ஞாயிறு வரமா, சாபமா?

ஞாயிறு என்றால் விடுமுறை,
சிலர் ஓய்வெடுப்பார்கள்,சிலர் வெளியே செல்வார்கள்,சிலர் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பார்கல்,
ஆனால் குடும்பதலைவிகளோ! ஸ்பெஷ்ல் சமையல்,வீட்டை சுத்தம் செய்வது,அந்த வாரத்துக்கு தேவையானவற்றை திட்டமிடுவது, அப்படியே வெளியே ஷாப்பிங் என பிஸியான நாளாகதான் இருக்கும்.
ஆனாலும் குடும்பத்துடன் இருப்பது சந்தோசம்தானே!
அதனால் உங்களோட கருத்த சொல்லுங்க தோழிகளே!
ஞாயிறு வரமா,சாபமா?

என்னபா இப்படி சொல்லீடீங்க சண்டே ஒரு வரம் பா அய்யோ அந்த ஒரு நாள் அனுபவிக்கும் இன்பத்தை என்ன வென்று சொல்ல எப்பவுமே 5.30 எழுந்துக்கரது வழக்கம் சண்டே மட்டும் 7.00 மணிக்கும் பெட் விட்டு எழுந்திரிக்க மனசு வராது அப்படியே கொஞ்சம் நேரம் டீவி பாத்துகிட்டே டேட்ஸ் குடிக்கிர சுகம் என்னன்னு சொல்ல அப்படியே 8.00 மணிக்கு எழுந்து ஒரு குளியல் அப்பரம் டிஃபன் ஃப்லோர் க்ளீன் இப்படி 10.00ஆகிடும் திரும்ப பெட்லயே ஒரு குட்டி தூக்கம் அப்பரம் லன்ச் முடித்து அம்மா வீட்டுக்கு ஒரு விசிட் அப்பரம் மாலை வீட்டுக்கு வந்து டிஃபன் சாப்ட்டு என்னவருடன் சண்டை போட்டுக்கொண்டே டீவி பார்த்துக்கொண்டே தூங்கிவிடுவேன் இவ்லோ நல்ல சண்டே ஒரு வரம் பா

அன்புடன்
ஸ்ரீ

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வரம் வீட்டு பெண்களுக்கு சாபம் பா சண்டே வந்தாளே எல்லா வேலையும் லேட் தான் என் பையன் சரியா சாப்பிடமாட்டன் விலையாட்டே கதியா இருப்பான் என்னவர் எழுந்துக்க லேட் ஆகும் கம்பியுட்டர் கிட்ட வரவே முடியாது குட்டி தூக்கத்த மறந்துடனும் வீடு வாசல் சுத்தமாயிருக்காது சிக்கன்,மட்டன் சமைக்கறது அய்யோ வேலை பெண்ட் கழளும் பா எனக்கு சாபம் பா
அன்புடன்
புவனா

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

எனக்கு வரம்ப்பா,ஏன்னா அன்று தான் பொருமையா வேலையை செய்யலாம். ஸ்கூல் டைமியில் அடிச்சு புடிச்சு சமைசக்கனும். ஆனா சண்டே பொறுமையா 8மணிக்கு காபி அதும் படம் பார்த்துக்கொண்டே,அப்புறம் 10மணிக்கு டிபன் செய்தால் சாப்பிட 10.30 ஆகும். அப்புறம் திரும்பவும் படம்(அ)தூக்கம் அதற்க்குள் சாதம் வைத்துவிட்டு வந்துவிடுவேன். 2மணிக்கு மேல் ஒரு ரசம் வைத்துவிட்டு சாப்பிட்டுவிட்டு அதற்க்கு மேல் வீட்டுவேலை என் ஹஸ்வுடன் செய்வேன் அப்புறம் வெளியே செல்வது இல்லை என்றால் திரும்பவும் புது படம் ஏதாவது பார்ப்பது.

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்