காய்ந்த முந்திரிப்பழம் 1வயது குழந்தைக்குக்கொடுக்கலாமா.

காய்ந்த முந்திரிப்பழம் 1வயது குழந்தைக்குக்கொடுக்கலாமா.அதில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?அதன் பயன் என்ன?எப்படிகொடுக்கலாமென்ரு சொல்லுங்கள் தோழீஸ் PLS

அன்பு இனியா

காய்ந்த முந்திரிப்பழங்கள் ரொம்ப சின்னக் குழந்தைகளுக்கே கொடுக்கலாம். 5 அல்லது 6 பழங்களை முதல் நாள் இரவில் ஒரு கிண்ணத்தில் போட்டு, வென்னீர் ஊற்றி, மூடி வைக்கணும். மறு நாள், அந்தப் பழங்களின் ஜூஸ் எடுத்து, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மலச்சிக்கல் இருக்காது. இரும்பு சத்து உள்ளதுன்னு சொல்லக் கேட்டிருக்கேன். சருமம் பொலிவுடன் இருக்கும் என்றும் சொல்வாங்க. மற்ற ட்ரை நட்ஸ், சில சமயம் பெரியவங்களுக்கு ஜீரணம் ஆகாது. ஆனா இந்த உலர்ந்த திராட்சை(கிஸ்மிஸ் பழம்)பெரியவங்களும் சாப்பிடலாம், டயர்ட் ஆகாம இருப்பாங்கன்னு சொல்வாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதா மேம் நன்றி.கிஸ்மிஸை அப்படி யே கொடுக்கலாமா.

குழந்தைக்கு ஒரு வயது ஆகுதுன்னு சொல்லியிருக்கீங்க. முதலில் 2 நாள் ஜூஸ் கொடுங்க. அப்புறம் 2 அல்லது 3 பழங்கள் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தைகளுக்கு எந்த உணவு கொடுக்க ஆரம்பிச்சாலும்(பிஸ்கட் என்றால் கூட) கொஞ்சமாக, கொடுக்க ஆரம்பிச்சு, அது ஒத்துக் கொள்ளுதா என்று பார்த்து விட்டு, கண்டினியூ செய்யலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

முன்பு ஒரு நாள் அழுதாள்கிஸ்மிஸ் வேன்டுமென்ரு.அப்படியே கொடுத்தேன் ஒன்னும்செய்ய வில்லை.இப்போ மழைக்காலம் கொடுக்கலாமா.உங்களுக்கு எத்த்னை குழந்தைகள்.

அவளுக்குப் பிடிக்குதுன்னா, தாராளமாகக் கொடுங்க. குழந்தைகள் இந்த மாதிரி, வித்தியாசமான டேஸ்ட் எல்லாம் பழகிக்கிறது நல்லதுதானே.

எனக்கு மூன்று குழந்தைகள். 2 பையன்கள், ஒரு பெண். எல்லோருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு பேத்தி, ஒரு பேரன்.

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றி சீதாம்மா.

மேலும் சில பதிவுகள்