கோதுமை புட்டு

தேதி: December 7, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

 

முழு கோதுமை- 1 கப்
ஜீனி- 1/2 கப்
ஏலக்காய் தூள்- 1ஸ்பூன்
நெய்-50 கிராம்


 

கோதுமையை நல்லா சிவக்க வறுக்கவும்,
வறுத்த கோதுமையை மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும் .
அரைத்த கோதுமையில் பிசிரியதுபோல் தண்ணீர் தெளித்து பிசையவும்,
அதை இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து, அதில் ஜீனி, ஏலக்காய்தூள்,நெய் கலக்கவும். விருப்பபட்டால் சிறிதளவு தேங்காய் பூ சேர்த்துகொள்ளலாம், இந்த புட்டு நல்ல வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும் .சத்தானதும் கூட .


கோதுமையை வறுத்து பொடி பன்னி காற்றுபுகாத டப்பாவில் வைத்தால் நான்கைந்து மாதங்களுக்கு கெட்டுபோகாது.தேவையானபோது செய்துகொள்ளலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஸ்வர்ணா குறிப்பு அருமைபா.நான் கோதுமை மாவை உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசறி.புட்டு குழாயில் தேங்காயுடன் போட்டு செய்வேன்.உங்கள் குறிப்பு வித்தியாசமாயிருக்கு செய்து பார்த்துவிட்டு சொல்கிரேன்.

நன்றி சுந்தரி முதல் ஆளாக வாழ்த்தியதற்க்கு.செய்து பாருங்கள் ரொம்ப நல்லாருக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா எப்பலேர்ந்து குறிப்பு கொடுக்க ஆரம்பிச்சிங்க. நான் கவனிக்கவே இல்லையே. நல்ல ரெசிப்பி எங்க வீட்டுல கோதுமை மாவுல செஞ்சு தருவாங்க. எனக்கு ரொம்ப பிடிக்கும். சீனியோட வெல்லம் நல்ல மேச்சிங் சத்தும் கூட. முழு கோதுமை வறுத்து பொடித்து செஞ்சதது இல்லை. உங்கள் முறைப்படியும் செய்து பார்க்கிறேன் ஸ்வர்ணா. உங்களுக்கு தெரிந்த நிறைய குறிப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்றுதான் முதல் முறையாக கொடுத்துருக்கேன்பா.உங்களின் ஆதரவு எனக்கு உற்சாகமா இருக்குப்பா. கண்டிப்பா எனக்கு தெரிந்த குறிப்புகளை பகிர்ந்துகொள்கிரேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்புக் கொடுக்க ஆரம்பிச்சா. all the best. முதல் குறிப்பே இனிப்போட ஆரம்பிச்சாச்ச ஓகே ஓகே. ரொம்ப ஈஸியான குறிப்பாவும் இருக்கு. அரைச்ச கோதுமை மாவே வீட்டில் இருக்குபா செய்து பார்த்துட்டு சொல்றேன். இன்னும் பல குறிப்புகள் கொடுத்து சில்வர் ஸ்டார், கோல்ட் ஸ்டார்லாம் கொடுக்க என் வாழ்த்துக்கள்

யாழினி உங்க வாழ்த்துக்களுக்கு நன்றிபா.அரைச்ச மாவில் செய்வதை விட இந்த முறையில் செஞ்சு பாருங்க நல்லாருக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா நீங்க சமையல் குறிப்பு கொடுத்தற்க்கு நன்றி பா. நான் என் தங்கையிடம் print எடுத்துகொடுத்து செய்ய சொல்லுறேன்.முதல் முறையா குறிப்பு கொடுத்துயிருக்கிங்க வாழ்த்துகள்.

உன்னை போல பிறரையும் நேசி.

வாழ்த்துக்களுக்கு நன்றி தேவி.செய்து பாருங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கூட்டஞ்சோறு பகுதியில் என்னையும் உறுப்பினராக இனைத்த அட்மின் அண்ணா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிரேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இந்தபுட்டு செய்முறை நல்லா இருக்கு. ஜீனி பொடிக்க வேண்டாமா?

பொடிக்க தேவையில்லை,கோதுமையை வேகவைத்து எடுத்த உடனே ஜீனியை சேர்த்துவிடனும் அந்த சூடுலயே ஜீனி கரைஞ்சுடும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஸ்வர்ணா,சமையல் குறிப்பு கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா?ரொம்ப சந்தோஷம்.நிறைய குறிப்புகள் கொடுத்து சில்வர் ஸ்டார்,தங்க ஸ்டாரெல்லாம் வாங்க வாழ்த்துக்கள்.இனிப்போட துவங்கியிருக்கீங்க.ஈஸியாவும் இருக்கும் போலிருக்கு.செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்,ஸ்வர்ணா.தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்,ஸ்வர்.

அன்புடன்
நித்திலா

நித்தி சாரிப்பா தாமதமான நன்றிக்கு:(
ம் சில்வர் ஸ்டார்,கோல்டு ஸ்டாரெல்லாம் வாங்க எனக்கும் ஆசைதான்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Hi swarna.. muzhu kodumai endral enna.. kodumai maava?