இனியொரு பணி செய்வோம் - 9

COMMUNICATION SKILLSWork from home


சென்ற பகுதியைப் படித்துப் பார்த்தீர்களா? ஆர்வமுள்ள தோழிகள் நிச்சயம் ஒரு படி மேலே போய், ப்ரிட்டிஷ் கவுன்சிலின் வெப்சைட்டையும் பார்த்திருப்பீர்கள்தானே!

சரி, சென்ற பகுதியில் என்ன பேசினோம் என்று ஒரு ரீ-கேப் –

ஆட்டிடியூட் என்றால் என்ன?

ப்ரிட்டிஷ் கவுன்ஸிலின் வேலை வாய்ப்புகள், அவை பற்றிய விவரங்கள் எங்கே கிடைக்கும்?

அவர்களது இண்டர்வியூவுக்கு தயார் செய்வதோடு, நம்முடைய BEHAVIORAL COMPETENCYயை நாமே அறிந்து கொள்வது.

வேலைக்கான அப்ளிகேஷன் ஃபார்ம் எப்படி நிரப்ப வேண்டும்?

அவர்கள் எதிர்பார்க்கும் திறமைகள், அதற்கான உதாரணம்..

திறமைகள் மற்றும் லெவல்கள், லெவல் 1ல் என்ன இருக்க வேண்டும்?

இவைதானே!!

சரி, மேலே பேசுவோமா?

சென்ற பகுதியில் குறிப்பிட்ட உதாரணத்துக்கே திரும்பவும் வருகிறேன்.

ACHIEVEMENT – Level 1

இதில் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதிகளையும், அவை உங்களிடம் இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளும் வழிமுறையாக

S T A R என்ற ப்ரொஸெஸ் பற்றி சொல்லியிருந்தேன்.

திரும்பவும் விளக்குகிறேன்:

(I) வேலைக்கான தகுதிகள் – தலைப்புகளாகவும்,

(II) அவற்றின் லெவலுக்குத் தகுந்தாற்போல் அதில் உள்ள சில அம்சங்கள் – உட்பிரிவுகளாகவும் (படிகளாகவும்),

(III) அவை உங்களிடம் இருக்கின்றனவா என்பதை நீங்கள் ஆதாரத்துடன் (உங்கள் அனுபவங்களின் வாயிலாக) பதிலாகவும்

(IV) அந்த பதிலின் ஸ்ட்ரக்சர் - சிச்சுவேஷன் S, டார்கெட்/டாஸ்க் T, ஆக்‌ஷன் A, ரிசல்ட் R, S T A R என்று அமைய வேண்டும்.

ACHIVEMENT - லெவல் 1ல் என்ன இருக்க வேண்டும்?

1. பணியில், உங்களிடம் எதிர்பார்க்கப் படுவது என்ன என்ற தெளிவான புரிதல்.

2. பணியைப் பற்றிய உற்சாகமான, நேர்மறையான சிந்தனைகள்.

3. தடைகளைக் கண்டு சோர்ந்து விடக் கூடாது.

4. முக்கியமாக, நமது வேலையை சரியாக செய்யும் அதே நேரத்தில், மற்றவர்களின் உரிமைக்கு மதிப்பு கொடுத்தல்.

இவையெல்லாம் உங்களிடம் இருக்கிறன்றன என்று உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லி, நீங்கள் விளக்கலாம். அது உங்கள் முந்தைய பணியிலோ, கல்லூரி வாழ்க்கையிலோ, அல்லது சொந்த வாழ்க்கையில் நடந்ததாகவோ இருக்கலாம்.

உதாரணங்கள் பார்ப்போம்:

முந்தைய வேலையில், வருடக் கடைசிக்கான அக்கவுண்ட்ஸ் முடித்தது

காலேஜில், கல்சுரல் ப்ரோக்ராமில் நீங்கள் பொறுப்பேற்று, நடத்திய டான்ஸ் நிகழ்ச்சி.

ப்ளஸ் டூ முடித்த பின், மேலே என்ன படிப்பது, எங்கே படிப்பது என்பதை முடிவு செய்து, வெற்றிகரமாக டிகிரி வாங்கியது.

முதல் உதாரணத்தை, ACHIEVEMENT LEVEL 1 – இதை விளக்குவதற்கு எடுத்துக் கொள்வோம்

ஃபைனல் அக்கவுண்ட்ஸ், எப்படி முடிக்கணும், எந்த தேதிக்குள் முடிக்கணும், யாரிடம் வெரிஃபை செய்து கொள்ளணும், எங்கே சப்மிட் செய்யணும் – இது முதல் அம்சம்.

என்னால முடியும், இன்னும் இத்தனை நாள் டயம் இருக்கு, அதற்குள் தாராளமாய் செய்து விடுவேன் என்ற உற்சாகம் – இது இரண்டாவது அம்சம்.

தேடிய லெட்ஜர்கள் கிடைக்கலை, மற்ற ரெஜிடர்கள் அப்டேட் செய்யப்படலை, உதவிக்கு இருந்தவர் திடீரென்று லீவு – சமாளிக்க முடியணும் – இது மூன்றாவது அம்சம்.

நம்முடைய வேலையை முடிக்கணும் என்பதற்காக, மற்றவர்களின் வேலையில் தொந்தரவு கொடுக்க முடியாது. கடைசி நேர நெருக்கடி கொடுப்பது, அவர்களை கோபிப்பது, சரியான ட்ரெயினிங் கொடுக்காமல் இருப்பது – இப்படியெல்லாம் செய்ய முடியாது. நன்றாக வேலை செய்தால் அவர்களைப் பாராட்டணும், அதற்குண்டான அடிஷனல் பெனிஃபிட்(ஓவர் டைம், ஃபுட் அலவன்ஸ், இந்த மாதிரி) அவர்களுக்குக் கிடைக்க செய்யணும் – இது நாலாவது அம்சம்.

இந்த நிகழ்வை, ஏற்கனவே சொன்ன S T A R முறையில் எழுதிப் பாருங்கள்.

இருக்கும் ரிஸோர்ஸை வைத்துக் கொண்டு, வருடாந்திர கணக்கு முடித்தல் – இதுதான் சிச்சுவேஷன்.

சொன்ன தேதியில், குழப்பம் எதுவும் இல்லாமல், அந்த இலாகாவிடமிருந்து QUERY எதுவும் வராமல், முடித்துக் கொடுத்து, சபாஷ் வாங்கணும் – இது டாஸ்க்/டார்கெட்.

வருட முழுவதும் உள்ள ரெஜிஸ்டர்கள், லெட்ஜர் போஸ்டிங் எல்லாம் க்ராஸ் செக் செய்து, உதவியாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கி, ஆர்கனைஸ்ட் ஆகப் பார்த்தது – இது உங்களுடைய ஆக்‌ஷன்.

சரியான முறையில் எல்லாம் நடந்தது எப்படி – இது நீங்க கொடுத்த ரிசல்ட்.

முக்கியமான ஒன்று – இதை நீங்க இங்கிலீஷில், 200 வார்த்தைகளுக்குள் எழுதணும். இது ஒன்றும் சிரமமில்லை. உங்க கம்ப்யூட்டர் நீங்க எழுதியதில் எத்தனை வார்த்தைகள் இருக்கு என்று சொல்லி விடும்.

சரி, அடுத்த தகுதி – டீம் வொர்க்கிங். லெவல் 1

இதில் அவர்கள் எதிர் பார்ப்பது -

1. முழு விருப்பத்துடன் ஒத்துழைப்பது.
2. மற்றவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்.
3. டீம் மெம்பர்களுக்கு உதவி தேவைப்படும்போது, அதிக முயற்சி எடுத்து, அவர்களுக்கு உதவுவது.
4. மற்ற டிபார்ட்மெண்ட்களிலிருந்து தேவைப்படும் உதவிகளைப் பெற வழிகள் கண்டுபிடிப்பது.
5. நிறுவனங்களும், குழுக்களும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதைப் புரிந்து நடப்பது.

இதில் உங்கள் தகுதி, லெவலை விளக்க, இரண்டாம் உதாரணமான – காலேஜ் டான்ஸ் ப்ரோகிராமை நீங்கள் எடுத்து நடத்தியதை சொல்லலாம்.

டீமின் மற்ற மெம்பர்களுடன், ஒத்திகை, டிரஸ் வாங்குவது, இதற்கெல்லாம் முழு விருப்பத்துடன் ஒத்துழைப்பது – முதல் அம்சம்.

பாடல்கள், கோரியோக்ராஃபி இவற்றில் மற்றவர்கள் யோசனை சொன்னால், டிஸ்கஸ் செய்து, OPEN MINDED ஆக ஏற்றுக் கொள்வது – இரண்டாவது அம்சம்.

குழுவினரில் சில பேருக்கு, சில ஸ்டெப்ஸ் வரவில்லை, கூடுதல் நேரம் எடுத்து, ஒத்திகை செய்யணும், ஒரே நேரத்தில் வர முடியலை, தனிப் பட்ட நேரம் தேவைப்படுது என்றால், முகம் சுளிக்காமல், கூடுதல் முயற்சியுடன் உதவி செய்யணும் – மூன்றாவது அம்சம்.

நீங்கள் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட், நன்றாக ஆடக்கூடிய உங்கள் பள்ளித் தோழி – வேறு டிபார்ட்மெண்ட், அவளையும் உங்கள் குழுவில் சேர்க்கணும் என்றால், 2 H O D களிடமும் பெர்மிஷன் வாங்கணும். இரண்டு பேருக்கும் COLD WAR என்றால், என்ன செய்வது? யார் சொன்னால், இரண்டு பேரும் கேட்பார்களோ, அவங்க மூலமாக மூவ் செய்து, பெர்மிஷன் வாங்கணும் – இது நான்காவது அம்சம்.

நீங்க யு.ஜி. படித்த காலேஜில், குத்துப் பாட்டு, ஓரியண்டல் டான்ஸ் என்று அமர்க்களப்படுத்தியிருக்கலாம். அதே வகை டான்ஸ் செலக்ட் செய்வதற்கு முன்னால், நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களிடம் விசாரித்துக் கொள்வது அவசியம். இங்கே கிளாசிகல் டான்ஸ் மட்டும்தான் அனுமதி, என்றால், அதன் காரணம், இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் மதிப்பீடுகள் வேறு என்பதைப் புரிந்திருக்க வேண்டும் – இது ஐந்தாவது அம்சம்.

இதை இப்போது ஸ்டார் S T A R முறையில் எழுதுவோமா?

கல்சுரல் ப்ரோகிராமில் டான்ஸ் நிகழ்ச்சி, உங்கள் பொறுப்பில் – இது சிச்சுவேஷன். S

எந்த வகை நடனம், ஆடுபவர்கள் யார், எப்போது, எப்படி, ப்ராக்டிஸ் செய்வது, என்ன மாடலில் ட்ரஸ் வாங்குவது, எல்லாம் முடிவு செய்து, எல்லோரது ஒத்துழைப்புடன், சிறப்பாக நடத்துவது – இது டார்கெட்/டாஸ்க். T

நடன வகை, பாடல்கள் செலக்ட் செய்தது, தினமும் எல்லோருக்கும் சௌகரியமான நேரத்தில் ஒத்திகை பார்த்தது, நடன அசைவுகளை மெருகேற்றியது, எல்லோருடைய ஒத்துழைப்பையும் பெற்றது – நிகழ்ச்சி அன்று சரியான முறையில் ப்ரசெண்ட் செய்தது – இது ஆக்‌ஷன். A

எல்லோரிடமும் தி பெஸ்ட் ப்ரோகிராம் என்று பெயர் வாங்கியது – இது ரிசல்ட். R

சரி, அடுத்த தகுதியாக அவர்கள் எதிர்பார்ப்பது :

FLEXIBILITY.

இதில் அவர்கள் LEVEL 1ல் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்னென்ன?

முதலில் அவர்கள் சொல்வது - FLEXIBILITY எனும் அனுசரித்துப் போகும் தன்மைக்கு அவசியம் இருக்கிறது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். அதாவது “ACCEPTING THE NEED FOR FLEXIBILITY”.

இதில் அவர்கள் எதிர் பார்க்கும் அம்சங்கள் ரொம்ப சிம்பிள்.

புதுமையான ஆதாரபூர்வமான, தெளிவான விஷயங்கள் தெரிய வரும்போது, இதுவரை இருந்த உங்களுடைய (முற்றிலும் மாறுபட்ட) எண்ணங்களையும் ஐடியாக்களையும் மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.

புதிய சிந்தனைகளை வரவேற்கவும், அடுத்தவர்கள் சொல்வதை, அவர்களது பார்வையிலிருந்து புரிந்து கொள்ளவும், கவனம் செலுத்தவும், திறந்த மனத்துடன் கேட்கவும், தயாராக இருக்க வேண்டும்.

இது நம்ம வீடுகளில் பெரியவங்க சொல்வதுதான். “நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்” என்று சொல்லாதே. அவ்வளவேதான்.

டீம் வொர்க்கும் ஃப்ளெக்ஸிபிலிடியும் கிட்டத்தட்ட ஒன்று போலவே தோன்றினாலும், முக்கியமான வித்தியாசம் – டீம் ஆக வேலை பார்ப்பது என்பது குழுவினருடன் வேலை பார்ப்பது. ஃப்ளெக்ஸிபிலிடி என்பது நீங்கள் தனி ஆளாகப் பணியாற்றினாலும் தேவைப்படும் ஒன்று., சரிதானே.

சரி, இந்தத் தகுதி, தன்னிடம் இருப்பதை, தான் டிகிரி வாங்கியது எப்படி என்பதை சொல்லி, விளக்கலாம்.

ப்ளஸ் டூ படிக்கும்போது, இந்த தோழியின் எண்ணம் எல்லாம், இஞ்சினீயரிங் படிக்கணும், நிறைய மார்க் எடுக்கணும் என்பதுதான். ஆனால், சோதனையாக, பரீட்சை சமயத்தில், உடல் நிலை காரணமாக, மார்க் குறைந்து விட்டது. இம்ப்ரூவ்மெண்ட் எழுதினால், நிச்சயம் கூடுதலாக மார்க் எடுத்து, தகுதி பெற முடியும். பலரிடமும் யோசனை கேட்டார். அதில் ஒருவர், “ஒரு வருடம் வெயிட் செய்து, இம்ப்ரூவ்மெண்ட் எழுதி, மார்க் வாங்கி, அடுத்த வருடம் அதிகப் போட்டிக்கிடையில் தடுமாறுவதை விட, இப்போது இளநிலை பி.எஸ்சி – கம்ப்யூட்டர் சயன்ஸ் எடுத்துப் படி, பிறகு எம்.சி.ஏ படிக்கலாம். இதுவும் ப்ரொஃபஷனல் டிகிரிதானே, என்றார். தோழிக்கு இது பிடித்திருந்தது. யோசித்துப் பார்த்து, அதன்படியே இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்தார்.

இது அவர் மற்றவர்கள் சொல்வதை, கவனமாகக் கேட்டு, ஆராய்ந்து, தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டதால்தானே சாத்தியமாயிற்று.

காலையில் 9 மணிக்கு, ஆஃபிஸுக்கு, கிளம்பிப் போய், சாயங்காலம் 6 மணிக்கு வீடு திரும்பும் ரொடீன் இப்போது ஐ.டி.அலுவலகங்களில் கிடையாது. இன்றைய இளைஞர்கள் வாங்கும் சம்பள விகிதம், சென்ற தலைமுறையினரை ஆச்சரியப் பட வைக்கிறது. அதே சமயம், இளைஞர்கள் தங்களை ஃப்ளெக்ஸிபிள் ஆக மாற்றிக் கொண்டார்கள், என்பது ஒரு முக்கிய காரணம் அல்லவா. இதையும் விட இன்னும் ஆச்சரியப் பட வைக்கும் விஷய்ம், வங்கிகளில், லெட்ஜர்களிலும், ரெஜிஸ்தர்களிலும், பக்கம் பக்கமாக எண்ட்ரிகள் போட்டு, எழுதி, வேலை செய்து வந்த, மத்திய வயதினர், கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டு, கலக்குகிறார்களே, இதுவும் கூட, காலத்துடன் அனுசரித்துப் போவதுதானே.

அடுத்து, கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் – இதில் அவர்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதைப் பார்ப்போம்.

ஏற்கனவே, ஒரு பகுதியில், கம்யூனிகேஷன் என்பது ஒரு பெரிய கடல் என்று சொல்லியிருந்தேன். அதில் லெவல் 1 என்பது என்ன, என்பது தெளிவாகக் குறிப்பிடப் படும்போது, நம்மை நாமே எடை போட்டுப் பார்த்துக் கொள்வது கொஞ்சம் சுலபமாகத்தான் தெரிகிறது.

COMMUNICATION SKILLS

Reading and Writing Skills

எழுதுவதில், படிப்பதில், திறமை.

நமக்குத் தெரிந்த மொழிகளில், பேசுவதோடு, இலக்கணப் பிழைகளும், எழுத்துப் பிழைகளும் இல்லாமல், எழுதத் தெரிய வேண்டும். படிப்பவர்களுக்கு நன்றாகப் புரிய வேண்டும். அதற்கு, நமக்கு அந்த மொழிகளில் நல்ல ஆளுமை இருக்க வேண்டும்.

Speaking and Listening Skills

பேச்சுத் திறன், கவனிக்கும் திறன்

பேச்சுத் திறன் என்பது, சொல்ல வந்ததை, தெளிவாகவும், சுவாரசியமாகவும், அதே சமயம், கஸ்டமர் அதை ஒப்புக் கொள்ளும் விதமாகவும் பேச வேண்டும். அத்துடன், கஸ்டமர் சொல்வதை, கவனமாகக் கேட்க வேண்டும். இங்கே கஸ்டமர் என்று சொல்வது நம்மிடம் உள்ள பொருள், சர்வீஸ், இவற்றை பணம் கொடுத்துப் பெறுபவர்களை, EXTERNAL CUSTOMERS என்று சொல்கிறோம். அலுவலகத்தில், நம்முடன் பணியாற்றும் – மேலதிகாரிகள், சகாக்கள், நமக்குக் கீழே பணிபுரிபவர்கள் எல்லோருமே நமக்கு கஸ்டமர்கள்தான். இவர்களை INTERNAL CUSTOMERS என்று சொல்வோம்.

Understanding Purpose

தெளிவாகப் புரிந்து கொள்வதன் அவசியம்.

பேசுவதைப் புரிந்து கொள்ளாத அளவுக்கு நாங்கள் சின்னக் குழந்தையா என்று கேட்கத் தோன்றும்.

பேசப்படும் எல்லா வார்த்தைகளிலும் SURFACE LEVEL MEANING, DEEPER LEVEL MEANING, என்று இருக்கின்றன. “இந்த வேலையை உங்களால் மட்டும்தான் சிறப்பாக செய்ய முடிகிறது”, என்று சொல்லும்போது, அது ஒரு சமயம் மனமார்ந்த பாராட்டு. இன்னொரு சமயம், இதைத் தவிர, வேறொன்றும் செய்யத் தெரியாதா? என்ற கேள்வி அதில் இருக்கலாம்.

READ BETWEEN THE LINES என்று சொல்வார்கள். மேலே சொன்ன பாராட்டு மொழியில், ’இதே இடத்தில்தான் நீங்க இருக்கணும், ப்ரமோஷன் எதுவும் எதிர்பார்க்காதீங்க’ என்ற செய்தி கூட ஒளிந்திருக்கலாம்.

Understanding the audience

யாரிடம், பேசுகிறோம், எங்கே பேசுகிறோம், என்பதை கவனத்தில் கொண்டு, அவ்ர்களின் தேவையைப் புரிந்து கொள்வது. அதிலிருந்து நமக்குத் தேவையான விஷயங்களை கிரகித்துக் கொண்டு, சிறப்பான சர்வீஸ் தருவது.

ஒரு உதாரணம் சொல்கிறேன்.

ஒரு டாக்டரின் அனுபவம் இது:

நோயாளியின் கேஸ் ஹிஸ்டரியை விசாரிக்கும்போது, “ இது மாதிரி உங்களுக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறதா?” என்று கேட்கும்போது, அவர் டீடெயிலாக சொல்கிறார் – எப்படி? “ ஆமா, டாக்டர், 2-3 வருஷத்துக்கு மின்னே, எங்க அம்மா ரொம்ப சீரியசாக இருந்தப்ப வந்தது. அப்ப, உள்ளூர்லேயே வைத்தியம் பாத்துகிட்டேன், அப்புறம், போன வருஷம் போல, ஊரில வெள்ளம் வந்தப்பவும் இப்படி ஆச்சு. இப்ப நாலஞ்சு மாசத்துக்கு முன்னால, மச்சினன் கல்யாணத்துக்குப் போயிருந்த இடத்திலயும் முடியாம வந்துச்சு.”

இதில் டாக்டருக்கு கிடைக்கும் தகவல்கள் – ஏற்கனவே மூன்று முறை உடல் நலக் குறைவு இருந்திருக்கிறது என்பது மட்டுமே. என்ன வைத்தியம் செய்து கொண்டார், அதன் தாக்கம் எப்படி இருந்தது என்பதையெல்லாம் அவர் பொறுமையாகத்தான் கேட்க வேண்டும். “உங்க அம்மாவுக்கு முடியாம வந்ததும், வெள்ளம் வந்த கதையும், மச்சினன் கல்யாண தேதியும் எனக்கு எப்படித் தெரியும்?” என்று கோபப் பட முடியாது.

இது ரொம்பவும் நுணுக்கமான ஒன்று. உங்களிடம் பேசுபவர்கள், எந்த விதமான அடையாளத்தையும் காட்டாமல் இருக்கலாம். அல்லது, அவர்களது நிஜ நோக்கத்தை மறைத்துப் பேசலாம்.

நாம் என்ன பேச வேண்டுமோ, அதில் தெளிவாக இருந்து, இயல்பாகப் பேசினால், எந்தப் பிரச்னையும் வராது அல்லவா?

சில வருடங்களுக்கு முன், ஒரு வெற்றி விழா நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம். உயர்பதவியில் இருக்கும் ஒருவர், எழுத்தாளர், பேச்சாளரும் கூட. அந்த விழாவில் பேச, தகுதி படைத்தவர்தான்.

ஆனால், அவர் சரியாகத் தயார் செய்து கொண்டு வரவில்லை என்று நினைக்கிறேன். வெற்றி விழாவில், சம்பந்தப் பட்டவர்களை, வாழ்த்திப் பேசுவதற்கு பதிலாக, பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள், என்று சம்பந்தமில்லாத நெகடிவ் விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார். பார்வையாளார்கள் நெளிய ஆரம்பித்து விட்டார்கள். கடைசியில் அவர் பேச்சை அரைகுறையாக முடித்தார். எந்த இடத்தில், எதைப் பேச வேண்டும் என்பதை அவர் மறந்து விட்டார்தானே.

Understanding tools and media

தொடர்பு சாதனங்களையும் ஊடகங்களையும் கையாளத் தெரிந்திருப்பது

ஒரு பெரிய உலகளாவிய நிறுவனத்தில், நவீன தொடர்பு சாதனங்கள் அனைத்தும் இருக்கும். இவற்றைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். சிலவற்றைப் பற்றி, தெரியவில்லை என்றாலும், ட்ரெயினிங் கொடுத்தால், புரிந்து கொள்ளும் திறன் வேண்டும்.

டெலக்ஸ், ஃபாக்ஸ், OHP PRESENTATION, நவீன ஃபோன்கள், இண்டர்காம் சாதனங்கள், நவீன ரக கம்ப்யூட்டர்கள், ட்விட்டர் - இப்படிப் பல.

பத்திரிக்கைகள், டி.வி, இவற்றுக்கு கொடுக்கப் படும் விளம்பரங்களுக்கும், ப்ரஸ் நோட் எனப்படும் தகவலுக்கும் உள்ள வித்தியாசம் – என்று இவையெல்லாம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தால், சுவாரசியத்துக்கு அளவேது!

Knowledge Sharing

நமக்குத் தெரிந்ததை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.

சிலரைப் பார்த்திருப்பீர்கள் – என் வேலையை நானே பார்த்தால்தான் எனக்கு திருப்தி என்பார்கள். மற்றவர்களிடம் வேலையைக் கொடுக்கவே மாட்டார்கள். அவர்கள் பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

இன்னொன்று, இதைக் கற்றுக் கொண்டு, நம்மை ஓவர்டேக் செய்து விட்டால் என்ன செய்வது, என்ற பயத்திலேயே, பெரும்பாலானவர்கள், தனக்குத் தெரிந்ததை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

என்ன ஆகும் தெரியுமா? இவங்க தனக்குத் தெரிந்ததை மட்டுமே செய்து கொண்டு, அந்த இடத்திலேயே, தேங்கி இருப்பார்கள். மற்றவர்கள், முன்னேறிப் போய் விட்டதை, ரொம்ப லேட் ஆகத்தான் உணர்வார்கள்.

நம்முடைய வேலையை, தெளிவாகப் புரிந்து கொண்டு, அதை பல டாஸ்க் ஆக பிரித்து, யாரால் எந்த வேலையை நன்றாக செய்ய முடியும் என்று தெரிந்து, அவர்களிடம் அவற்றை ஒப்படைத்து, வேலை வாங்குவது மிகச் சிறந்த ஒன்று. இதை செய்வதற்கு, வேலையை ஒப்படைப்பது மட்டுமல்ல, அந்த வேலையின் தொடர்பான விஷயங்களையும் ஓரளவுக்கேனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நான் இவ்வளவு பெரிதாக சொல்ல வந்ததை, திருவள்ளுவர் இரண்டே வரிகளில் “இதனை இதனால் இவன் செய்வன் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்” அழகாக சொல்லி இருக்கிறார்.

COMPUTING SKILLS

கம்ப்யூட்டரைக் கையாளத் தெரிந்திருப்பது

Outlook, Word, Excel, PowerPoint, etc. இவை எல்லாவற்றையும் பற்றிய பிராக்டிகல் அறிவு.

உதாரணமாக, ஏதேனும் கம்பாரிஸன் ஸ்டேட்மெண்ட் ( சென்ற ஐந்து வருட லாபக் கணக்குகள்)தயாரிக்க வேண்டியிருந்தால், பொருத்தமாக, தலைப்புகள் தந்து, சீராக டைப் செய்வது, எக்ஸெலில் ஃபார்முலாக்கள் இணைக்கத் தெரிவது – இவை போன்றவை, புதிய ப்ரொடெக்ட் அறிமுகத்தை பவர் பாயிண்டில் ப்ரசெண்ட் செய்யத் தெரிவது. லேட்டஸ்ட் கம்ப்யூட்டர்களைக் கையாளத் தெரிந்திருப்பது, இப்படி எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும்.

மேலே சொல்லியிருக்கும் எல்லா விஷயங்களும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை தேடுவதற்கென்று மட்டும் இல்லாமல், பொதுவாகவே நாம் அறிந்து கொண்டிருக்க வேண்டியவைதானே. இவற்றில் நாம் எந்த விஷயங்களில் நம்மை டெவலப் செய்து கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு, அந்த இடைவெளியை நிரப்பி, அவற்றை மேம்படுத்திக் கொண்டால், எப்போதும் வெற்றி நமதே!

Comments

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள் சீதாம்மா, பிரிட்டிஷ் கவுன்சிலின் வெப்சைட் பார்க்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன், ஆனா இன்னும் பார்க்கலை, உங்களுக்கு பதிவு போட்ட கையோடு போய் பார்த்திடறேன். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது உங்களுடைய இந்த பகுதியின் மூலம். டீம் வொர்க் பற்றி நேர்முக தேர்வில் கேட்டால் என்ன சொல்வது என்று நிறைய முறை யோசித்துள்ளேன். இப்ப நிறையவே தெளிவு பிறந்திருக்கு சீதாம்மா.

அன்புடன்
பவித்ரா

அன்பு பவித்ரா,

இந்தப் பகுதியையும், இதற்கு முந்தின பகுதியையும், எழுதுவற்குதான், மிக அதிக நேரம் எடுத்துகிட்டேன். வேலை தேட ஆரம்பிக்கும் FRESHERS மட்டுமல்லாது, அலுவலகத்தில் அடுத்த லெவலுக்கு முன்னேற முயற்சிக்கும் அனைவருக்குமே, இது மிகவும் உபயோகமாக இருக்கும்.

இதில் சொல்லப்பட்டிருக்கும் எல்லாத் தகுதிகளிலும், லெவல் 1 பற்றி மட்டும், அதுவும் கொஞ்சமாகத்தான் சொல்லியிருக்கேன். இதற்கு மேல் இங்கே எழுதினால், படிக்கறப்ப, போரடிக்க ஆரம்பிச்சுடும். INTERACTION இல்லாம, எழுத்து வடிவில் மட்டும் படிக்கறப்ப, முக்கியமான பாயிண்டுகளை ஸ்கிப் செய்து விடவும் வாய்ப்பு இருக்கு இல்லையா.

இன்னும் மற்ற லெவல்கள்,(ஐந்து லெவல்கள் வரை இருக்கு) அவற்றுக்கான பாஸிடிவ் சிக்னல்கள், நெகடிவ் எச்சரிக்கைகள் என்று, இவற்றில் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கு. அவற்றைப் படித்துத் தெரிந்து கொள்வதற்க்கான ஆர்வத்தை இந்தப் பகுதி உண்டாக்கித் தரும் என்று நம்புகிறேன்.

பாராட்டுக்கும், பின்னூட்டத்திற்கும், மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அப்பா...எவ்வளவு இருக்கு..நீங்கள் சொல்ல்லியிருக்கும் எல்லாமே

மேலோட்டமாதான் தெரியும்..

அதிலுள்ள நுணுக்கங்களை நுண்ணியமா சொல்லியிருக்கீங்க..

ஒவ்வொன்றும் உதாரணம் கொடுத்து சொல்லிருப்பது..மிகவும் அருமை....

பயோடேட்டாவைத்தாண்டி அதிகம் யோசிக்க எவ்வளவு இருக்குன்னு தெளிவா

சொல்லியிருக்கீங்க..
இதை படிக்கும்போது இன்னும் நிறைய தகவல்கள் அவசியம் சேகரிக்கணும்னு நினைக்கிறேன்...சேகரிச்சப்பிறகு சந்தேகங்களுக்கு என் அன்பு தொல்லை தொடரும் உங்களிடம்

இதுக்காக எவ்வளவு நேரம் எடுத்துருப்பீங்க..இத இவ்வளவு நாள் படிக்க கூட இல்லையேன்னு குற்ற உணர்வா இருக்கும்மா
உங்க எளிமை,உங்களைவிட வயதில் அனுபவத்தில்,அறிவில் சிறியவர்களிடம் கூட நீங்கள் காட்டும் மரியாதை,அன்பு,அக்கறை,உலகத்தை பற்றிய உங்கள் விசாலமான பார்வையெல்லாமே நெகிழவைக்கிறது..
இதுபோன்ற அன்பு உள்ளங்களை அறிமுகப்படுத்திய அறுசுவைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு இளவரசி,

முதல் முதலாக வேலைக்கு அப்ளை பண்ணும்போது (25 வருடங்களுக்கு முன்னால்) எனக்கு பயோடேட்டா, ரெஸ்யூம், சி.வி. இந்த வார்த்தைகளுக்கு எல்லாம் அர்த்தம் கூடத் தெரியாது. என் கணவரின் நண்பரின் சகோதரர், அவருடைய கம்பெனியில் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக சொல்லி, அப்ளை செய்யச் சொன்னாராம். என் கணவர் எனக்காக, ஒரு அப்ளிகேஷன், கவரிங் லெட்டர் எல்லாம் டைப் அடிச்சு, என்னைக் கையெழுத்துப் போட சொன்னாங்க. அப்பல்லாம் எனக்குன்னு தனியாக பாங்க் அக்கவுண்ட் கூடக் கிடையாது. அதனால் கையெழுத்துப் போடுவது என்பது, அப்ளிகேஷனில் வெறும் பெயரை எழுதுவது என்ற அளவில்தான் எனக்குத் தெரியும்:):)

இப்படியே, ஒவ்வொரு விஷயமாக, கேட்டு, படிச்சு, தப்பு செய்து, திட்டு வாங்கி, ..தட்டுத் தடுமாறி, ஒரு ஃபார்முக்கு வந்திருக்கேன்.

ஜெயந்தி மாமி ஒரு இழையில் அழகாக சொல்லியிருந்தாங்க, எங்க தலைமுறையினரைப் பற்றி. பயந்து பயந்து, பம்மியே வாழ்க்கையை ஓட்டினவங்க நாங்க:) ஆனா, இன்றைய இளைய தலைமுறையினரின் தைரியம், அணுகுமுறை, இவற்றையெல்லாம் நான் ஆச்சரியத்துடனேயே பார்க்கிறேன். அதனாலேயே, உங்கள் அனைவரிடமும் எனக்கு தனி மரியாதையே உண்டாகிறது.

இங்கே அறுசுவையில், எல்லோருமே ஒவ்வொரு விதத்தில் சாதனையாளர்களாகத்தான் இருக்காங்க. உங்க அனைவரின் அன்பும் எனக்குக் கிடைத்த வரம். நீங்க சொல்வது போல, அறுசுவைக்கு நமது நன்றியை சொல்ல வார்த்தைகள் போதவில்லை.

நன்றி, இளவரசி, மீண்டும் பேசுவோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

I AM BASICALLY A SOFTWARE ENGINEER AND COMPLETED MBA(HR), I AM LOKING FOR A JOB THAT CAN BE DONE FROM HOME ITSELF WITH THE HELP OF COMPUTER AND INTERNET AND EARN MONEY.. PLEASE HELP ME BY GIVING YOUR SUGGESSTION...

I AM ALSO MCA COMPLETE .I HAVE COMPUTER AND INTERNET ,BUT I WANT HOMEBASED JOB,PLEASE HELP ME,

UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU

I DONT HAVE CHILD, BUT I AM GOING DO IUI,IUI MEANS,HOW DO IUI WILL BE DONE,TELL ME ,FREINDS

UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU

mam iam a B.E, degree holder i got married as soon as i finished my degree and now iam having 2 kids they are too little so i cant go for a job outside actually iam searching for a job,working from the home itself please help me. iam in bangalore and i din't have any work experience.

I AM B.A COMPLETE .I HAVE COMPUTER AND INTERNET ,BUT I WANT HOMEBASED JOB,PLEASE HELP ME,

hello Seetha Lakshmi Madam, I am Kavitha
online ill சம்பாதிக்க எதாவது வழி சொல்லுங்களேன் என்னக்கு டைபிங் இங்கிலீஷ் & தமிழ் தெரியும் so தயவுசெய்து சொல்லுங்க டேடா என்ட்ரி ல nambi காசுபோட பயமா இறுக்கு யாராவது நம்பிக்கையான நிறுவனம் இருந்தால் சொல்லுங்க Madam yennkitta onlimited netconnection & own System yellamae iruukku...