தேதி: December 18, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. அன்பரசிபாலாஜி அவர்களின் குறிப்பினை பார்த்து திருமதி. ருக்சனா அவர்கள் செய்த தேங்காய் பால் சாதம் இது.
பாசுமதி அரிசி - ஒரு கப்
தேங்காய் பால் - 1 1/2 கப்
தாளிக்க:
கறிவேப்பிலை - சிறிது
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரிசியை முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

அடுப்பில் சட்டியை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளிக்கவும்.

பின் ஊற வைத்த அரிசியை போட்டு கிண்டவும்.

அடுத்து தேங்காய்பாலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விட்டு மிதமான தீயில் வேக விடவும். சாதத்தில் உள்ள பால் வற்றி மேல் சாதம் தெரியும்போது தீயை சிறிதாக்கி பேப்பரை போட்டு மூடி பதினைந்து நிமிடம் தம்மில் விடவும்.

கமகமக்கும் தேங்காய் பால் சாதம் ரெடி.

Comments
ருக்சானா.
பாக்கரக்கே சூப்பர் ஹ இருக்கு. போட்டோல ஆவி பறக்க சாப்பாடு ரெடி. தேங்காய் பால் சேத்தாலே எப்பவுமே தச்டே தூக்கும். மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
நன்றி அட்மினுக்கு..
குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..நன்றி..ருக்சானா..
வாழு, வாழவிடு..
நன்றி சுகந்தி..
பாராட்டுக்கு நன்றி சுகந்தி.. முதலில் பின்னூட்டம் தந்ததிர்க்கும் என் இனிய நன்றிகள்..ருக்சானா..
வாழு, வாழவிடு..
ருக்சானா
ருக்சானா தேங்காய் பால் சாதம் நான் வேற மாதிரி செய்வேண்டா இது வித்யாசமாக் இருக்கு செய்துட்டு சொல்றேன் மேலும் பல குறிப்புகள்தர வாழ்த்துக்கள்
ஃபாத்திமாம்மா..
ஆமாம்மா..ஊரில் அம்மா வேறு மாதிரி சின்ன வெங்காயம் .எல்லாம் போட்டு செய்வார்கள்.உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றிம்மா..
வாழு, வாழவிடு..
அருமை.
மணக்க மணக்க பார்க்கவே சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
நன்றி ஆசியாஉமர்..
உங்கள் பின்னூட்டத்திர்க்கு மிக்க நன்றி ..ஆசியாஉமர்..அன்புடன் ருக்சானா.
வாழு, வாழவிடு..
ருக்சானா
ருக்சானா,தேங்காய் பால் சாதம் சூப்பரா இருக்கும் போலிருக்கே.வாழ்த்துக்கள்.செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்,ருக்சு.
அன்புடன்
நித்திலா
ருக்சானா
நான் இந்த சாதம் செய்ததில்லை. ட்ரை பண்ணி பார்க்கிறேன். வாழ்த்துக்கள்
அன்புடன்
பவித்ரா
நித்திலா..
நன்றி நித்திலா.. செய்து பாருங்கள்..சுவையாக இருக்கும்..வாழ்த்துக்கு மீண்டும் நன்றி..
வாழு, வாழவிடு..
பவித்ரா
நன்றி பவித்ரா...ட்ரை பன்னிபாருங்கள் பிடிக்கும் உங்களுக்கு...நன்றி..
வாழு, வாழவிடு..
ருக்சனா
ருக்சனா... பொதுவாவே ஹர்ஷா குறிப்புகள் எனக்கு பிடிக்கும்... அதை நீங்க இத்தனை அழகா செய்து காட்டி இன்னும் அசத்திட்டீங்க. வாழ்த்துக்கள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி வனிதாக்கா..
நானும் ச.அ.பகுதிக்காக ஹர்க்ஷாவின் குறிப்புகள் நிறைய செய்திருக்கேன்.. எல்லாம் நல்ல சுவையுடன் இருந்தது..நன்றி அக்கா உங்கள் வாழ்த்துக்கு..மிக்க நன்றி...
வாழு, வாழவிடு..