சளி தீர வழி சொல்லுங்க plz plz plz

எனக்கு சளி பிடிச்சிருக்கு,மூக்கு &கன்னுல இருந்து தண்ணியா வருது,தும்மலும் இருக்கு fever வரமாதிரி இருக்கு,சளி தீர வழி சொல்லுங்க

மதுமதி
சளிக்கு கொள்ளு ரசம் வைத்து சாப்பிடலாம். விரைவில் குணம் கிடைக்கும்.பாலில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள்,ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடலாம்.சாம்பிராணி பிடிக்கும் பொழுது சிறிது மஞ்சளை அதனுடன் சேர்த்து சாம்பிராணி பிடிக்கலாம்.சளி விரைவில் குணமாகும்.

மதுமதி நல்லா கொதிக்க வைத்த தண்ணீரில் விக்ஸ் போட்டு வேது பிடிங்க.மூக்கு,கன்னுலருந்து தண்ணீர் வரது நின்னுடும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மதுமதி இஞ்சி&சீரகம் சேர்த்து குழம்பு வைத்து சாப்பிடுங்க,இது உடனடி பலன் கொடுக்கும். சளி சீக்கிரம் குணமாகும் திரும்ப வராது.

வாழு இல்லை வாழவிடு

உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்
எங்களது வெப்சைட் முகவரி

http://www.grannytherapy.com/tam/category/தலை/சளி/

...நன்றி !

மேலும் சில பதிவுகள்