மிஸ்டு அபார்சன்

மிஸ்டு அபார்சன் என்றால் என்ன? அதற்கான ட்ரிட்மெண்டு பற்றி கூறவும். டி அண்டு சி முறை நல்லதா? அல்லது வேறு வழி உள்ளதா? அனுபவம் உள்ளவற்கள் கூறவும்.

A abortion is the medical term for the end of a pregnancy whether it is natural as in a miscarriage or medically / surgically induced. For a missed abortion sometimes the egg is fertilised and the resulting embryo implants but then dies or fails to develope for somereason .you have no cramps or bleeding but the symptoms of pregancy go away. you no longer have a live pregancy,but you have not actually miscarried.eventually you will miscarry ,buy in the meantime you have non-living tissue inside and this may become infected.so you may be offered a D & C. source :for more details go to search in google wiki answers .com .i have no experience with regards g.gomathi.

இயற்கையான முறையில் கரு கலைவது தான் மிஸ்டு அபார்சன்.சரியான வளர்ச்சி இல்லாத போது மருத்துவரும் அபார்சன் செய்வதை பரிந்துரைப்பார்கள். கலைந்த கரு முழுமையாக வெளியேற வேண்டும்.இல்லாவிடில் உடல் நலம் மிகவும் பாதிக்கும்.

கருப்பையில் இருக்கும் இறந்த திசுகளை முழுமையாக வெளியேற்றி கருபையை சுத்தம் செய்யும் ஒரு முறை தான் டி & சி.
கரு உண்டான மிக ஆரம்ப நிலை என்றால் suction முறையில் சுத்தம் செய்வார்கள்.6 - 12 வாரங்கள் என்றால் டி & சி முறையில் scoop வடிவ கருவி மூலம் கருப்பையின் சுவர்களை சுத்தம் செய்வார்கள். உடல் நிலை, கர்பத்தின் தன்மை பொறுத்து எந்த முறையில் செய்வது என்பதை மருத்துவர் முடிவு செய்வார்.நல்ல அனுபவம் உள்ள மருத்துவரிடம் செல்வது நல்லது.

மயக்க மருந்து கொடுத்து தான் செய்வார்கள்.எதுவும் சாப்பிடாமல், தண்ணி கூட குடிக்காமல் வர சொல்வாங்க.டி & சி முடிந்து மயக்கம் தெளிந்ததும் ஒரு சிலருக்கு வாந்தி வர மாதிரி இருக்கும்.அது உடல் நிலை பொறுத்தது.ஹாஸ்பிடல்ல தங்க வேண்டியது இல்லை.வலி கொஞ்சம் இருக்கும்.ஒரு சில நாளில் சரியாகும்.உடலுக்கு தேவையான ஓய்வு எடுப்பது மிகவும் அவசியம்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்