ஏகாதசி விரதம்

ஏகாதசி விரதம் எப்படி இருப்பது என்று தெரியபடுத்தவும்.முதன்முதலாக விரதம் இருக்கலாம் என்று உள்ளேன்.தயவு செய்து பதில் சொல்லவும் .

இது பெரிய விசயமே இல்லங்க நான் 8 வருடத்துக்கு முன்னாடி ஒரு தடவை ஏகாதசி விரதம் இருந்தேன். நீங்க இந்த மாதம் வருகிற தினத்தந்தி பேப்பருடன் ஆன்மீகம் பேப்பரும் வரும் அதுல போட்டுருப்பாங்க பாருங்க. தினமலருடனும் வரும்

கவிதா ஏகாதசி விரதம் எப்படி இருப்பதுலாம் எனக்கு தெரியாது ஆனா ஏகாதசி முழுக்க சாதம் சாப்பிடாமல் டிபன் மட்டுமே சாப்பிட வேண்டும், அன்று கண் முழித்து இருந்துவிட்டு அடுத்த நாள் துவாதசி அன்று காலையிலே சமையல் செய்து சாப்பிடுவோம். இப்போது கண் முழிப்பதுலாம் கிடையாது.

ஏகாதசி அன்று மாவு விரதம் இருக்கவேண்டும். அன்று காலை விரதம் இருந்து மதியம் பச்சரியை உடைத்து ரவை போல் ஆக்கி உப்புமா செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்யவேண்டும் அன்று ஒரு பொழுது தான் அப்படியென்றால் ஒரு வேளை மட்டுமே சாப்பிடவேண்டும்.
அன்று இரவு முழுவதும் தூங்ககூடாது விடியற்காலையில் 21 காய்கள் போட்டு சாம்பார் வைத்து, 3, 4 வகை கூட்டு, பொரியல் செய்து சுவாமிக்கு படைக்கவேண்டும். இது தான் ஏகாதசி விரதம் இருக்கும் முறை.

ஏகாதசி விரதம் அன்று இரவு முழுவதும் தூங்காமல் இருப்பது மிகவும் கஷ்டம் அதனால் இரவில் சிறிது நேரம் தூங்கிகொள்ளலாம், அப்போது தான் மறுநாள் சீக்கிரம் எழுந்து சமைத்து படைக்கமுடியும். எங்கள் வீட்டில் இப்படித்தான் செய்வோம்.

மேலும் சில பதிவுகள்