செட்டிநாடு ஸ்பைஸி சிக்கன்

தேதி: December 8, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (11 votes)

திருமதி. ஜலீலா அவர்களின் குறிப்பினை பார்த்து செல்வி. சுகந்தி அவர்கள் செய்து பார்த்த செட்டிநாடு ஸ்பைஸி சிக்கன் இது.

 

சிக்கன் - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசைக்கரண்டி
பெரிய தக்காளி - இரண்டு
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - இரண்டு மேசைக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 100 மில்லி
இரண்டு அங்குலம் பட்டை - இரண்டு
ஏலக்காய் - நான்கு
மிளகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கடைசியில் தூவ:
மிளகு - ஒரு தேக்கரண்டி (பொடித்து கொள்ளவும்)
எலுமிச்சை - இரண்டு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது


 

சிக்கனை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், மிளகு, கறிவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.
பிறகு அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிய உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
வதக்கி நிறம் மாறியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் போட்டு வதக்கி விட்டு சிக்கனை போட்டு அதிக தீயில் வைத்து கிளறவும்.
பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு உப்பும் சேர்த்து நன்கு கிளறி தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் தக்காளியை வதங்க விடவும்.
பிறகு அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் வேக விடவும்.
தண்ணீர் எல்லாம் நன்கு சுண்டிய பின்பு, புளிப்பு சுவைக்கு தகுந்த மாதிரி எலுமிச்சைச்சாறு ஊற்றவும்.
அதன் பின், பொடித்த மிளகு தூளை காரத்திற்கு ஏற்றாற்போல் போடவும் .ஒரு இரண்டு நிமிடம், நன்கு கலக்கி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான செட்டிநாடு ஸ்பைஸி சிக்கன் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா சுகந்தி முதல் விளக்கப்பட குறிப்பு கொடுத்தாச்சா வாழ்த்துக்கள் வாழ்த்துகள். அதுவும் ஜலீலா மேடமோட குறிப்பு செய்து பார்த்து சொல்லி இருக்கீங்களா சபாஷ். ரொம்ப தெளிவான படங்கள். தொடருந்து கொடுங்க சுகன்.

வீட்டில் எல்லாரும் நலம்தானே இதை சாப்பிட்ட பிறகு.(hey just for fun ma)

ஹாய் சுகந்தி குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு மேலும் பல குறிப்பு கொடுத்து அசத்துங்க

இங்க பாருங்கப்பா சமைக்கவே தெரியாது சொன்ன பொண்ணூ சூப்பர் குறிப்பா கொடுத்து அசத்தி இருக்காங்க. உண்மையில் நீங்க சமைச்சதா என்னால நம்ப முடியல சுகி. சுகி இந்த சமையல் குறிப்பு மாதிரி க்ராஃப்ட்டும் கூடிய சிக்கிரத்துல செஞ்சு காண்பிச்சுடுங்க. ஜலீலா மேடம் ரெசிப்பி செஞ்சுப்பார்த்து முதல் முறையா எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுகி. மேலும் நிறைய குறிப்பு கொடுத்து அசத்த வேண்டும்.

அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை டீம் க்கு ரொம்ப ரொம்ப நன்றி......என்னால நம்மவே முடியல, ஆபீஸ் புல்லா தந்தூர அடுச்சுட்டேன். இது தான் என் லைப் ல முதல் சமையல்.... ரொம்ப ரொம்ப சந்தோசம். ஜலீலா அம்மா க்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

முதல் ஆள வந்து பின்னூட்டம் தந்ததுக்கு நன்றி யாழினி. நான் அட்மின் அண்ணா க்கு அனுப்பும் போதே, பின் குறிப்புல :சாப்பிட்டவர்கள் அனைவரும் நலமே ன்னு சொல்லி தான் அனுப்பினேன் யாழினி.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி நஸ்ரின்....

வினோஜா, நான் தான் பண்ணினேன், நம்பலாம் வினோ. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா சோம்பேறி தனத்த கம்மி பண்ணி, ஒன்னு ஒண்ணா தொடங்கி இருக்கேன். கண்டிப்பா சீக்கரம் craft பத்தியும் அனுப்பிடறேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகந்தி, சமையல் கட்டுக்கு போற பழக்கம் உண்டா பா : ;)) சும்மா தான் கேட்டேன். கோச்சுக்காதே. முதல் குறிப்பு மாதிரியே தெரியாத அளவுக்கு படங்களும், செய்முறை குறிப்புகளும் அருமையோ அருமை பா. நல்ல ருசியாவும் இருக்கும்னு பார்க்கும் போதே தெரியுது. இந்த சன்டே இதுதான் எங்க வீட்டு மெனு. வாழ்த்துக்கள் பா. தொடர்ந்து குறிப்புகளை தந்துட்டே இரு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுகன் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய குறிப்புக்கள் செய்துகாட்டுங்க.

உன்னை போல பிறரையும் நேசி.

ஆஹா...முதல் குறிப்பையே அசத்தலான குறிப்பாக செய்து கொடுத்துட்டீங்க...
இனி நிறைய குறிப்புகள் இது போன்று செய்து அனுப்புவீங்கன்னு எதிர்ப்பார்க்கின்றோம்.
உங்கள் குறிப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சூப்பரா இருக்குப்பா..நான் வீட்டில் நான்வெஜ் செய்யறதில்லை..இல்லைன்னா
செய்து பார்த்துடுவேன்..அப்படியே ஒரு பார்சல் அனுப்புங்க எனக்கு :-

நல்ல தெளிவான படங்கள்.அருமையான குறிப்பை தந்த ஜலீலாவுக்கும்,அதை செய்து அசத்திய உங்களுக்கும் பாராட்டுக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இப்ப தான் சமையல் கட்டு பக்கமே போறேன், உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி கல்ப்ஸ், சண்டே பண்ணி பாத்துட்டு சொல்லுங்க....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

தேவி, உங்க பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி!!!!

அப்சரா, உங்களிடம் இப்ப தான் முதல் முறையா பேசறேன். அதுவே உங்களுக்கு நன்றி சொல்ல. உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப சந்தோசம்.....

இளவரசி, நான் நேத்து தான் உங்க receipe க்கு பின்னூட்டம் தந்துட்டு வந்தேன். உங்க பாராட்டு க்கு நன்றி பா, கண்டிப்பா அடுத்த டைம் பண்ணும் போது, பார்சல் அனுப்பிடறேன்...நான் உங்களோடது தான் தெளிவான படம் ன்னு சொல்லுவேன், நான் மொபைல் ல எடுத்ததனால, கொஞ்சம் சரியாய் வரல.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இது தான் உங்க முதல் குரிப்பா அருமை இன்னும் நிரைய குரிப்புகள் கொடுத்து பதக்கங்கள் வாங்க என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
ஸ்ரீ

முதல் குறிப்பா வாழ்த்துக்கள்:)) ஆனா எனக்கு கேட்க பிடிக்காத குறிப்பு;(( பேரை பார்த்து செய்ததும் நீங்க தான் என்றதும் வாழ்த்து சொல்லலாம்னு வந்தேன், தொடர்ந்து குறிப்புகள் அனுப்புங்க சுகி:)) சைவமா அனுப்பினா நானும் ட்ரை பண்ணி பார்ப்பேனே:)) வாழ்த்துக்கள்:)

அன்புடன்
பவித்ரா

///முதல் குறிப்பா/// ---------தப்பு பவி, முதல் குறிப்பு மற்றும் முதல் சமையல்......
நீங்க சைவமா, சரி விடுங்க. அடுத்த குறிப்பு சைவமா அனுப்பிடறேன்....வாழ்த்துக்கு
நன்றி பவி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இப்ப இந்த இரண்டு மாதத்தில் இரண்டு முன்று முறை செய்து விட்டு ஒன்றிரண்டு போட்டோதான் எடுக்க முடிந்த்து.
இந்த குறிப்ப முகப்பில் பெயரை மட்டும் பார்த்துட்டு
ஆகா நாம அனுப்பலாமுன்னு இருந்தோமே யாரோ அனுப்பிட்ட்டாஙக். உடனே பார்க்கமுடியல

பிறகு வந்து பார்த்தால் செல்வி சுகந்தி 86 க்கு வாழ்த்துகக்ள்.
முத்ல் சமையல் குறிப்பு அதுவும் என் குறிப்ப எடுத்து செய்தது மிகவும் சந்தோஷம்

யாழினி,நஸ் ரீன், வினோஜா, கல்பனா, எம், தேவி, அப்சாரா, இளவரசி, ஸ்ரீமதி கதிர்
அனைவருக்கும் நன்றி
பவி ( நீங்க வெஜ் என்றால்) சுகந்திக்கு வாழ்த்து மட்டும் தெரிவிக்கலாம்,
பிடிக்காத குறிப்பு என்பது சரியில்லை இல்லை இல்லையா.
இப்படிக்கு
ஜலீலா

Jaleelakamal

அடடா...........சுகிக் குட்டியா! சமைக்க ஆரம்பிச் சாச்சா.வருபவர் கொடுத்து வைத்தவர்தான். நான் திருமணம் செய்த பின் தான் சமைக்கவே ஆரம்பித்தான்.

மிகவும் வித்தியாசமான குறிப்பு கொடுத்திருக்கீங்கள்.முதல் குறிப்பு மாதிரியே தெரியாத அளவுக்கு படங்களும், செய்முறை குறிப்புகளும் அருமையோ அருமை.
வாழ்த்துக்கள் சுகந்தி. சமைத்து பார்த்துவிட்டு சொல்ல்கின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சுகி இன்று உங்கள் செட்டிநாடு ஸ்பைசி சிக்கன் செய்தேன். ரொம்ப நன்றாக வந்தது. ஜலீலா மேடமிற்கும் தேங்ஸ்...
வாழ்த்துக்கள் சுகி.

அன்புடன்
மகேஸ்வரி

ரொம்ப சந்தோசம்,இது தான் என் முதல் குறிப்பு, இக்குறிப்பின் சொந்தகாரர் ஜலீலம்மா க்கு என்னுடைய ஸ்பெஷல் தேங்க்ஸ்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மன்னிக்கணும், இப்ப தான் உங்க பதிவை பாத்தேன். உங்க வாழ்த்தை பாத்து மெய்மறந்தேன். மிக்க சந்தோசம்,வாழ்த்துக்கு நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இவளோ லேட் ஹா பாக்கறதுன்னு நீங்க நினைக்கறது தெரியுது. மன்னிக்கணும் . இவங்களோட வாழ்த்துக்கள் எல்லாம் உங்களுக்கே சொந்தம்...:-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இதை வீட்டில் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது