பூரி உப்பி இருக்க வழி

ஹாய் தோழீஸ் கடைல இருக்கும் பூரி எப்போதும் பொம்மியே இருக்கு. ஆனால் வீட்டில் போட்டால் அது போல் இருப்பது இல்லை ஏன்பா. நான் பூரி போட்டால் சிரிது நேரத்திலே ரப்பர் போல ஆகுது, சாப்ட புடிக்கவே இல்லை. இது எதனால். நான் பில்ஸ்பர் கோதுமை மாவு தான் யூஸ் பன்றேன். யாருக்காவது பூரி கடைல இருக்கிரது போல எப்போதும் பொம்மி இருக்க வழி தெரிந்தால் சொல்லுங்கள்.

சோனியா முதல்ல தலைப்பையும், உள்ள கொடுத்து இருக்குற பொம்மி என்ற வார்த்தையை சரி பண்ணுங்க. பூரி உப்பி என்று வர வேண்டும். கோதுமை மாவுடன் வறுத்த ரவை சேர்த்து பிசைந்து பூரி சுட்டு பாருங்கள். பூரி உப்பி வரும்.

வணக்கம் தோழி....
நான் எனக்கு தெரிந்த ஒரு டிப் சொல்றேன்.... பூரி போட்டு எடுத்த இரண்டு நிமிடம் கழித்து oven-இல் ஒரு நிமிடம் வைத்து சூடு செய்து எடுங்க... அப்படியே உப்பி மொறுமொறுப்பாக இருக்கும்....
பானி பூரிக்கான பூரிகள் செய்வதற்கு இந்த முறையில் செய்தால் ரொம்பவே நல்லா வரும்....

sona

Here is a little suggestion for making puri puffy, make the dough really stiff. also u can add rava its also gives cripsyness.

பதில் கொடுத்த தோழீஸ் நன்றிபா. கண்டிபா நான் ட்ரை பன்னிட்டு சொல்ரேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

வினோ இந்த முறையில் நீங்கள் செய்வீர்களா..பூரி உப்பி வந்தாலும் நீண்ட நேரம் அப்படியே இருப்பதில்லையே .அதற்கு ஏதேனும் வழி உண்டா என யாரேனும் அனுபஸ்தர்கள் சொல்லுங்களேன் !!!சொல்லுவீர்களா ??

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

puri saya yapavum 1cup wheatflourna 1cup maida usepanuga mavupasanjaparam 20minu modi vaikavum 2spoon ravause panalam

ஹலோ தோழிகளே நலமா? நான் அறுசுவைக்கு புதுசு! பூரி உப்பி வருவதற்கு கோதுமை மாவுடன் சிறிதளவு அதாவது 1 கப் கோதுமை மாவோடு 5 தேக்கரண்டி ரவை 1 தேக்கரண்டி சர்க்கரை,1/2 தேக்கரண்டி பேகிங்சோடா சேர்த்து செய்யவும்.பூரி மாவை 1 மணி நேரம் ஊற விடவும். பூரி இடும்போது மாவுக்கு பதிலாக எண்ணை தொட்டுக் கொண்டு இட்டால் உப்பலாக வருவதோடு எண்ணையில் மாவு வராது.பூரிகளை ரொம்ப மெல்லியதாக இடாமல் கொஞ்சம் திக்காக இட்டால் சூப்பர் ஹோட்டல் பூரி உங்கள் வீட்டிலும்!

ஹாய் ராதாபாலு,1கிலோ கோதுமைமாவுக்கு மற்றவையெல்லாம் எவ்வளவு போடவேண்டுமென்ரு சொல்லுங்கலேன்.ப்ளீஸ்

we add one spoon of sugar in the maida or atta

மேலும் சில பதிவுகள்