சரியா தவறா ? பதில் சொல்லுங்கள் தோழிகளே

ஹாய் தோழிகளே, வணக்கம்

என் பெயர் துர்கா நான் மும்பையில் வசிக்கிறேன் எனக்கு திருமணம் முடிந்து 3 வருடம் ஆகிறது குழந்தை இல்லை நான் தற்போது 2 மாதமாக சிகிச்சை எடுத்து வருகிறேன் (அக்டோபர் மாதம் முதல்) எனக்கு முன்று மாதம் vitamin tablet எடுக்க சொன்னார் மற்றும் பிரியட் வந்து 3 வது நாளில் இருந்து இந்த tablet Letrozole Tablets USP (Letoval)5 நாள் சாப்பிட சொன்னார் 5வது நாள் சிகிச்சைக்கு வர சொன்னார் scan எடுத்து கருமுட்டை எவ்வளவு வளர்ந்து இருக்கிறது பார்க்க போவதாக சொன்னார் September மாதம் சில காரணங்களால் 5வது நாள் போகவில்லை 10வது நாள் தான் போனேன் இப்பொழுது scan எடுத்து பலனில்லை அடுத்த மாதம் (November)பிரியட் வந்து 3 வது நாள் சிகிச்சைக்கு வர சொன்னார் same method செய்ய சொன்னார் 5 நாள் சாப்பிட சொன்னார் 5வது நாள் சிகிச்சைக்கு வர சொன்னார் 5வது நாள் போனேன் 5வது நாளில் இருந்து 10 நாள் வரை 2 & 3 நாள் விட்டு 6 முறை scan எடுத்து எனது கருமுட்டை (11 to 12 inch)தான் வளர்ந்து இருந்தது இப்பொழுது இந்த tablet Letrozole Tablets USP (Letoval) 5நாள் தினமும் 2 சாப்பிட சொன்னார் (முதலில் 1 தான் சாப்பிட்டேன்) வரும் வியாழ்ன் கிழமை scan எடுக்க வர சொன்னார் ஏதேனும் பிரச்சனை உண்டா பதில் சொல்லுங்கள் தோழிகளே

துர்கா நீங்க உங்க வீட்டில் பெரியவர்கள் யாராவது இருந்தால் அவர்களை கேளுங்கள் அல்லது வேறு டாக்டரை கன்சல்ட் பண்னுங்கல். ஏன்னா அடிக்கடி ஸ்கேன் பன்னுவது உடலுக்கு நல்லதல்ல. atleast try 2 consult sum doctr bcoz they may say sumthng different

LIVE ND LET LIVE

பதில் அளித்தற்க்கு மிகவும் நன்றி எங்கள் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை அதுமட்டுமில்லை அந்த டாக்டர் குழந்தை பேறுக்கான Specialist எங்கள் ஏரியாவில் 2 & 3 பேர் அங்கு Treatment எடுத்து தான் சுகமாக குழந்தை பெற்று உள்ளார்கள் அதனால் தான் நானும் அங்கு Treatmentக்கு போகிறேன்

இப்படி தான் பா சொல்லுவாங்க.
டாக்டருக்கு தெரியும் எப்ப ஸ்கேன் பன்னனும் நு , சரியா தான் செய்வாங்க , தைரியமா இருங்க..
கருமுட்டை 18 mm வந்த பிறகு தான் , அது வெடிக்க மருந்து குடுபாங்க..
அந்த நேரம் கணவனோடு இருந்தால் கரு தரிக்க அதிக வாய்ப்பு இருக்கு.
கவலை கொள்ள வேண்டாம். விறைவாக கருத்தரிக்க வாழ்த்துக்கள்.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

நீங்கள் அளித்த பதில் எனக்கு மிகவும் ஆறுதல் அளித்துள்ளது மிகவும் நன்றி மிக்க நன்றி தோழி

இதற்கு கவலைப்படவேண்டாம் நானும் இதே மாத்திரை சாப்பிட்டு தான் consive ஆனேன் இப்பொழு எனக்கு 3 months boy இருக்குரான் டாக்டர் சொல்படி கேளுங்கள் நம்பிக்கையோடு இருங்கள் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்

வாழ்க வளமுடன்

தோழி ப்ரியா எனக்கு pco ப்ராப்ளம் ,dr என்ன letoval tablet first five daysku எடுக்க சொன்னார் ,பிறகு ovacare , fol 123 எடுக்க சொன்னார், நீங்க இந்த tablet எடுத்திங்களா பா,சொல்லுங்களேன் ப்ளீஸ்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

பாரதி, நான் அனிதா சுஜி, ப்ரியாவின் தோழி தான்,
ப்ரியா அவங்க பையன பாத்துக்குரதுல கொஞ்சம் பிஸி.அதுனால தான் நான் ரிப்லை பன்னுனேன். சாரி.
ப்ரியா வும் இந்த மாத்திரை தான் எடுத்துக்கிட்டாங்க பா. நல்ல ரிசல்ட் கிடச்சது. தொடர்ந்து சாப்பிடுங்க. விரைவில் கருதரிக்க வாழ்த்துக்கள்

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மிக்க மிக்க நன்றி அனிதா சுஜி,

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

தோழி அவர்களுக்கு வாழ்த்துகள் உங்கள் குழந்தை (தம்பி பாப்பா) எப்படி உள்ளான் எனக்கு தம்பி பாப்பா பார்க்கனும் போல் உள்ளது அவனை பத்திரமாக பார்த்து கொள்ளவும் உங்கள் பதிலை பார்த்து எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது என்னுடைய கவலை போய்விட்டது மிகந்த நன்றி தோழி அவர்களுக்கு

மேலும் சில பதிவுகள்