மாதம் 3 இலட்சம் எளிதாக சம்பாதிக்கலாம் - வழிமுறைகள் உள்ளே..

இப்படி ஒரு தலைப்பு கொடுத்தா எல்லாரும் தவறாம இதை கிளிக் பண்ணி உள்ளே வந்துடுவாங்கங்கிறதுக்கு, இதை படிக்கிற நீங்கதான் ஆதாரம். :-)

வீட்டில உட்கார்ந்து கால் ஆட்டிக்கிட்டே சம்பாதிக்கிறது, காஃபி குடிச்சிக்கிட்டே சம்பாதிக்கிறது, ஆன்லைன்ல சும்மா மெயில் செக் பண்ணினா சம்பாதிக்கிறது, கிளிக் பண்ணி காசு அள்ளுறது மாதிரியான வேலை வாய்ப்புகள் பற்றி ஏற்கனவே போதுமான அளவுக்கு எச்சரிக்கை கொடுத்தாச்சு. ஆனா, ஒவ்வொருத்தரும் தான் அனுபவப்பட்டுதான் தெரிஞ்சுப்பேன் ங்கிற பிடிவாதத்தோட இருக்கிற மாதிரி தெரியுது.

பணம் சம்பாதிக்கணும்னு எல்லாருக்கும் இருக்கிற சராசரி ஆசைய நிறைய பேர் பயன்படுத்தி, அவங்க சம்பாதிக்கிறதுக்கு வழி பார்த்துக்கிட்டு இருக்காங்க. இந்த ஏமாற்றுகள் பத்தி கொஞ்சம் தெரிஞ்சிருந்தாலும், புதுசா யாராவது எதாவது சொன்னா, இவர் சொல்றது உண்மையா இருக்குமோ, ட்ரை பண்ணிதான் பார்ப்போமே.. ன்னு எல்லாருமே அதை ட்ரை பண்ண ரெடியாயிடுறாங்க. ஏற்கனவே வேற ஒருத்தர்கிட்டே ஏமாந்தவங்ககூட மறுபடியும் ஏமாற தயாராகிறதுதான் இதில கொடுமையான விசயம்.

சமீபத்தில வீட்டில் இருந்தபடியே வேலை வாய்ப்புன்னு ஒருத்தர் கொடுத்திருந்த பதிவை பார்த்துட்டு நேயர் ஒருத்தர் அதை முயற்சி பண்ணப் போக, பிறகுதான் அது ஏமாற்றுன்னு தெரிய வந்திருக்கு. இன்னொருத்தர், இத்தனை பக்கத்தை காப்பி பேஸ்ட் பண்ணிக் கொடுத்தா இவ்வளவு பணம், அதுவும் அந்த பணத்தை உடனே கொடுக்க மாட்டோம், அடுத்து இவ்வளவு காப்பி பேஸ்ட் பண்ணனும், அதுக்கப்புறம் கொஞ்சம் கொடுப்போம் .. அப்படி இப்படின்னு என்னவோ கண்டிசன் எல்லாம் போட்டிருக்காராம். விசாரிச்சு நொந்து போய் ஒருத்தங்க மெயில் அனுப்பி இருக்காங்க.

அறுசுவையில பொதுவா இந்த மாதிரி விளம்பர பதிவுகளை அனுமதிக்கிறது கிடையாது. சில நேரத்துல, ஒருவேளை இது மத்தவங்களுக்கு பயனுள்ளதா இருக்குமோன்னு சில பதிவுகளை அனுமதிச்சிருக்கோம். அதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு சமீபத்தில இந்த ஒர்க் ஃப்ரம் ஹோம் பதிவுகள் நிறைய வர ஆரம்பிச்சிருச்சு. இப்ப எல்லா பதிவுகளையும் நீக்கிக்கிட்டு இருக்கோம்.

உண்மையான தொழில் வாய்ப்பை கொடுக்க நினைக்கிறவங்க, வெறுமனே ஒரு கோடி சம்பாதிக்கணுமா? என்னை தொடர்பு கொள்ளுங்கள் னு மெயில் ஐடி கொடுக்காம, நீங்க என்ன தொழில் செய்யறீங்க, அதில உள்ள வாய்ப்புகள் என்ன, எப்படி பணம் வருகிறது, எப்படி அதில் சேர்பவர்களுக்கு லாபம் வருகிறது, எத்தனை பேர் பயனுற்று இருக்காங்க..இந்த மாதிரி தகவல்கள் எல்லாவற்றையும் கொடுத்தால் மட்டுமே, அது மாதிரியான பதிவுகளுக்கு இங்கே அனுமதி கொடுக்கப்படும். வெறுமனே மெயில் ஐடி, போன் நம்பர் கொடுப்பவர்களது பதிவுகள் மட்டுமல்லாது, பதிவு கொடுத்தவர் பெயரும் இனி நீக்கப்படும். ஜனவரியில் இருந்து கட்டண விளம்பர பகுதி ஆரம்பிக்க இருப்பதால், இனி இது மாதிரியான விளம்பரங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்ங்கிறதையும் இங்கே தெரிவிச்சிக்கிறோம்.

good advice thank you

God is good

அண்ணா பை பை சொல்லிட்டு போனாலும் அப்பப்போ அறுசுவையை எட்டிப் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் :). நேற்று வந்த தலைப்பை பார்த்ததும் அங்கேயே எச்சரிக்கை பதிவு கொடுக்கலாம்னு இருந்தேன். ஆனால் எத்தனை வாட்டிதான் சொல்றதுங்கற அலுப்பு வந்திடுச்சு :(.
இப்பவும் இந்த தலைப்பை பார்த்ததும் வந்து நச்சுன்னு நாலு வார்த்தை சொல்லிட்டு(திட்டிட்டு :D) போகலாம்னுதான் வந்தேன். ஆனால் உங்கள் பதிவு :). இனிமேலாவது விழிப்பாக இருக்காங்களான்னு பார்ப்போம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அண்ணா, பொறுத்தது போதும்னு பொங்கி வந்துட்டீங்க போலிருக்கே ;) நல்லவேளை நான் உங்ககிட்ட டோஸ் வாங்கல. இந்த மாதிரி இழை எதாச்சும் தொடங்கியிருந்தா நான் உள்ள கூட போய் பார்க்க மாட்டேன். வெளியிலேயே அந்த இழையின் தலைப்பிலே படித்து சிரித்து விட்டு போய்விடுவேன். உழைத்த காசு நின்றாலே போதும் என்று இருக்கிறது. நம்மவர்கள் இது போன்ற குறுக்கு வழி பணம் சம்பாதிப்பதில் உள்ள தீமைகளை என்று உணர்வார்களோ? அண்ணா, நீங்க அதிகமா கோபபடாதீங்கண்ணா :)) இனிமேல் இந்த இழையை பார்த்தபிறகு இது போன்ற விளம்பரங்கள் குறையும் என்றே நம்புவோம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இன்னைக்கு யாருப்பா ????என்று நினைத்கிட்டே தான் பார்த்தேன்,ஏன்னா கடந்த சில நாளா இதே டாபிக்கில் நிறைய இழைகள்,அட்மின்சாரின் பதிவு என்றதும் சந்தோஷமாயிடுச்சு ,மக்களே திரும்ப திரும்ப ஏமாறாதீங்க.

அட்மின் அவர்களுக்கு,வணக்கம்.உங்கள் பதிவுதானா??நான்கூட என்னடா இது,ஆயிரக்கணக்கில் இருந்தது லட்சக்கணக்கில் மாறி விட்டதே!!!யார் போட்டு இருப்பார்கள்,என்ன சொல்லியிருப்பார்கள் என்று பார்க்க வந்தேன்.பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற மனிதனின் சராசரி ஆசையை,பயன்படுத்திக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்கள்!! இன்று,வீட்டில் இருந்து தொழில் செய்ய எவ்வளவோ தொழில்கள் இருக்கிறது.வீட்டிலேயே காளான் வளர்த்து மாதம் பத்தாயிரம் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.மக்கள் அவர்களுக்கேற்ற தொழிலை தேர்ந்தெடுத்து செய்யலாம்.அவர்களாக மனம் மாறினால்தான் உண்டு!!

அன்புடன்
நித்திலா

அண்ணா, நானும் //பை பை சொல்லிட்டு போனாலும் அப்பப்போ அறுசுவையை எட்டிப் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.// ;))
//ஜனவரியில் இருந்து கட்டண விளம்பர பகுதி ஆரம்பிக்க இருப்பதால், இனி இது மாதிரியான விளம்பரங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்ங்கிறதையும் இங்கே தெரிவிச்சிக்கிறோம்.// வரவேற்கிறேன்.

‍- இமா க்றிஸ்

உங்கள் அருமையான இழையைப்பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்.
இம்மாதிரி விளம்பரங்களைத் தவிர்க்கவும்,கட்டணம் வசூலிக்கவும் இருப்பது குறித்து நன்றி கலந்த சந்தோஷத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

ஹஹஹா... தலைப்பை பார்த்ததும் இது யாருடா புது ஃப்ராடுன்னு பார்த்தேன்... ;) நீங்க தானா??? கவிசிவா, சீதாலஷ்மி திட்டுல இருந்து ஒரு இழையும் தப்பியது, நீங்களும் தப்பிச்சுட்டீங்க :) நான்லாம் திட்டுவதில்லைப்பா.... ஏதோ பார்த்துட்டு அதுக்கு கீழ என் மெயில் ஐடி'னு பதிவு போடும் சில லூசு மக்களையும் பார்த்துட்டு "சுய புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை"னு சிரிச்சுகிட்டே போயிடுவேன். :D ஆனா தலைப்பில் "பாபு அண்ணா உள்ளே"னு எழுதி ஒட்டி இருக்கு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லா திட்டலாம் ன்னு, கோபத்தோட இந்த இளை ஓபன் பண்ணினேன். பாத்தா நீங்க தானா? வர வர நம்ம சைட் ல இந்த மாதிரி தேவையல்லாத விஷியம் நிறைய வர தொடங்கிடுச்சு.. அது எல்லாத்துக்கும் சேத்து ஒரு முற்றுப்புள்ளி வைக்கற மாதிரி இந்த இளை இருக்கட்டும்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அட்மின் அண்ணா\\ மாதம் 3 இலட்சம் எளிதாக சம்பாதிக்கலாம் - வழிமுறைகள் உள்ளே.. // இந்த தலைப்பு பார்த்தயுடனே சிரிப்புதான் வந்தது. என்னாதான் நம் தோழிகள் கண்டித்து பதிவு போட்டாலும்,நீங்க (அட்மின் )போட்டாதான் தோழிகளுக்கு ஒரு பயம் வரும் எனறு நான் நினைத்தே அதே போல் போட்டுடிங்க. மகிழ்ச்சி அண்ணா.;)

//ஜனவரியில் இருந்து கட்டண விளம்பர பகுதி ஆரம்பிக்க இருப்பதால், இனி இது மாதிரியான விளம்பரங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்ங்கிறதையும் இங்கே தெரிவிச்சிக்கிறோம்.//

இது நல்ல முடிவு. நான் வரவேற்கிறேன்.;)

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்