பட்டிமன்றம்-30 :ஜோதிடம்,வாஸ்து பார்க்கலாமா-கூடாதா?

அறுசுவையின் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்.இந்த வார பட்டி மன்றம் இன்று இனிதே துவங்குகிறது.இவ்வார தலைப்பு திருமதி.சீதாலஷ்மி அவர்கள் நல்கி இருந்த தலைப்புகளில் ஒன்றான

###########################################
ஜோதிடம்,வாஸ்து பார்க்கலாமா-கூடாதா?
###########################################
இருதரப்பு வாதங்களைக் கேட்டு தூக்கம் தொலைக்க நடுவர் தயார் ஆகி விட்டார். நல் உள்ளங்கள் அனைவரும் வருக! விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு அறிவார்ந்த,அனல் பறக்கும் வாதங்களை அள்ளித் தருக.

பட்டியின் விதிமுறைகள்
**********************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

சுருக்கமா சொல்லனும்னா.. பலி ஆடு சிக்கிகிச்சு..தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்க எல்லோரும் வாங்கப்பா!! :)))

நடுவரே சூப்பர் தலைப்பு நடுவரே! வாழ்த்துக்கள். உங்கள் தூக்கத்தை தூக்கிலேற்ற நாங்களும் தயார். தோழிகள் வரட்டும், நான் சாயங்காலம் என் அணியுடனும் வாதங்களுடன் வருகிறேன்

அன்புடன்
பவித்ரா

பட்டிமன்றத்தோட இளம் சூரப்புலி முதல் பதிவிட்டுவிட்டது..வாழ்த்துக்கு நன்றி. :) சீக்கிரமே உங்க அணியோடு படை திரண்டு வாங்க....

சாந்தினி நல்ல தலைப்பா செலக்ட் செய்துட்டீங்க. தோ இப்ப தான் என் அணியை தேர்வு செய்து அதற்காக டைப் பண்ணிட்டு இருக்கேன். தோ வருகிறேன். எங்க நம்ம தோழிகள் யாரையுமே காணும்.

அருமையான தலைப்பு நடுவரே,
வெளிப்படையாக என் வாதம் எதற்கென சொல்கிறேன்.ஜாதகங்களும்,சோதிடங்களும் பார்ப்பது நன்மைக்கே.சோதிடங்களும் வாஸ்த்துவும் பார்க்கலாம் என வாதாட வருகிறேன்.எதிர் அணியின் வாதத்தை பார்த்த பிறகு என் வாதம் தொடங்கும்...........

வாஸ்து, ஜோதிடம் பார்க்க கூடாது என்பது தான் என் வாதம் நடுவர் அவர்களே,
வாஸ்து, ஜோதிடம் பார்ப்பதால் நம் நேரம், பணம் தான் வீணாகிறது. நாம் நம் கடமைகளையும் வேலைகளையும் சரியாக செய்து வந்தாலே அததது சரியாக நடக்கும். இதுப் போல ஜோதிடம், வாஸ்து நம் பணாத்ததயும் நேரத்ததயும் வீணாக்கிக் கொள்வதோடு தேவையில்லாத மன உலச்சலுக்கும் ஆளாக வேண்டியிருக்கு. ஜோதிடம் பார்ப்பவர்கள் தங்கள் தொழில் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக அந்த தோஷம் இந்த தோஷம் இருக்கு, இதுலாம் பூர்த்தி செய்யனும்னு சொல்லிடுறாங்க ஆனா மக்களோ அதையே நினைத்து நினைத்து மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். ஜோதிடம் ஜோதிடம்னு சொல்லி எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?
இந்த வாஸ்து பார்க்கறவங்க இருக்காங்களே அய்யோ கொடுமைடா சாமி. நல்லா இருக்குற வீட்டையும் இடுச்சு அது சரி இல்ல இது சரி இல்லனு பணத்த பிடிக்கிட்டு போய்டுறாங்க. அதையும் நம்பி நம்ம மக்கள் நல்லா இருக்குற வீட்டை இடிச்சி கட்டி இரண்டு செலவா ஆக்கிகிறாங்க.
ஏமாறுபவர்கள் இருக்க இருக்க ஏமாத்துகாரர்களும் இருக்கதான் செய்வார்கள்.

இந்த முறை நானும் பட்டியில் கலந்து கொண்டு என் வாதங்களை எடுத்து வைக்கலாம் என நினைக்கிறேன்.வாஸ்து ஜோதிடம் பார்க்ககூடாது என்ற அணியில் வாதிட விரும்புகிறேன். எந்த ஒரு மனிதனாலும் இன்னொரு மனிதனுடைய எதிர் காலத்தை கணிக்க முடியாது.ஜோதிடம்,வாஸ்து என்ற பெயரில் நடக்கும் கொள்ளைகள் நாட்டில் அதிகரித்து விட்டன.

நடுவருக்கு என் வாழ்த்துக்கள். ஜோதிடம் பார்க்க கூடாது என்ற தலைப்பிலேயே வாதாட உள்ளேன். எந்த அணி என்று முன்பதிவு செய்யவே வந்தேன். பிறகு என் வாதங்களுடன் வருகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவர் அவர்களே,
எதிர் அணியினர் தெளிவாக சொல்லியுள்ளார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்களென்று. நம் மக்கள் ஏன் ஏமாறுபவர்களாக இருக்கவேண்டும்?ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை.....என்பதுபோல்,ஏன்?எதற்கு?எப்படி? என்று தீவிரமாக ஆராயுங்கள்.
"கற்பிப்பவன் பொய்யானால்
கல்வியும் பொய்யாகுமோ...?"
"கலவாணிகளை மட்டும் பார்த்துவிட்டு,
கலையை குத்தம் சொல்லாதீர்கள்......."
எதிரணியினரே ஒரு கேள்வி,ஏவுகணைகளை ஏவும்போதுகூட நல்லன்ந்ந்ரம் பார்க்கப்படுகிறது.அது ஏன்?

இந்தியா இன்னும் முன்னேறாமல் இருப்பதற்கு,இது போன்ற மூடநம்பிக்கைகளே காரணம்.சரி நல்ல நேரம் பார்த்து அனுப்பிய ஏவுகணை சோதனை எல்லாமே வெற்றி அடைந்துவிட்டதா???அப்புறம் இந்தவாஸ்து,இந்த பொம்மை வைத்தால் செல்வம் கொட்டும் என்று சொல்றாங்க அப்படி என்றால் ஏன் உழைக்கணும் எல்லாரும் அந்த பொம்மைகளை வாங்கி வைத்து,செல்வந்தர்கள் ஆகிவிடலாமே???

தோழிகளே! நான் இப்போது நம் அறுசுவைத் தோழி சுந்தரி அவர்களின் புதல்வி சுபிக்‌ஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளதால் உடனடியாக பதிலளிக்க இயலாது.. எனவே அனைவரும் தங்கள் வாதங்களைத் தொடரும் படி கேட்டுக் கொள்கிறேன்.. இரவு வீடு திரும்பியதும் வாதங்களுக்கு பதிவிடுகிறேன்.. :)

நிறையபேரை இன்னும் காணோம் எல்லாரும் வாங்க வந்து வாதங்களைத் தாருங்கள்!

மேலும் சில பதிவுகள்