கர்ப்பிணி பெண்ணிற்கு இருமல்

நான் 8 மாதம் கர்ப்பமாக உள்ளேன், இப்பொழுது, 2 நாட்களாக வறட்டு இருமலாக உள்ளது , இருமி இருமி வயிறு மிகவும் வலிக்கிறது . டாக்டர் குடுத்த இருமல் மருந்து சாப்பிட்டும் குறையவில்லை, இன்று மிக அதிகமாக உள்ளது . உடனடியாக வறட்டு இருமலை நிறுத்த வழி சொல்லுங்கள் plssssssssssss

pls help me friends

ஹலோ மீனா, மீனா தான பா உங்க பேரு. வாழ்த்துக்கள்.
தொண்டை யில் அம்ருதாஞ்சன் தேச்சு பாருங்க பா. ஓரளவு இருமல் குரையும். கொஞ்சம் தொண்?டை வறட்சி ய இருந்து இருமல் வரப்போகுது நு தெரியுரப்ப லைட்டா சுடு தண்ணி கொஞ்சம் வெதுவெதுப்பா வெச்சு குடிச்சு பாருங்க .
ஆரோக்யமான குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

தோழியே, இந்த வீட்டு வைத்தியம், எனக்கு தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள் வரும்போதெல்லாம் நான் விடாமல் செய்து வருவது. கண்டிப்பாக பலன் தரும். மூன்று நாட்கள் இரவில் தூங்க போகும் முன் வெதுவெதுப்பான பாலில் மிளகு தூளும், மஞ்சள் தூளும் சேர்த்து குடித்து வரவும். நல்ல முன்னேற்றம் தெரியும். சுகபிரசவமாக வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தோழி மீனா இரவில் பால் உடன் பணங்கல்கண்டு சேர்த்து சாப்பிடவும் சரியாகிவிடும். நல்ல என்ஜாய் பண்ணுங்க பேபி உடன்.

எனக்கு இன்னும் இந்த இருமல் நிற்கவில்லை, மிகவும் சிரமமாக இருக்கிரது, இப்பொலுது எனக்கு 35 வாரம் ஆகிரது, மிகவும் கஷ்டப்படுகிரேன், டாக்டர் cough syrup மாற்றிகொடுத்தும் பயனில்லை, கொஞ்சமாவது இந்த வரட்டு இருமல் குறைய வழி சொல்லுங்கள். நான் பனங்கல்கன்டு, மிளகு, மஞ்சள் தூள் எல்லாம் முயற்சித்து விட்டேன். plssssssss help me friends

try ginger and honey. take steam inhalation every 4 hours . keep urself warm.wear socks also. sit under the morning and evening sunlight to get warm.

God is good

நான் 3 மாதம் கர்பமாக உள்ளேன் எனக்கு இருமல் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது சரியாக மருத்துவ குணம் சொல்லுங்க

மேலே சகோதரிகள் சொல்லியிருப்பவற்றை முயற்சி செய்து பார்த்தீர்களா?

அடிக்கடி வெல்லிய வெந்நீரில் உப்பைக் கலந்து தொண்டையில் படுவது போல் வைத்துக் கொப்பளியுங்கள். இளஞ்சூட்டு நீரில் எலுமிச்சை பிழிந்து குடிக்கலாம். தேனில் இஞ்சி ஊறவைத்து இருமல் வரும் போது உமிழ்ந்தால் சற்று இலகுவாகும். உப்பையும் மிளகையும் கலந்து வைத்திருந்து இருமல் வரும் போது சிறிது வாயில் போட்டு மெல்லலாம்.

இருமல் எதனால் வருகிறது என்பதை அறிவது அவசியம். சாதாரண தொண்டை வரட்சியால் வரும் இருமல் முதல் கக்குவான் வரை எல்லாமே இருமல் தான். சற்று முன்னெச்சரிகையாக இருப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்