பாகற்காய் பிரட்டல்

தேதி: December 4, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

பாகற்க்காய் - மூன்று
தக்காளி - இரண்டு
பெரிய வெங்காயம் - இரண்டு
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு.
தாளிக்க - கடுகு, உளுந்து, வரமிளகாய்


 

பாகற்காயை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
நறுக்கின பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அதில் 2 தேக்கரண்டி உப்பு போட்டு 15 நிமிடம் ஊறவைத்து பின்னர் வேறு தண்ணீரில் போட்டு அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, வரமிளகாய் தாளித்து நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் பாகற்காயை போட்டு உப்பு போட்டு வதக்கவும்.
பாகற்காயை நன்கு வெந்ததும் இறக்கவும். தீயை மிதமாக வைத்து செய்யவும். டேஸ்ட்டான கசப்பில்லாத பாகற்காய் பிரட்டல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு. நான் இப்படி செய்யனும்னு நினைத்ததுண்டு, ஆனால் ட்ரை பண்ண கொஞ்சம் பயமா இருந்தது. வாழ்த்துக்கள்:))

அன்புடன்
பவித்ரா

ருக்சனா... எப்படிங்க கசப்பான பாவைககயை பார்த்ததுமே சாப்பிட தோனும் அளவுக்கு அழகா சமைச்சிருக்கீங்க??? சூப்பர். வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்படி பண்ணினா பாவக்காயில் கசப்பு தெரியாதுன்னு நினைக்கிரேன். சரிதானே?

நானும் இந்த முறையில்தான் செய்வேன் கொஞ்சம் மிளகாய் தூளும் மஞ்சள் தூளும் சேர்த்துக்குவேன். கசப்பு தெரியாது.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ருக்சானா,நானும் பாகற்காய் பிரட்டல் உங்கள் முறைப்படிதான் செய்வேன்.ஆனால் கொஞ்சம் மிளகாய்த்தூள் சேர்த்து சமைப்பேன்.உங்கள் முறையும் நல்லாய்தான் இருக்கின்றது.செய்து பார்க்கின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நன்றி இருவருக்கும்.
முதலில் பார்த்து. வாழ்த்து சொன்னதுக்கு ..நன்றி பவித்ரா..
வனிதா உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....

வாழு, வாழவிடு..

மூவருக்கும் என் மனமார்ந்த நன்றி..
நிறைய வகைகளில் செய்யலாம்.. எல்லாரும் செய்துபாருங்கள்....நன்றி மீண்டும்...

வாழு, வாழவிடு..

அட்மின் அவர்களே..என் குறிப்பை வெளியிட்டதற்க்கு நன்றி..
நன்றி நன்றி மிக்க நன்றி... .

வாழு, வாழவிடு..

இந்த முறை இன்று செய்தேன்....நன்றாக வந்தது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!