நான் மைக்ரோ ஓவன் வாங்கலாம் என்று இருக்கிறேன் ifb convection மாடல். எனக்கு கேக் , பிஸ்கட் செய்ய வேண்டும் என்று ஆசை. இதனை மைக்ரோ ஓவனில் செய்தால் நன்றாக வருமா or ஓவன் தான் சிறந்ததா. பல கேக் குறிப்புக்கள் அறுசுவையில் பார்த்தேன். அதில் ஓவன் என்று மட்டுமே குறிபிடபட்டுள்ளது.... கேக் மட்டும் அல்லாது reheat , non veg அனைத்தும் செய்ய வேண்டும். எதை தேர்ந்தெடுப்பது என்பதற்கு எனக்கு உதவுங்கள் தோழிகளே ....
எது சிறந்தது
மைக்ரோ ஓவனில்`எது சிறந்தது என்று யாராவது தெரிந்தவர்கள் வந்து கூறுங்கள்
RamyaSrini
ரம்யா... கேக் செய்ய, பிஸ்கட் செய்ய, பேஸ்ட்ரீஸ் செய்ய, சைவம் அசைவம்'னு சமைக்க, க்ரில் செய்ய அவ்வளவு ஏன் நம்ம இமா சொல்லும் கைவினை பொருட்கள் செய்யன்னு எல்லாத்துக்கும்'னு சொன்னா ஒவன் தான் எனக்கு பெஸ்ட். என்ன தான் மைரொவேவில் செய்தாலும் ஒவனில் செய்யும் கேக் போல் இருக்காது. என்ன தான் மைக்ரோவேவில் க்ரில் செய்தாலும் ஒவனில் செய்யும் க்ரில் போல் இருக்காது. தோழிகள் யாராவ்து வந்து சொல்வாங்க. காத்திருங்க. நானும் கன்வன்ஷன் மாடல் மைக்ரோவேவ் அவன் தான் வெச்சிருக்கேன்... அத்தனை நன்றாக எல்லா கேக்கும் செய்ய வராது. கேக் குறிப்புகளில் ஒவன் என்று சொல்லி இருப்பது சாதா ஒவன் தான். மைக்ரோவேவ் என்றால் குறிப்பாக சொல்வாங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
oven + and - sollungal
பதில் தந்தமைக்கு நன்றி வனிதா . யாருமே பதில் சொல்லவில்லையே என்று நினைத்தேன் .. ஓவன் and மைக்ரோ ஓவன் + and - யாரவது சொல்ல முடியுமா ??? ஓவன் வாங்குவதென்றால் OTG சிறப்பானது என்று சொல்கிறார்கள் அது சரி தானா ??
மைக்ரோவேவ் அவன்
நானும் வனி சொன்னதைத் தான் சொல்வேன்.
ப்ராண்ட் எல்லாம் சொல்லத் தெரியவில்லை. வேறு யாராவது சொல்ல வருவார்கள், காத்திருங்கள்
- இமா க்றிஸ்
oven or micro oven??
நன்றி இமா பதில் அளித்ததற்கு ..
ஓவன்
அறுசுவையில் உள்ள குறிப்புகளில் சொல்லியுள்ள ஓவன் cooking range ல் இருக்கும் ஓவன்.எல்லா கேக் வகைகளும் ஓவனில் தான் நன்றாக வரும்.
மைக்ரோவேவ்:-
reheatக்கு அதிகம் யூஸ் ஆகும்.
மற்றபடி அதில் சமையலுக்கும் பயன்படுத்தலாம்.நேரம் குறைவு மற்றும் சத்துக்கள் வீணாகாது.ஆனால் பழக்கத்தில்தான் அதில் பக்குவமாய் சமைக்க (even cooking)வரும்..:-..
நான் சட்னிக்கு வதக்க ,அல்வா போன்ற ஸ்வீட் செய்ய,சிப்ஸ்,அப்பளம் பொரிக்க(எண்ணையில்லாமல்)அதை பயன்படுத்துவேன்.
ஆனால் microwave Oven ல் சாதம்,பருப்புவகைகள் வேகவைக்க ஒவனில் ஆகும் அதே நேரம்தான் இதிலும் ஆகும்.பொங்கல் செய்ய மைக்ரோவேவில் சுலபம்.
நிறைய காபி ,டீ போட வேண்டும் என்றால் இது நல்ல நண்பன் :-)
அதற்கென்று உள்ள குக்கரில் வைத்து விட்டு நேரம் செட் செய்துவிட்டால் போதும்..ஆனால் அதுவும் எலெக்டிரிக் குக்கரிலும் இதேபோல் சுலபம்தான்..
முக்கியமாக ரீஹீட்,time consuming,nutritionalvalue இது consider செது வாங்க வேண்டும் என்றால் மைக்ரோவேவ் வாங்குங்கள்..இல்லை கேக் வகைகளுக்கு ,கிரில் செய்ய என்றால் ஓவன் வாங்குங்கள்...
எல்லாமே வேண்டும் ,எல்லா factorm முக்கியம் என்றால் இரண்டுமே வாங்கியாக வேண்டும் :-(என்னங்க ,ரொம்ப குழப்பிட்டேனா :-))
என்னிடம் Frigidairebrand oven and microwave உள்ளது..இந்த ப்ராண்ட் ஒவன் ஒகே..ஆனால் இந்த ப்ராண்ட் microwave நிறைய options இல்லை.
வேறு பிராண்டுகள் பற்றி தெரிய வில்லை.தெரிந்தால் சொல்கிறேன்
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
மைக்ரோவேவ்
//பழக்கத்தில்தான் அதில் பக்குவமாய் சமைக்க வரும்..// இளவரசி சொல்வது உண்மைதான். எங்கள் வீட்டில் மைக்ரோவேவிலேயே நிறைய விடயங்கள் முடித்துவிடுவோம். சோறு வைப்பது எப்போதுமே மைக்ரோவேவ் ரைஸ் குக்கரில்தான். சுலபம். நிறைய சைட் டிஷஸ் பண்ணுவோம், அதுவும் தனி ஆளுக்கான சமையல் என்றால் அனேகம் மைக்ரோவேவ் சமையல்தான்.
பேக்கிங் என்றால் மற்ற அவணில் வைப்போம். எப்படி சாதாரண அவனில் செய்வதை மைக்ரோவேவில் செய்ய முடியாதோ அதே போல் மைக்ரோவேவ் செய்யக் கூடிய வேலைகளை வேறு எதுவும் செய்ய முடியாது. நன்கு பழகிவிட்டால் ஒரு நேரம் மைக்ரோவேவ் இல்லாமல் இருந்தாலும் கை முறிந்ததுபோல் இருக்கும்.
சென்ற முறை ஊருக்குப் போன சமயம் வீட்டுக்கு ஒரு மைக்ரோவேவ் அவன் வாங்கிக் கொடுத்தோம். அவர்களால் இப்போ ஒரு நாள் அது இல்லாமல் போனாலும் முடியவில்லையாம்.
நாங்கள் 2000 ல் ஒரு 'ஷார்ப்' வாங்கினோம். 2008 இறுதிப் பகுதி வரை வேலை பார்த்தது. எங்கள் வீட்டுச் சமையலைக் கணக்கில் கொண்டால்.. ;) 12, 13 வருஷத்துக்கான அளவு வேலை வாங்கியிருப்போம். இப்போ இருப்பது 'பனசோனிக்' அதேபோல் வேலை வாங்குகிறோம். ;) முணுமுணுக்காமல் வேலை செய்கிறது. உங்க ஊரில் என்னென்ன ப்ராண்ட் இருக்கும் என்பது தெரியவில்லை.
இளவரசி, //சாதம்,பருப்புவகைகள் வேகவைக்க ஒவனில் ஆகும் அதே நேரம்தான்// ஒவணில் பேக் பண்ணுவீங்களா?? அல்லாவிட்டால் கிச்சன் ரேஞ்சில் உள்ள எலிமண்ட்டைச் சொல்கிறீர்களா? ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரிப் பேசுகிறோம். புரியவில்லை. ;)
- இமா க்றிஸ்
இளவரசி
மிக்க நன்றி இளவரசி ... மைக்ரோ ஓவனை எப்படி எல்லாம் பயன் படுத்தலாம் என்று தெளிவு படுத்தி விட்டீர்கள் . நீங்கள் குழப்ப வில்லை . நன்றாக புரிந்து கொண்டேன் .
மைக்ரோ ஓவன் எண்ணெய் இல்லாமல் செய்வதற்கும் , சூடு பண்ணுவதற்கு, வேகவைக்க பயன் படுத்தலாம்.
ஓவன் கிரில்(non veg ) and கேக் செய்ய உபயோகமாகும்
சரிதானா
imma
இமா மிக்க நன்றி . உங்களுடன் மைக்ரோ ஓவன் எந்த அளவு பங்கு அளிகிறது என்று புரிந்து கொண்டேன் .
இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டேன்..
ஓவன் மற்றும் மைக்ரோஓவன்
ஓவன் மற்றும் மைக்ரோஓவன் பற்றி confuse ல் இருந்தேன் விளக்கி சொன்னதற்கு நன்றி இமா,இளவரசி.ஓவனில் எந்த ப்ராண்ட் நன்றாக இருக்கும்