கருதரித்தவர்கள் எப்படி படுக்க வேண்டும்?

ஹாய் தோழிகளே
கருதரித்த பின் எப்படி படுக்க வேண்டும்? எந்த மாதத்தில் இருந்து பக்கவாட்டில் படுக்க வேண்டும் என்க்கு பொதுவாக நேராக படுத்துதான் பழக்கம்.தெரிந்தவர்கள் யாராவது கூறுங்கள்

டாக்டர் கன்ஃபார்ம் செய்தவுடனே பக்கவாட்டில் படுத்தல் நலம். நேராக படுப்பதை விட ஒருக்களித்து படுத்தால் கருவில் நல்ல space கிடைக்கும். இன்னும் குழந்தை வளர வளர ஒருக்களித்து மட்டுமே படுக்கவேண்டும்.mostly குழந்தைகள் இரவில் விழித்து விளையாடுவதும் பகலில் தூங்குவதும் இதனால் தான். இரவில் நாம் தூங்கும்போது குழந்தை கருவில் நிறைய space இருப்பதால் active a இருக்கும்.

ஹாய் ரம்யா உங்க பதில் எனக்கு ரொம்ப உபயோகமாக இருக்கிறது,ரொம்ப நன்றி மேலும் விவரங்கள் தெரிந்தால் கூறவும்

இடது புறம் ஒருக்களித்து படுக்கனும் பா.ஆனா எல்லா நேரமும் அப்படியே படுக்க முடியாது, கொஞ்ச நேரம் மாத்தி மாத்தி தான் படுப்ப முடியும், ஆனாலும் இடது புறம் ஒருக்களித்து படுப்பது தான் குழந்தைக்கு நல்லது.
முன்னாடி கமெண்ட் தப்பா டைப் பன்னிட்டேன் சாரி

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

ஆமாம் அனிதா சொல்வது சரிதான். டாக்டர்கள் left side தான் திரும்பி படுக்க சொல்வார்கள். மறுபுறம் திரும்பி படுக்க வேண்டும் என்றால் அப்படியே திரும்பி படுக்க கூடாது, எழுந்து உட்கார்ந்து பிறகு தான் திரும்பி படுக்க வேண்டும். குழந்தைக்கு கொடி சுத்திக்கொள்ளும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது உண்மை தான்

தோழீஸ் எனக்கும் உங்கள் ஆலோசனை வேண்டும். எத்தனையாவது மாதத்தில் இருந்து எழுந்து உட்கார்ந்து படுக்க வேண்டும். எனக்கு இப்போது 4வது மாதம். நான் இதுவரை அப்படியே தான் திரும்பி படுகிறேன். இது தவறா. நான் எழுந்து அப்புரம் திரும்பி படுக்க வேண்டுமா. எந்த மாததில் இருந்து நான் எழுந்து உட்கார்ந்து படுக்க வேண்டும். ப்ளீஸ் உங்கள் ஆலோசனை தேவை.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா 4ம் மாததில்லிருந்து தான் எழுந்து உட்கார்ந்து திரும்பி படுக்கவேண்டும்.

வாழு இல்லை வாழவிடு

ஹாய் சுமி மேடம் ரொம்ப நன்றி. எனக்கு எழுந்து உட்கார்ந்து மருபடி தூக்கம் வராது. அதான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று இருந்தேன். அது தவறு என்று புரிந்து கொண்டேன். கட்டாயம் இந்த மாதத்தில் இருந்து எழுந்து உட்கார்ந்து தான் தூங்க வேண்டும்மா. :( :( :(

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா இப்பதிலிருந்து பழகிட்டா அது பழக்கத்திற்க்கு வரும் நீங்க கொஞ்சம் கொஞ்சம் பழக்கத்திற்க்கு கொண்டுவாங்க. வேணும் என்றால் காலையில் சிரிது நேரம் தூங்கி கொளவும்.

வாழு இல்லை வாழவிடு

ஹாய் தோழிகளே இது என்னுடைய 2வது கர்ப்பம்,எனக்கு முதல் தடவை கர்பத்தின்போது,7 மாதம் வரை வாந்தி இருந்தது,என்ன சாப்பிட்டாலும் வாந்தி வரும்,தொண்டை எல்லாம் புண்ணாகி இருந்தது.இப்பொழுது எனக்கு 2வது கர்ப்பம் தரித்து 38 நாட்கள் ஆகிறது,வாந்தி வருவது போல் உள்ளது.
வாந்தி வருவதை தடுக்க ஏதாவது வழி உள்ளதா?அல்லது ஈஸியாக வாந்தி எடுப்பது போல் உணவு வகைகள் என்ன என்ன சாப்பிடலாம்,அதாவது திட உணவு அல்லாமல் திரவமாக சாப்பிடக்கூடிய உணவு வகைகள் இருந்தால் கூறுங்களேன்.

பின்குறிப்பு:
சோனியா நானும் பஹ்ரைன் தான் உங்க மெயில் ஐடி குடுக்க முடியுமா நாம் பேசிகொள்ளலாம்

மஞ்சு எனக்கு மூன்று பசங்களுக்கும், 6மாதம் வரை வாந்தி எடுத்தேன், என் அத்தை பொண்ணு 9மாசம்வரை வாந்தி எடுத்துக்கொண்டேதான் இருந்தது.

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்