உப்பு தண்ணி

Hi friends எங்க போர் தண்ணி ரொம்ப உப்பு.பாத்ரூம்ல வெள்ள கலர்ல படிஞ்ஜி அசிங்கமா இருக்கு. எப்படி க்ளீன் பண்ணுரது.

தோழி தேவா,ஊரில் டாய்லட் ஆசிட் என்று கடைகளில்(மளீகை கடை) கேட்டால் கிடைக்கும்.அதை கரைகள் இருக்கும் பக்கம் ஊற்றி விட்டு ஐந்து முதல் பத்து நிமிடம் வரை யாரும்ம் அந்த பக்கம் போகாமல் இருங்கள்.பிறகு காலில் செருப்பை அணிந்து கொண்டு நல்ல கட்டை பிரஷ்ஷினால் தேய்த்தீர்களானால் எந்த மாதிரியான கரையும் கரைந்து போய்விடும்.
நான் ஊரில் இப்படித்தான் டாய்லெட் எல்லாம் க்ளீன் செய்வேன்.பளீச் என்றாகிவிடும்.என் அக்க வீட்டிலும் உப்பு தண்ணீர் தான்.என் அக்காவும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இப்படி க்ளீன் செய்து விடும்.
சிலருக்கு அந்த ஆசிட் ஊற்றும்போது புகை வருவது ஒத்துக் கொள்ளாது.எனவே முகத்தில் ஒரு துணியையும் கட்டி கொள்வது நல்லது.முயன்று பாருங்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மிக்க நன்றி, கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

மேலும் சில பதிவுகள்