கிரீன் டீ ....ஒரு எச்சரிக்கை

தோழிகளே....
வணக்கம். கிரீன் டீ யைப் பற்றி ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். அதை எச்சரிக்கை என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.
நான் சாதாரணமாக கிரீன் டீ எல்லாம் குடிப்பதில்லை. இயற்கையாகவே எனக்கு மெலிந்த உடல் வாகு என்பதால் அதற்க்கான அவசியமும் ஏற்படவில்லை. உடல் இளைக்க வேண்டும் என்பதற்காக அல்லாமம் கிரீன் டீ உடம்புக்கு நல்லது என்பதால் நாமும்தான் ட்ரை பன்னுவோமே என்று இரண்டு நாட்களுக்கு முன்பு காலையில் சர்க்கரை இல்லாத கிரீன் டீ குடித்தேன். அடுத்த ஐந்தாவது நிமிடம் மயக்கமடைந்து விழுந்துவிட்டேன். ஹாஸ்பிடலுக்கு போனதில் எமர்ஜென்சி பிரிவில் அட்மிட் செய்துவிட்டார்கள். நான் கிரீன் டீ குடித்த காரணத்தால் ரத்த அழுத்தம், சர்க்கரை எல்லாம் மிகவும் குறைந்து மயக்கமடைந்ததாக டாக்டர் கூறினார். ரத்த அழுத்தம் & சர்க்கரை அளவு எல்லாம் border line il உள்ளவர்கள் கிரீன் டீ குடித்தால் இந்த மாதிரி நினைவிழந்து விழ நேரிடும் என்றார். எனவே தோழிகளே கிரீன் டீ குடிப்பதற்கு முன்பு உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் சுகர் அளவைத் தெரிந்து கொண்டு பிறகு அதைப் பயன் படுத்துங்கள்.
நன்றி
ஸ்ரீவித்யா

பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி. இரண்டு வருடங்களுக்கு முன் எனக்கும் கிரீன் டீ குடித்தவுடன் ரத்த அழுத்தம் குறைந்தது. கொஞ்சம், மயக்கமாக இருந்தது. ஹாஸ்பிட்டல் செல்லவில்லை, ஆனால் கிரீன் டீ குடிப்பதையே நிறுத்திவிட்டேன். உபயோகமான தகவலுக்கு நன்றி ஸ்ரீவித்யா.

நான் ஒரு புத்தகத்தில் படித்தேன்,அல்சர் ப்ராப்ளம் இருக்கிறவங்க வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்ககூடாது,டீயை ப்ளைனாக குடிக்கணும்,சுகர் தேன் என எதுவும் சேர்க்ககூடாது.

எல்லாரும் நல்லாருக்கீங்களா? உங்க அனுபவத்தை சொல்லி எங்களை உஷார் பன்னியதற்க்கு ரொம்ப நன்றி...

4நாளைக்கு முன்ன வினீயும் இப்படிதான் சொன்னாங்க பேப்பர்ல போட்டுருக்கு நல்லதுன்னு. க்ரீன் டீத்தூள் வாங்கி வெச்சுருக்கேன் பட் அது நாள் ஆய்ட்டதால ப்ளாக்டீ குடிக்கலாம் இனீன்னு முடிவெடுத்து ரெண்டு பேரும் ரொம்ப சிரமப்பட்டு குடிச்சோம். அதுல சுகரும் லெமனும் சேக்கக்கூடாதுன்னு வேற போட்ருந்ததால அதையும் போடல. குடிக்கமுடியாம சுகர்ப்ரீ கலந்துட்டோம். அப்படியும் முடியலை. அவங்க வெற்றிகரமா ஒரே நாளோட நிறுத்திக்கிட்டாங்க. நான் தான் வீம்புக்கு குடிக்க குடிக்க பழகிரும்னு மூனாவது நாளா குடிச்சேன். யப்பா சாமி ஒரே தலைசுத்தல். டாட்டர்ட்ட போகவும் பழக்கம் இல்லாம புதுசா எதையும் ட்ரை பன்னாதீங்கன்னு ப்ளாக்டீக்கு ஆப்பு வெச்சுட்டாங்க. நான் தான் சரியா போடலையா இல்லை எனக்கு ஒத்துக்கலையான்னு தெரியலை. இதைப்படிக்கர யாராவது அதை எப்படி சரியா போடனும்னும் நல்லதா கெட்டதான்னும் சொல்லுங்கப்பா.................... :-(

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.. கிரீன் டீ கான்செர்சரை தடுக்கும் என்று எதிலோ படித்தேன், அன்றில் இருந்து கிரீன் டீ வாங்கி குடிக்க வேண்டும் என்று ஒரே ஆவல்... இன்னும் வாங்க வில்லை.. நல்ல வேலை இந்த இழை கண்ணில் பட்டது... என் உடலுக்கு கண்டிப்பாக இந்த கிரீன் டீ ஒத்துக்கொள்ளாது என்பதை உங்கள் அனுபவத்தை படித்ததும் புரிந்துவிட்டது...

தோழிகளே உஷார் - இப்படி எதையும் முதல் முறை ட்ரை செய்யும் முன் அனுபவம் உள்ளவரிடம் ஆலோசனை பெறவும்...

ஆரோக்கியம் வேண்டும் என்று வந்தபின் கசப்பு இனிப்பு எலாம் பார்க்க கூடாது,மனிதனுக்கு இறைவன் அளித்த அருமையான ஆரோக்கிய உணவு களில் ஒன்று கிரீன் டீ. நான் தினமும் மூன்று முறை பருகி வருகின்றேன் முதலில் கசப்பாக இருந்தது இருந்தாலும் இதன் நன்மைகளை தெரிந்து கொண்டபின் கசப்பை சகித்து கொண்டு சில நாள் குடித்தேன் பின்னர் அதுவே எனக்கு பிடித்த மான தாக மாறிவிட்டது.சுகர்,தேன் எதுவும் சேர்க்காமல் வெந்நீரில் க்ரீன் டீ இலைகளை மட்டும் சேர்த்து பருகிவருகின்றேன்.புத்துணர்ச்சியாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்கின்றது காபி,பால்,மற்ற டீ வகைராக்களுக்கு விடை கொடுத்து விட்டேன்.

hi,

i had green tea around one month but i didnt get any problem.

still i m well.

Green Tea Preparation Procedure

1. Boil one tumbler water for 2 – 3 min.
2. Remove from heat and Add ½ Teaspoon Green Tea Leaves.
3. Close the tumbler for just 2 min. (Compulsory not more than 3 min.)
4. Drink tea.

Note :
1. Don’t add Green leaves when water is in flame.
2. Green tea does not have color, taste, smell.
3. If you boil more than 5 min, tea becomes dark, bitter. It’s not good for health.
4. The same Green Leaves can be reused 3 times.

எதிர்பார்ப்பு என்று சொல்லும் போதே... ஏமாற்றம் எட்டிப்பார்கிறது.
ஏமாற்றம் மனிதனை முட்டாளுக்கும் கண்கட்டி வித்தை.

1 டம்லர் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். (2 - 3 நிமிடங்கள்)
அடுப்பை நிறுத்தவும்.
1/2 ஸ்பூன் போடவும்.
3 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
அவ்வலவுதான். குடிக்கலாம்.
குறிப்பு :
Green Tea யில் நிறம், சுவை கிடயாது. Lite green colour ல தான் இருக்கும்.
அதிக நேரம் அடுப்பில் கொதிக்க வைத்தால் தான் கசக்கும். அது உடம்புக்கு கெடுதல்.
அடுப்பை off செய்து விட்டு தான் இலைகளை போட வேண்டும்.
அதிக நேரம் தண்ணீரில் போட்டு வைத்தால் தான் Dark colour ல இருக்கும். அது உடம்புக்கு கெடுதல்.
இதையே 3 முறை பயன்படுத்தலாம்.
முதல் முறை போடுவதை பெரியவங்களுக்கு (ஸுகர், பிரசர் இருக்குறவங்க) குடுக்கலாம். 2nd, 3rd முறை போடுவதை ஸுகர், பிரசர் இல்லாதவங்க குடிக்கலாம்.

எதிர்பார்ப்பு என்று சொல்லும் போதே... ஏமாற்றம் எட்டிப்பார்கிறது.
ஏமாற்றம் மனிதனை முட்டாளுக்கும் கண்கட்டி வித்தை.

hai senya madam,
ungal kurippu ku thanks

Neraya perukku green tea kudicha nallathunu theriyum. but atahyum normal tea mathiri nenachukuvanga.
Romba naalaave enakku therinja green tea pathina information ellorukkum sollanum nu nenachukutu irunthen. but enga epdi inform panrathunu theriyama irunthuchu. inga enakku idam koduthathukku thanks.

எதிர்பார்ப்பு என்று சொல்லும் போதே... ஏமாற்றம் எட்டிப்பார்கிறது.
ஏமாற்றம் மனிதனை முட்டாளுக்கும் கண்கட்டி வித்தை.

மேலும் சில பதிவுகள்