட்டை ஓடுடை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்றவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
வாட்டர் பாட்டில் மூடி ஒன்றின் மீது முழுவதும் பெவிக்கால் தடவி காட்டனை சுற்றிலும் ஒட்டிக் கொள்ளவும்.
சாட் பேப்பரை கூம்பு போன்று சுருட்டி ஓரங்களை பெவிக்கால் தடவி ஒட்டிக்கொள்ளவும். அந்த கூம்பின் உயரம் 8 செ.மீ அளவு இருக்க வேண்டும்.
அந்த கூம்பின் மீது சாட் பேப்பர் தெரியாதவாறு பச்சைநிற செல்லோ டேப்பை சுற்றிலும் ஒட்டிக்கொள்ளவும்.
முட்டை ஓட்டின் மேல் பகுதியில் பெவிக்கால் தடவி காட்டன் சுற்றிய மூடியை வைத்து ஒட்டவும். பின்னர் முட்டை ஒட்டில் வெள்ளைநிற பேப்பரிக் பெயிண்ட் அடித்து காயவிடவும்.
20 செ.மீ அளவில் மூன்று கோல்டுநிற கம்பியை எடுத்து முறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் அதன் மேல் கோல்டுநிற செல்லோ டேப்பை கம்பியை சுற்றி ஒட்டவும்.
இப்போது அந்த கம்பியில் 5 பெரிய கலர் மணிகளை இடைவெளிவிட்டு கோர்த்து வைக்கவும்.
வட்டமாக வெட்டி வைத்திருக்கும் அட்டை முழுவதும் காட்டனை பரவி வைக்கவும். அட்டையின் ஏதாவது இரு முனையில் கால் இன்ச் இடைவெளிவிட்டு துளையிட்டு கொள்ளவும்.
மணிகள் கோர்த்து வைத்த கம்பியை அரைவட்டம் வளைவு போல் வளைத்து வைக்கவும். பிறகு பஞ்சு ஒட்டிய அட்டையில் துளையிட்டுள்ள பகுதியில் சிறிதளவு இந்த கம்பியை விட்டு அட்டையின் அடியில் மடக்கி விடவும்.
வாட்டர் பாட்டில் மூடியுடன் சிறிது நீளவடிவ மூடியாக தேர்ந்தெடுத்து அந்த மூடியில் சிவப்பு பெயிண்ட் அடித்து காயவிடவும்.
முட்டையுடன் மூடி நன்றாக ஒட்டிக் கொண்டதும், மூடியை பொம்மையின் தலைப்பகுதியாக கொண்டு அதற்கு கருப்புநிற பெயிண்டால் இரு புள்ளிகள் கண்கள் போன்று வைக்கவும். மூக்கிற்கு மிகச்சிறிய அளவில் சாட் பேப்பரை எடுத்து மெல்லிய கூம்பு போல் செய்து சிவப்பு பெயிண்ட் அடித்து காய்ந்ததும் எடுத்து ஒட்டவும். பின்னர் கழுத்தில் சிவப்புநிற துணியை கட்டிவிடவும். சிவப்புநிற பெயிண்ட் அடித்த மூடியை தலைக்கு தொப்பியாக வைத்து ஒட்டவும்.
கூம்பு வடிவின் முனையில் ஒரு பெரிய மணியை ஒட்டிக் கொள்ளவும். இதை கம்பிகள் கோர்த்து வைத்த அட்டையில் பெவிக்கால் வைத்து ஒட்டவும்.
பிறகு முட்டை ஒட்டில் செய்த பொம்மை அடியில் பெவிக்கால் தடவி அட்டையில் ஒட்டி நன்கு காயவிடவும். அழகாக சுலபமான முறையில் செய்யக்கூடிய ஸ்னோ டால் ரெடி. கிறிஸ்துமஸ்க்கு அலங்கரிக்க இந்த ஸ்னோ டாலை செய்துவைக்கலாம்.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த ஸ்னோ டால் செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா இருக்கு செண்பகா மேடம் ... எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்களோ .... ரொம்ப சூப்பரா இருக்கு ..

அழகாக கலர்ஃபுல்லாக இருக்கிறது செண்பகா. காலத்துக்கேற்ற கைவேலை. ட்ரீல மாட்டி வைக்க அழகாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

செண்பகா
கலக்கிடீங்க....

Kalai

செண்பகா அக்கா ஸ்னோ டால் அழகாவும், ஈஸியாவும் இருக்கு. கிறிஸ்துமஸ் ஸ்பெஷலா அசத்துங்க.

அழகாக இருக்கு ஸ்னோ டால். அதைவிட நவினாகுட்டி ரொம்ப அழகு(சுத்தி போடுங்க என் கண்ணே பட்டிருக்க போகுது)

ரொம்ப நாளா உங்க கைவேலை எதுவும் காணோமே என்று நினைத்தேன்.
குழந்தை விட மாட்டெங்கராளா. ஸ்னோ டால் ரொம்ப நல்லா இருக்கு.

அழகா இருக்கு ஷென்பகா..அம்மாவும் பொண்ணும் அழகா இருக்கீங்க..ஷென்பகா உடம்பு குறைச்சுட்டீங்க..வெரி குட்

செண்பகா ரொம்ப அழகா இருக்கு ஸ்னோ டால். இமாம்மா சொன்னது போல க்றிஸ்துமஸ் மரத்தில் இதைப் போல் செய்து கட்டி தொங்க விட்டால் அழகாக இருக்கும். க்றிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் நெருங்கிக் கொண்டிருக்கு நிச்சயம் பயனுள்ளதா இருக்கும்.

ஹாய் ரம்யா ரொம்ப நன்றி எப்படி இருக்கீங்க? நீங்களும் க்ராஃப்ட் ரொம்ப நல்லா பண்ணுவிங்க போல:-)

இமா அம்மா உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி. எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலம் தானே? செபா அம்மாவை கேட்டதா சொல்லுங்க. உங்க ஐடியா நல்லா இருக்குமா.

ரொம்ப நன்றி கலா.

ஹாய் வினோஜா எப்படி இருக்கீங்க? ரொம்ப நன்றி

ஹாய் இனியா எப்படி இருக்கீங்க? உங்களிடம் இதான் முதல் முறையாக பேசுகிறேன். உங்க முழு பேர் இனியா வா? உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

ஹாய் கோமு ரொம்ப நன்றி. எப்படி இருக்கீங்க? எனக்கு நேரமே கிடைக்கல. பாப்பா இப்போ ரொம்ப சேட்டையை ஆரம்பித்து விட்டா. அவ தூங்கும் நேரத்தில் செய்தால்தான் உண்டு.

ஹாய் தளிகா எப்படி இருக்கீங்க? குழந்தைகள் எப்படி இருக்காங்க? பையன் அமைதியா, பேர் என்ன? நீங்க ஒரு ஆளுதான் என்னை வெரி குட் என்று சொல்றீங்க ரொம்ப நன்றி மற்றவர்கள் எல்லோரும் நல்லா சாப்பிட சொல்றாங்க. மீண்டும் நன்றி உங்க பாராட்டிற்கு.

ஹாய் யாழினி உங்க பேர் ரொம்ப அழகா இருக்கு. எப்படி இருக்கீங்க? உங்க பாராட்டிறகு ரொம்ப நன்றி.

senbagababu

ரொம்ப நல்லா எல்லாம் இல்லை . சுமாராக ... ஞாபகம் வைத்திருப்பதற்கு நன்றி.. எனக்கு கிராப்ட் செய்யும் ஆசையை தூண்டியதே இந்த அறுசுவை தளம் தான்.

hai senbaga snow doll ரொம்ப நல்லா இருக்கு நவீனா போலவே. really nice

செண்பகா... இதைவிட அழகா, இதைவிட சிம்பிளா உங்களை தவிற வேறு யாரும் யோசிச்சிருக்க கூட மாட்டோம்.... சூப்பர். ரொம்ப சூப்பர். :) வாழ்த்துக்கள். கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்நோ டால் அருமை,பாப்பாவும் நீயும் அழகு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Sengaga madam . romba super .. Nanum intha mathiri senchu paatha , super ra irukku ..

Gayathri.

Be Honest

செண்பகா வழக்கம்போல் உங்கள் கைவண்ணம் மிக அருமை.
உங்கள் திறமைக்கு எனது வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.....
பொண்ணு நல்லா இருக்காளா...?

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சென்பாகாக்கா, முழுப்பெயரே இனியாதான்.இனியாகூடவேறுஎதாவது சேர்ப்பார்களா?craft work-l ரொம்ப ஆர்வம் டைம் கிடைக்கும்போது இந்த இழையை பார்த்துவிடுவேன்.

அழகாக கலர்ஃபுல்லாக இருக்கிறது செண்பகா THANKS

ஹாய் anjutvl ரொம்ப நன்றி.

வனிதா இதை விட அழகா, இதை விட சிறப்பா உங்களை தவிர வேற யாராளும் பாராட்ட முடியாது... ரொம்ப நன்றி.

ஆசியா ரொம்ப ரொம்ப நன்றி.

ரொம்ப நன்றி காயத்ரி.

ஹாய் அப்சரா எப்படி இருக்கீங்க? பாப்பா ரொம்ப நல்லா இருக்கா. உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

ரொம்ப நன்றி மீனா.

senbagababu

dear,
how r u.ungalodathu romba pidichathu.thank u.